ஞாயிறு, நவம்பர் 27, 2011

வாய் துர்நாற்றம் ஏன் ஏற்படுகிறது

 
நாம் எல்லோரும் முகத்தை சுத்தமாக்குவது , குளிப்பது என்று மட்டுமே இருப்பதுண்டு . முக அழகுக்கு கொடுக்கும் முக்கியம் வேறொரு அங்கங்களுக்கும் கொடுப்பதில்லை . அது தான் உண்மை . ஒருவருடன் பேசும்போது நாம் எமது வாயை திறந்து தானே பேசுகிறோம் . இப்போது அந்த வாய் சுத்தமாக இருக்க வேண்டும் . அது எமக்கும் நல்லது, மற்றையவர்களுக்கும் நல்லது .

http://onlyhealth.files.wordpress.com/2009/12/teeth-main_full22.jpg

 
வாய்துர்நாற்றம் வீசும் போது நாம் பேசுவதை அருகில் நின்று கேட்பவருக்கு அசொவ்கரியமாக இருக்கும் அல்லவா ? எத்தனை வகை உணவுகளை உண்ணுகிறோம் . வாய்க்குள் எவ்வளவு மாப்பொருட்கள் தங்கி நிக்கும் . சரி இந்தா வாய் துர்நாற்றம் வீசுவதட்க்கான காரணம் நாம் உண்ணும் சில உணவு பொருட்கள் காரணமாகவும் , மதுபானம் , புகை பிடித்தல் போன்றவற்றாலும் , சிலவகை மருந்து பொருட்கள் காரணமாகவும் , நாக்கின் மீது காணப்படும் நுண்ணுயிர் படிவுகளாலும், முரசு நோய்களாலும் , உமிழ்நீர் சுரப்பு நோய்களாலும் , பல், முரசு , நாக்கிட்கிடையில் உணவுத்துணிக்கைகள் படிவதாலும் இந்த வாய் துர்நாற்றம் வீசுகிறது .
http://www.mcgill.ca/files/news/0609-insights-open.jpg
அலுவலகங்களில் வேலை செய்பவர்கள் , ஆசிரியர்கள், மாணவர்கள் , என எல்லோரும் கடைப்பிடிக்க வேண்டிய எல்லாம் என்னவெனில் வாய்துர்நாற்றம் வீசாமல் பார்த்து கொள்ள வேண்டும் . அன்றாடம் முக்கிய நபர்களுடன் பேசும் போது உங்கள் முக அழகு மட்டும் அழகல்ல , நீங்கள் பேசும் சொற்களும் , உங்களது வாயில் இருந்து வரும் தோணி பேச்சும் தான் . அந்த வாயை திறந்து பேசும் போது சுத்தமான காற்று வருவது போல இருக்க வேண்டுமே தவிர துர் நாற்றம் வீசும்படி இருத்தல் கூடாது .
http://rutgersday.files.wordpress.com/2010/03/mouth_open.jpg
இந்த வாய் துர்நாற்றத்தை எப்படி கட்டுப்படுத்தலாம் என்று பார்த்தோமானால் நாளொன்றுக்கு இரண்டு தடவைகள் புளோரைட் கொண்ட பற்பசையினால் பல் துலக்க வேண்டும் . சாப்பிட்டவுடன் வாயை நன்கு துப்பரவாக்கி வாய் கொப்பிளிக்க வேண்டும் . நாக்கை இடைக்கிடை துப்பரவு செய்ய வேண்டும் .
http://business.nikkeibp.co.jp/article/eng/20091221/211811/ph01.jpg
பல் கட்டி இருப்பவர்கள் ஆயின் இரவு அந்த பற்களை கழற்றி தண்ணீருக்குள் போட்டு மறுநாள் காலை அதனை துப்பரவு செய்து  உபயோகிக்க  வேண்டும் . தொடர்ச்சியாக இனிப்புகளை பாவிப்பதை குறைக்க வேண்டும் . பற்சூத்தை இனிப்புகள் கூடுதலாக உண்பதால் தான் ஏற்படுகிறது .  இவ்வாறு இவற்றை பயன்படுத்துவதன் மூலம் வாய்துர்நாற்றத்தினை கட்டுப்படுத்தலாம் . வாய்துர்நாற்றம் இருப்பவர்கள் இந்த விடயங்களை கடைப்பிடித்து வந்தால் நீங்கள் இந்த வாய்துர்நாற்றத்தில் இருந்து விடுபடலாம் .
http://www.pickfords.co.uk/getimage.aspx.ID-144553.gif
நாம் சுத்தமாக இருந்தால் மட்டும் போதாது . மற்றையவர்களும் சுத்தமாகவும் , சுகமாகவும் , ஆரோக்கியமாகவும் இருப்பது தான் முக்கியம் . 

நன்றி : http://pavithulikal.blogspot.com 

valipoacan

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக