தலை முடி உதிர்வு
முடி உதிர்வது என்பது பெண்கள், ஆண்கள் என இருபாலருக்கும் உள்ள பொதுவான பிரச்சனை தான் . எனினும் ஆண்களுக்குத்தான் அதிகம் கொட்டுகிறது . வழுக்கை உண்டாகிறது . இன்றைய காலத்தில் சுத்தமான நீர் இல்லாததாலும், இயற்கை முறையில் தலைக்குக் குளிக்காமல், இரசாயனக் கலப்பு நிறைந்த ஷாம்பு, சோப்பு போன்றவற்றால் குளிப்பதாலும் இளம் வயதிலேயே தலை முடி கொட்டி விடுகிறது. சில இடங்களில் குடிப்பதற்க்கு கூட நீரில்லை . அப்போது அவர்கள் எவ்வாறு குளிப்பது , தலைக்கு குளித்து தலைமுடிகளை சுத்தம் செய்வது . இவை எல்லாம் பாரிய பிரச்சனைகளில் ஒன்றாக இருக்கிறது .
ஒவ்வொருவருக்கும் ஒரு நாளைக்கு 80 முடிகள் உதிர் கின் றன. அதே சமயம், குறைபாடு இருந் தாலோ, பராமரிப்பு போதாமல் இருந்தாலோ இதை விட அதிகமாக உதிரும். இப்போது வெயில் காலம்; பாதுகாக்க வேண்டிய பகுதி தலையும் , தலை முடியும் தான். நாம் அதற்க்கு தலைக்கு தொப்பி அணிந்து வெயிலில் செல்லலாம், குடை பிடித்தபடி செல்லலாம். கண்டகண்ட ஷாம்பு பயன்படுத்துவதை தவிர்த்து நாம் தரமான ஷாம்பு பயன்படுத்த வேண்டும் . நாமும் கொஞ்சம் மினகேடால் தான் நமது தலைமுடியை பாதுகாக்க முடியும் .
உடலில் ஏற்பட்டுள்ள பாதிப்பு தான் முடி உதிர்வின் அடிப்படைக் கார ணமாகும். தவிர, அதிகமான எண்ணெய்ப் பசை எண்ணெயே இல்லாமல் முடி வறண்டு போதல், அதிகமான டென்ஷன், இப்படி சில காரணங்களும் கூட இருக்கலாம். முடிகள் கொட்டுவதட்க்கு இன்னுமொரு காரணம் தலைப்பகுதி சருமத்தில் ஏற் படும் வறட்சியின் காரணமாக வும், எண்ணெய் சுரப்பிகள் குறைந்து இறந்த செல்களின் பட லங்கள் உதிர்வதாலும் பொடுகு உண்டாகிறது. இது தொற்றக்கூடிய பிரச்சினை வேறு. எனவே, பொடுகு உள்ளவர்கள் பயன்படுத் திய சீப்பு, துவாய் , தலையணை உறை போன்ற வற்றை பிறர் பயன் படுத் தவே கூடாது.
அதிகமாக எண்ணெய் தடவவும் கூடாது அதேபோல் எண்ணெய் தடவா மலும் இருக்கக் கூடாது. தலையை நேரம் கிடைக்கும்போது மென்மையாக மசாஜ் செய்துகொள்வது நல் லது. இதனால் ரத்த ஓட்டம் சீராகும். முடி உதிர் வது நிற்கும். சிலருக்கு சிறு வயதிலேயே இளநரை தோன்றும். இவர்கள் செய்ய வேண்டியதெல்லாம் நெல்லிக்காயை தொடர்ந்து சாப்பிட்டு வந்தாலே போதும் இளநரை மாயமாகிவிடும். கறிவேப்பிலையை நன்கு அரைத்து தேங்காய் எண்ணெயில் போட்டு காய்ச்சி தலையில் தேய்த்து வந்தால் முடி வளரும்.
குளிர்ந்த நீரில் தலையை அலசுவது நல்லது. ஈரமான தலையை சீப்பினால் வாரக்கூடாது. கூடுமானவரை டிரையர் பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும். எண்ணெய்ப்பண்டங்கள், இனிப்புப் பொருட்களை உண்ணாமல் தவிர்ப்பது நல் லது. பொடுகு, பேன் போன்ற பாதிப்புகளுக்கு உடனடியாக மருத்துவச் சிகிச்சையை நாட வேண்டும். இதேபோல முடி உதிர்வு ஏற்படும் போதும் அலட்சியம் காட்டக்கூடாது. இப்படிச் செய்வது வழுக்கையை உண்டாக்கும்.
உடல் நலம் பாதிக் கப்பட்டுள்ள தன் அடையாளம்தான் நுனி யில் முடி பிளவு படுவது. உணவு முறை களில் மாற்றம் செய் தால் இந்தப் பிரச் சினை தீரும். இதற் கான பிரத்யேக சிகிச் சைகளும் உண்டு. அதேபோல நரை வேக மாக உண்டாகவும் முடிப் பகுதியில் ஏற்படும் அதிர்வுகளும் முக்கிய காரணம்.
எனவே எல்லோரும் தலை முடிகளையும் கொஞ்சம் கவனித்து கொள்ளுங்கள் . உங்கள் எல்லோரையும் அழகாக இருப்பதக்ட்கு தலை முடியும் ஒரு காரணம் . தலை முடி இல்லாவிட்டால் உங்களின் அழகு குறைந்து விடும் . நேரம் கிடைக்கும் நேரங்களில் தலை முடியை சுத்தம் செய்து , எண்ணை தேய்த்து குளித்து தலைமுடிகளை சுத்தமாக வைத்திருங்கள்.
நன்றி : http://pavithulikal.blogspot.com
valipoacan
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக