வியாழன், நவம்பர் 24, 2011


ஆங்கிலத்தில் சுலபமாக தட்டச்சு செய்ய


எளிதாக தட்டச்சு செய்ய -டைப் ரைட்டிங் கற்று கொள் என்று சொன்னால் பசங்கள் கேட்கமாட்டார்கள். ஆனால் விளையாட சொன்னால் நாள்முழுவதும் விளையாடிகொண்டே இருப்பார்கள். விளையாட்டுடன் தட்டச்சும் பழகினால் விளையாட்டுக்கு விளையாட்டும் ஆச்சு...டைப்ரைட்டிங்கும் கற்றுகொண்டது போல் ஆச்சு...இந்த சாப்ட்வேரில் எளிய முறையில் தட்டச்சு சொல்லி தருகின்றார்கள்.4 எம்.பி. கொள்ளளவு கொண்ட இதனை பதிவிறக்கம் செய்ய இங்கு கிளிக் செய்யவும்.உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்.
முதலில சுலபமானதையே தேர்வு செய்துகொள்ளுங்கள். இதில் ஒவ்வொரு எழுத்தாக மீன் உருவத்தில் மேலே இருந்து கீழே வரும். நீங்கள் கீ போர்டில் கையை சரியான பொஷிசனில் வைத்துக்கொண்டு வரும் எழுத்துக்கு ஏற்ப கீ போட்டில் தட்டச்சு செய்யவேண்டும். சரியாக தட்டச்சு செய்தால் பென்குயின் அந்த எழுத்துடைய மீனை சாப்பிட்டுவிடும். தவறாக இருந்தால் மீன் கீழே விழுந்துவிடும்.கீழே உள்ள விண்டோவினை பாருங்கள்.
தட்டச்சு செய்வதின் அடுத்த லெவல் இது. இதில் எழுத்துக்கு பதில் சின்ன சின்ன வார்த்தைகளாக வரும் .வார்ததைகளை சரியாக தட்டச்சு செய்யவேண்டும்.
இறுதி நிலை இது. இதிலும நீஙகள் வார்த்தைகளை சரியாக தட்டச்சு செய்யவேணடும்.
ஆரம்பத்தில் சுலபமானதை தேர்வு செய்துகொண்டு பிறகு படிப்படியாக கடினமானதற்கு செல்லுங்கள். இதை நான்கு நாட்கள் நீங்கள் பழகினால் ஆங்கில் தட்டச்சு உங்களுக்கு சுலபமாகிவிடும். பயன்படுத்திப்பாருங்கள்.
கருத்துக்களை கூறுங்கள்.
நன்றி : வேலன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக