ஞாயிறு, நவம்பர் 27, 2011

 

  நெல்லிக்காய்..

https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEieAmI6OSw6n5nPAaEgZr3hyphenhyphenKMbhqCItGK_PoVp9R6mk6QI9Y9tTe8rrPbcgWj0fzPXNs1JaomsRCj7pLBL1RFJnmaDI5NxfjA7YFGKM3mW9cgIySHFRzvN4L_2ac_ra_mHiY1hdtTbrU4c/s320/Fresh-Amla-Big.gif
எனக்கு மிகவும் நெல்லிக்காய் பிடிக்கும் . எல்லோரும் விரும்பி சாப்பிடுவார்கள் . நெல்லிக்காயில் பல அதிசய குணங்கள்  உண்டு . நெல்லிக்காய் நம் உடலில் தோன்றும் நஞ்சுகளை வெளியேற்றி இளமையாக இருக்க வழி செய்கிறது. உடல் திசுக்களுக்கு  புத்துணர்ச்சியளித்து உடல் செல்கள் நன்கு செயல்பட உதவி புரிகிறது.


https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgxLb3MxcqGg6guYAEic3GVKWoyrXpWdDWaJGdnBVFuJBWGSh0P3FVAFUai-iFJcEDFwdhJs_BMsRMMbCgjmvxpR9e2rwTpxC_uVUwU-7JbiAG0o1eyfy7Hj2lbZJI9NU73Unm6P5z5zbPK/s320/nelli+kai+bowl.JPG
தமிழ் மருத்துவத்தில் நெல்லிக்காய்க்குப் முக்கியமான இடம் இருக்கிறது. நெல்லிக்காயில் விட்டமின் ‘சி’ வேறு எந்த வகை காய்கறி பழங்களிலும் இல்லாத அளவுக்கு 600 மில்லிகிராம் உள்ளது. கல்சியம் 50 மில்லிகிராம், பொஸ்பரஸ் - 20 மில்லிகிராம், இரும்புச் சத்து 1.2 மில்லிகிராம் உள்ளது. ஒரு அப்பிள் பழத்தில் உள்ளதை விட அதிக விற்றமின்களும் கனியுப்புக்களும் நெல்லிக்காயில் உள்ளது. நெல்லிக்காய் ஈரலை தூண்டி, நன்கு செயல்பட வைத்து கழிவுகளை வெளியேற்ற உதவுகிறது. ஜீரண சக்தியை அதிகரித்து, தாதுக்களை நம் உடல் ஏற்றுக் கொள்ள துணை புரிகிறது.
https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhDF8Z7y6u6ywz_IA2IwIaj92RIgguj7tqzMJWkFKrlVI9aidAlaBGnNUQWrbKEwyLoWVsQqxfWU8jvgMa2m4iD8BopFLDJWJVK4PK0neejxOt-FCRUaNqL44tCxlEqrxCFumpl0C5a92Hu/s400/Nellikai+Uppinkai+Vijaya-1.JPG
கண்களுக்கு தெளிவை கொடுக்கிறது. தலைமுடி உதிராமல், வளர்ந்து, நரைமுடி தோன்றுவதை தவிர்க்கிறது.
சகல வயதினருக்கும் பல வழிகளில் நிவாரணம் தரும் நெல்லிக்காய் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதுடன் மூளை வளர்ச்சிக்கும் உதவுகிறது. நெல்லிக்காய் ஜாம் உண்பதால் உங்கள் இளமை அதிகரிக்கும், நீண்ட காலம் வாழ உதவும், உடலும் குளிர்ச்சியடையும், முடி வளர்ச்சியை தூண்டும்.

நெல்லி இலைகளை நீரில் ஊறவைத்து கஷாயம் செய்து கண்களை கழுவினால் கண்நோய்கள் தீரும். நெல்லிக்காயை அரைத்து தலையில் தேய்த்து குளித்து வந்தால் கண்கள் குளிர்ச்சிபெறும். நெல்லிச்சாற்றை தேனுடன் கலந்து தினமும் காலை, மாலை அருந்திவந்தால் கண்புரை நோய், கண்பார்வைக் கோளாறுகள் நீங்கும். நெல்லிக்காய், கடுக்காய், தான்றிக்காய் மூன்றையும் திரிபாலா சூரணம் செய்து காலை மாலை வெந்நீரிலோ தேனிலோ கலந்து சாப்பிட்டு வந்தால் நோயின்றி என்றும் இளமையுடன் வாழலாம்.

நெல்லிக்கனியின் மருத்துவ குணம் ஏராளம். தினமும் ஒரு நெல்லிக்கனி சாப்பிட்டால் மரணத்தை தள்ளிப்போடலாம் என்றும் கூறுவது உண்டு. நெல்லிக்கனியில் சிறு நெல்லி, பெரு நெல்லி என்று இரண்டு வகை இருக்கிறது இதில் பெருநெல்லி தான் அதிக மருத்துவ குணம் கொண்டது. நெ‌ல்‌லி‌க்காயை ‌பிறை ‌நிலா வடிவ‌த்‌தி‌ல் வெ‌ட்டி தே‌னி‌ல் ஊறவை‌த்து எடு‌த்து காயவை‌த்து ப‌த்‌திர‌ப்படு‌த்‌தி தேவை‌ப்படு‌ம்போது சா‌ப்‌பி‌ட்டு வரலா‌ம். ஊறுகா‌ய் போ‌ட்டு‌ம் சாப்பிடலாம் .

உடலில் இருக்கும் அதிகப்படியான கொழுப்பைக் குறைக்கவும், உடலில் சர்க்கரையின் அளவைக் குறைக்கவும் நெல்லிக்காய் சாப்பிடலாம்.
  மற்றைய எந்தப் பழங்களிலும் இல்லாத அளவுக்கு, அதிகளவான வைட்டமின் `சி` உள்ளது. ஒரு நெல்லியில் முப்பது தோடம்பழங்களில் உள்ள வைட்டமின் ´சி` உள்ளது. 100 கிராம் நெல்லிக்காயில் 600 மில்லிகிராம் உள்ளது. நெல்லிக்காயில் இயற்கையாய் உள்ள 8.75 மில்லிகிராம் வைட்டமின் `சி`, செயற்கை முறையில் தயாரிக்கப்படும் 100 மில்லிகிராமிற்குச் சமம். மேலும் இதில் தாதுப்புக்களும், இரும்பு சத்தும் நிறைந்துக் காணப்படுகிறது.
https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjUiGRYPWzNHZFHs7gdsTRNa7IPRbV9RAtG8T-G0_XX6Ke-WomZN-3XmbbhvpeBl9nLCEfrvirSQ6BL6HX7uNhQwtl9hmtlSGThArXIyfc98gAIWxi2TO71QtSNjJX_jIqrf8GJScPJYSg/s1600/GOOSEBEERY.bmp
முதுமையை தடுக்கும் குணம் நெல்லிக்கனிக்கு உண்டு என்பதை சித்தர்கள் முதல் பாமரர் வரை அறிவர். ஆனால் நவீன ஆராய்ச்சி மூலம் இதை உண்மை என உரைத்திருக்கின்றனர். ஆண்டி ஆக்ஸிடேட் என்பது உடலில் உள்ள நச்சுப்பொருள்களை அகற்றி நோய் நொடிகளிலிருந்து உடலைக் காத்து முதுமையை துரத்தி என்றும் இளமையுடன் உடலை நன்னிலையில் இருக்கச் செய்யும் சக்தி இதற்குண்டு.நெல்லிக்கனியை சிறு துண்டுகளாக வெட்டி உப்பு,காரம் தொட்டு அதை சப்பி சாப்பிடும் சுவை சொல்லிமாளாது. நெல்லி சாப்பிட்டு முடித்ததும் தண்ணீர் குடித்தால் அதன் சுவையும் நன்றாக இருக்கும். அதிக தூர பயணத்தின் போது நெல்லிக்கனி சாப்பிட்டுச் சென்றால் பேருந்து பயணத்தில் வாந்தி வருபவர்களுக்கும் வராது. தண்ணீர் தாகமும் எடுக்காது இவை எல்லாம் நிச்சயம் நாம் அனுபவதித்து இருப்போம். நானும் அனுபவித்து இருக்கின்றேன் .
http://thanima.co.uk/images/grandmasnellikaibrine.jpg
பல மருத்துவ குணங்களை கொண்ட நெல்லியில் அப்பிளை விட  3 மடங்கு புரதச் சத்து நெல்லியில் உள்ளது. அஸ்கார்பிக் அமிலம் என்னும் உயிர்ச்சத்து 160 மடங்கு நெல்லிக்கனியில் உள்ளது. நெல்லிக்கனியில் உள்ள வைட்டமின் சி சத்து உடலில் உள்ள இரும்புச் சத்து உட்கிரகிக்கப்படுவதை ஊக்கப்படுத்துகிறது. எச்.ஐ.வி, இன்புளுன்சா வைரஸ்கள் தாக்காமல் தடுக்கிறது.  இதய வால்வுகளில், இரத்தக்குழாய்களில் ஏற்படும் அடைப்புகளை நீக்கி சீராக செயல்பட வைக்கிறது. இருதய அடைப்பை தடுக்கிறது. மேலும் கார்போஹைட்ரேட், நார்ச்சத்து, இரும்புச்சத்து, கரோட்டின், கால்சியம், பாஸ்பரஸ்,விட்டமின்  பி என்பனநிறைந்துள்ளது.
http://www.tradingbiz.com/product_images/34458/dry-amla-SP-115142.jpg
பல மருத்துவ குணங்களை கொண்ட நெல்லிக்காயை பலர் சுவைத்து இருப்பர். பலர் சுவைத்து இருக்க மாட்டார்கள் . நெல்லிக்காய் எங்கேயும் கிடைத்தால் சாப்பிட்டு பாருங்கள் . மரங்களில் கொத்து கொத்தாக காய்த்து கிடக்கும் . பிடுங்கி சாப்பிடுங்கள் . மரத்தில் கல்லால் எறிந்தால் பல நெல்லிக்காய்கள் கொட்டும் . அப்படி காய்த்து இருக்கும் மரங்களில் என்றால் பாருங்களேன் . இதெல்லாம் அனுபவம் தானப்பா . பழைய ஜாபகங்கள் இப்போது இளை ஓடுகிறது . ம்ம்ம்ம் அதெல்லாம் ஒரு காலம் 
நன்றி : http://pavithulikal.blogspot.com.
  valipoacan


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக