வியாழன், நவம்பர் 24, 2011


ஆயிரம் கிலோ நிறையுடைய உலகின் மிகப் பெரிய தங்க நாணயம்!

Font size:
ஆயிரம் கிலோ நிறையுடைய உலகின் மிகப் பெரிய தங்க நாணயம்! 1000 கிலோ நிறையுடைய உலகின் மிகப் பெரிய தங்க நாணயம் உருவாக்கப்பட்டுள்ளது. இதற்கு முன்னர் உலகின் பல நாடுகளில் உருவாக்கப்பட்ட நாணயங்களை விட இது பல மடங்கு பெரிதானது என தகவல்கள் தெரிவிக்கின்றன. அவுஸ்திரேலியாவின் பேர்த் பிரதேசத்தில் எடுக்கப்பட்ட 99.99 வீதம் தூய தங்கத்தில் இருந்து இந் நாணயம் செய்யப்பட்டது. இதன் பெறுமதி 35மிலியன் பவுண்கள் என மதிக்கப்பட்டுள்ளது.
இது பிரித்தானியா மகாராணியின் அவுஸ்திரேலியா விஜயத்தின் ஞாபகார்த்த சின்னமாக உருவாக்கப்பட்டிருக்கிறது. இதன் ஒரு முகப்பில் மகாராணியின் சிரசு உருவமும், மறுபக்கத்தில் அவுஸ்திரேலியாவின் தேசிய மிருகமான கங்காருவின் உருவம் அமையுமாறு பதிக்கப்பட்டிருக்கிறது. இந்த தங்க நாணயத்தை உருவாக்குவதற்கு 18 மாதங்கள் எடுத்தாக தெரிவிக்கப்படுகிறது. இதன் பெறுமதி அதிகமாக இருந்த போதிலும் சட்டப்படி இதனை கொள்வனவு செய்தவர் 65,000 பவுண்கள் விலை மதித்துள்ளார். இதனை சட்டப்படி தங்கக் குச்சிகளாக்க முடியாது. இதனை ஒரு சின்னமாக வைத்திருக்க வேண்டும் என தெரிவிக்கப்படுகிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக