ஞாயிறு, நவம்பர் 20, 2011

மருந்தாகும் மாதுளை




முத்து முத்தாய் கண்கைளைப் பளிச்சிட வைக்கிறது அந்த அரும் பெறும் மருத்துவக் குணம்மிக்க மாதுளை…
இவை மூன்று ரகங்களில் காணப்படுகிறது.இனிப்பு புளிப்பு துவர்ப்பு என்பனவே அவை…மாதுளங்கனியின் ஒவ்வொரு சுவையும் வெவ்வேறு நோய்களை குணமாக்க வல்லது
இதன் தனிச்சிறப்பு என்னவென்றால் ஒவ்வொரு பாகமும் பயன் தரக்கூடியதே....மரத்தின் பட்டை...வேர்...பழம்...பூ..சாறு...மொட்டு...பிஞ்சு..இப்படிப்பல.எனக்குத் தெரிந்தவகையில் இதன் மருத்துவக்குணங்கள்...

மருத்துவக்குணம்…
  • நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்…
  • மாதுளை சாற்றிலிருந்து உருவாக்கப்படும் பாகு கர்ப்ப காலப் பெண்களின் வாந்தி…மசக்கை யை குணப்படுத்துகிறது…
  • கர்ப்பப்பைக்கு வலுவூட்டுகிறது

     இவர்களுக்கு மாதிதிரமன்றி…
  •  …ஹீமோகுலோபின் அளவை அதிகரிக்கிறது
  •  குருதியை விருத்தியடியச்செய்கிறது.குருதியை சுத்திகரிக்கறது
  • உடல் சூட்டினைத்தவிர்க்கிறது…
  • வரட்டிருமல்…மலச்சிக்கல்…தலைச்சூடு…விக்கல்..காதடைப்பு….கண்ணெரிச்சல்…போன்ற நோய்களை தீர்க்க வல்லது
  • இருதய நரம்புகளை இருக்கம் ஏற்படால் பாதுகாக்கிறது.
  • மாதுளை விதை -காசநோய் நீர்ச்சுருக்குகளை நீக்குகிறது.
  • பூவின் சாறு-ஆசனக்கடுப்பு…வயிற்றுக் கடுப்பு…கட்டுப்படுத்துகிறது…
  • தோல்-சீத பேதி இரத்தபேதியைக் குறைக்கிறது…
  • மரப்பட்டை..வேர்ப்பட்டை-வயிற்றில் உள்ள தட்டைப் பூச்சிகளை நீக்கும்…


விட்டமின் A E C B2 உண்டு…கந்தகம் மக்னீசியம்..ஃபோலிக் எஸிட் …நார்ச்சத்து……புரதம்..இரும்புத்தாது..பொசுபரஸ்… போன்ற சத்துக்களையும் குணங்களையும் தமக்குள் அடக்கிவைக்கும் இந்த அருங்கனி உடலின் மினுமினுப்பை தக்கவைத்துக்கொள்ள உதவும்.உடற் சுருக்கங்களை தவிர்க்கறதாம்…
வயதான தோற்றத்தை குறைக்கிறதாம்...
மருத்துவக் குறிப்புகள்தான் இவற்றைப் பறைசாட்டுகிறது
 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக