முற்றும் துறந்த முனிவர்கள்!
நியூ
டெல்லி: பாபா ராம்தேவ் மற்றும் ஸ்ரீ ஸ்ரீ ரவி ஷங்கர் ஆகியோர்கள் துறவி
அல்ல, நல்ல விற்பனையாளர்கள் இவர்கள் இருவரும் சாமியார்கள் என்று சொல்லி
மக்களை ஏமாற்றி காசு பார்கின்றனர்.
இவர்கள் காவி உடை அணிந்த நல்ல
வியாபாரிகள். பாடஞ்சலி யோக் பல்கலைகழகம் மற்றும் திவ்ய யோக் பார்மசியை
நடத்தி சுவாமி ராம்தேவ் கோடி,கோடியாக சம்பாதிக்கிறார். ஸ்ரீ ஸ்ரீ ரவி
சங்கர் ஆர்ட் ஆஃப் லிவிங் பௌண்டேசன் என்பதை நடத்தி அதன் மூலம் சிறந்த
வியாபாரம் செய்து கோடிஸ்வரராக விளங்குகிறார்.
மேலும் வரி ஏய்ப்பு மற்றும் பண
மோசடியில் சிக்கி இருக்கும் பாபா ராம்தேவ் உத்திரகாண்டில் தனது ஆசிரமத்தை
நடத்தி வருகிறார். இவர் சமீபகாலமாக ஆர்.எஸ்.எஸ். பயங்கரவாத இயக்கத்தோடு
சேர்ந்து ஊழலுக்கு எதிரான உண்ணாவிரதம் நடத்தி வந்தார் என்பது குறிப்பிட
தக்கது.
ஊழலுக்கு எதிராக உண்ணாவிரதம்
நடத்தி தன்னை தூய்மையானவராக காட்டி கொள்ளும் பாபா ராம்தேவ் தனது ஆசிரமம்
நடக்கும் உத்திரகாண்டில் ஏன் அதை நடத்தவில்லை. அங்கு இவர் அப்படி பட்ட ஒரு
போராட்டத்தை நடத்தினால் இவரது சுயரூபம் வெளியே வந்து விடும் என்ற பயமே
அதற்க்கு காரணம்.
அதுபோல் கர்நாடகாவில் ஆசிரமத்தை
நடத்தி வரும் ஸ்ரீ ஸ்ரீ ரவி ஷங்கர் ஏன் அங்கு ஊழலுக்கு எதிராக குரல்
எழுப்பவில்லை, ஏன் என்றால் கர்நாடகாவை ஆள்வது தங்களது ஹிந்துத்துவாவாதிகள்
என்பதே. ஊழலுக்கு எதிரான போராட்டம் என்பது முதலில் தங்கள் சொந்த
மாநிலத்தில் இருந்து தொடங்கட்டும். இதுபோல் சாமியார்களை நம்பி மக்கள்
மோசம் போவதை விட்டு விழிப்புணர்வு கொள்ள வேண்டும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக