பொய் பேசினால் இப்படியும் கண்டுபிடிக்கிறார்கள்!

கிராமங்களில் உள்ள வழக்கம் நினைவுக்கு வருகிறது.ஏதாவது திருடு போய்விட்டால்
சந்தேகப்படும் ஆட்கள் அனைவரையும் அழைத்துவந்து கோவில் முன்பு நிற்க
வைப்பார்கள்.அவர்களது வாயில் மாவு திணிக்கப்படும்.அநேகமாக ராகி மாவு.அதை
மெல்ல வேண்டும்.யாருடைய வாயில் மாவு உமிழ்நீருடன் கலந்து கெட்டியாகவில்லையோ
அவர்தான் குற்றவாளி.இதில் முக்கியமான விஷயம் இருக்கிறது.அதை பிறகு
பார்க்கலாம்.
ஓரிரு வருடங்களுக்கு முன்பு காவல்துறை தொடர்புடைய வழக்கில் “நார்கோ
அனாலிஸிஸ் “ என்ற வார்த்தை அடிக்கடி நாளிதழ்களில் அடிபட்ட்து
நினைவிருக்கலாம்.சோடியம் பெண்ட்தால் அல்லது சோடியம் அமித்தால் ஆகிய
மருந்துகளை பயன்படுத்தி உண்மையை கண்டறியும் முறை இது.கிட்ட்த்தட்ட
அரைத்தூக்க நிலையில் ஒருவர் எல்லா கேள்விகளுக்கும் பதில் சொல்லிவிடுவார்
என்கிறார்கள்.

குற்றம் புரிந்தவர் அந்த முக்கியமான கேள்விக்கு பதில் அளிக்கும்போது அவர்
குற்றவாளி என்றால் உடலில் வேதிமாற்றம் உண்டாகும்.இதுதான் அடிப்படை.இவை தவிர
மூளையை படம் எடுத்து பார்க்கும் BEOS (Brain Electrical Oscillaations Signature) முறை,மூளையில் பதிந்திருக்கும் தகவல்களை அடிப்படையாக்க்கொண்டு “பிரைன் மேப்பிங் முறை”போன்றவையும் உண்டு.

மேற்கண்ட உண்மை கண்டறியும் பரிசோதனையில் உள்ள பொது விஷயங்களை மட்டும்
எடுத்துக்கொள்வோம்.கிராமத்தில் நடக்கும் முறையை கவனியுங்கள்.குற்றம்
புரிந்தவருக்கு மாவு அப்படியே இருக்கும் என்று எதைவைத்து சொல்கிறார்கள்?
தவறு செய்தவருக்கு பயத்திலும்,படபடப்பிலும் உமிழ்நீர் சுரக்காது.உமிழ்நீர்
இல்லாவிட்டால் மாவு அப்படியே இருக்கும்.
புலனாய்வு அமைப்புகளின் உண்மை கண்டறியும் சோதனையிலும் பொதுவான விஷயம்.நாம்
பொய் சொல்லும்போது,தவறை மறைக்கும்போது நமது உடலில் வேதிமாற்றம் நிகழ்கிறது
என்பதுதான்.உடல்மொழி கைவரப்பெற்றவர்கள் கூட பொய்யை
கண்டுபிடித்துவிடுவார்கள்.நமது உடல் உறுப்புகளும் சில மாற்றங்களுக்கு
உள்ளாகிறது
valipoacan
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக