ஐ-பாட் அதிசயங்கள் மற்றும் அதன் பயன்கள் !
அலுவலகம் செல்ல அதிக நேரம் எடுத்துக் கொள் வோர், கல்லூரியில் பயிலும் பெண்கள், அடுத்தவர் தொண தொணப்பிலிருந்து தப்பிக்க வழி தேடுபவர்கள் யாவரும் ஐ–பாட் ஒன்றை கையிலும் அதன் ஹெட்செட்டை காதுகளிலும் வைத்துக் கொண்டு இசையை ரசிப்பதைப் பார்க்கலாம். ஐ–பாட் இயக்கம் குறித்தும் அந்த சாதனத்தைக் கையாள்வது குறித்தும் சில டிப்ஸ்களை இங்கு காணலாம்.
1. அனைவரும் எதிர்நோக்கும் பிரச்னை பேட்டரி பவர். தொடர்ந்து பாடல்களைக் கேட்டு வந்தால் பேட்டரி பவர் குறைந்துவிடும். நம்மை அறியாமல் இசையை ரசிக்கும் நிலையில் அதனை உணர்வதில்லை. இதில் என்ன பிரச்னை என்றால் இப்போது வருகின்ற ஐ–பாட்களை கம்ப்யூட்டரில் யு.எஸ்.பி. போர்ட்டில் இணைத்துத்தான் சார்ஜ் செய்திட முடியும். பொதுவாக பேட்டரியை முழுமையாகச் சார்ஜ் செய்தால் எப்படியும் 12 அல்லது 14 மணி நேரம் வரை இயங்கும். நாம் சரியாக சார்ஜ் செய்யாததாலும் அல்லது முழுமையான சார்ஜ் இல்லாததனாலும் ஐ–பாட் இயங்காத நிலை ஏற்படுகிறது. இதிலிருந்து ஓரளவிற்குத் தப்பிக்க வழி உள்ளது.
நீங்கள் ஐ–பாடினைப் பயன்படுத்தாத நேரத்தில் ஹோல்ட் பட்டனை லாக்டு நிலையில் வைக்கவும். நமக்குத் தெரியாமல் அந்த பட்டன் விடுபடும் சூழ்நிலையை இது தடுக்கும். அவ்வாறு லாக் செய்யாத நிலையில் நாம் அறியாமலேயே பட்டன் இயங்கி ஐ–பாட் இயங்கத் தொடங்கி தானாக ஒவ்வொரு பாடலாகப் பாடும். நாம் ஹெட்செட் மாட்டாமல் இருந்தால் இது தெரியாது. பேட்டரியின் பவர் நெல்லு மூட்டையில் ஓட்டை வழியே நெல் சிந்துவது போல குறைந்து கொண்டு இருக்கும்.
2. உங்கள் ஐ–பாட் சாதனத்தை அலாரம் கடிகாரமாகப் பயன்படுத்தலாம் என்பது உங்களுக்குத் தெரியுமா? ஐ–பாடின் மெயின் மெனு செல்லவும். அதில் Extras என்பதைத் தேர்ந்தெடுக்கவும். அதன்பின் Clock என்ற பிரிவைத் தேர்ந்தெடுத்து அதில் வரும் பிரிவுகளில் Alarm Clock என்பதனை செலக்ட் செய்திடவும். பின் Alarm என்ற பிரிவு உங்களுக்குக் கிடைக்கும். இதனை ஆன் செய்து எந்த நேரத்தில் அலாரம் உங்களுக்கு அடிக்க வேண்டுமோ அந்த நேரத்தினை செட் செய்திடலாம். இதில் உங்களுக்குப் பிடித்தமான இசையொலியைக் கூட செட் செய்திடலாம். அல்லது நீங்கள் அடிக்கடி கேட்க விரும்பும் பாடல்கள் அடங்கிய பட்டியலைக் கூட செட் செய்திடலாம். குறிப்பிட்ட நேரத்தில் வரிசையாகப் பாடல்கள் ஒலிக்கும். இதற்கு நீங்கள் ஐ–பாட் சாதனைத்தை ஏதேனும் ஸ்பீக்கரில் இணைத்திருக்க வேண்டும்.
3. உங்கள் ஐ–பாட் மூலம் உங்களுக்கு வந்திருக்கும் இமெயில்களைப் பார்வையிடலாம். எப்படி? இதற்கான புரோகிராமினை உங்கள் கம்ப்யூட்டரில் பதிந்திருக்க வேண்டும். இதனை கூகுள் மூலம் கண்டறிந்து பதியவும். http://kdeep.com/kpod.htm என்னும் தளத்தில் கிடைக்கிறது. ஐ–பாட் சாதனத்தை உங்கள் இமெயில் கிளையண்ட் புரோகிராமுடன் சிங்கரனைஸ் செய்திருக்க வேண்டும். பின் kpod புரோகிராமினை இயக்கி உங்கள் ஐ–பாடில் இமெயில்களைக் காணலாம்.
4. உங்களுக்குப் பிடித்த பாடல்களை மட்டும் தேர்ந்தெடுத்து வேகமாக பிளே லிஸ்ட் தயார் செய்திட வேண்டும் எனில் OntheGo என்னும் ஐ–பாடில் உள்ள வசதியினைப் பயன்படுத்தலாம். இதற்கு பெர்சனல் கம்ப்யூட்டர் எல்லாம் தேவையில்லை. விரும்பும் பாடலைத் தேர்ந்தெடுத்து சிறிது நேரம் Select பட்டனை அழுத்தியபடி இருந்தால் போதும். தேர்ந்தெடுத்த பாடல் ஐ–பாட் திரையில் மின்னத் தொடங்கும் வரை அழுத்த வேண்டும். இப்படியே விரும்பும் பாடல் அனைத்தையும் தேர்ந்தெடுத்து பிளே லிஸ்ட்டினை விரைவாகத் தயாரிக்கலாம்.
5. காலையில் தினசரி செய்தித்தாள் படிக்க முடியவில்லையா? நேரம் இல்லையா? உங்கள் ஐ–பாட் மூலமும் படிக்கலாம். iPodulator என்னும் புரோகிராம் இதற்கு உதவுகிறது. இந்த புரோகிராம் இணையத்தில் கிடைக்கும் செய்தித்தாள் தகவலை ஐ–பாடில் படிக்கும் வகையில் மாற்றுகிறது. முதலில் ஐ பாடுலேட்டர் புரோகிராமினை இயக்கவும். நீங்கள் விரும்பும் வெப் தளத்தின் முகவரியினை தந்து பெறவும். இந்த தளம் தரும் தகவல்களைப் பெற்றவுடன் iPodulator ல் iPodinate பட்டனை அழுத்தவும். தகவல்கள் அனைத்தும் பைலாக சேமிக்கப்படும். பின் சேமித்த பைலை ஐ–பாடிற்கு மாற்றி பின்னர் தேவைப்படும் போது படிக்கலாம்
நன்றி : azhkadalkalangiyam
வழிபோக்கன்
Pak job Ads and advertisements for Karachi,Lahore,Quetta,Peshawar,Multan,Hyderabad,Rawalpindi,Islamabad and http://allpkjobz.blogspot.com all cities of Pakistan.
பதிலளிநீக்கு