திங்கள், நவம்பர் 21, 2011

கூகுளில் நீங்கள் தேடப்படுகிறீர்களா? ( எச்சரிக்கை )


எத்தனை பேருக்கு சொந்தமாக இணையதளம் இருக்கிறது என்று தெரியவில்லை. ஆனால் அந்த எண்ணிகை சொற்பமாக தான் இருக்க வேண்டும்.


வர்த்தகத்தில் ஈடுபடுவர்களும், பிரபலமாக இருப்பவர்களுமே தங்களுக்கான இணையதளத்தை வைத்து கொள்கின்றனர். மற்றபடி சாமன்யர்கள் யாரும் சொந்தமாக இணையதளம் வேண்டும் என நினைப்பதாக தெரியவில்லை. அப்படியே யாரவது சொந்தமாக இணையதளம் வைத்து கொண்டு அதில் தங்களைப்பற்றிய தகவல்களை இடம்பெற வைத்திருந்தால் அவரை தன்முனைப்பு மிக்கவராகவே கருத வாய்ப்புள்ளது.


ஆனால் ஒவ்வொருக்கும் தனியே ஒரு இணையதளம் இருப்பது நல்லது என்றே தோன்றுகிறது. அது மட்டும் அல்ல அரசியல் மொழியில் சொல்வதானால் சொந்த இணையதளம் என்பதை காலத்தின் கட்டாயம் என்றும் சொல்லலாம்.


ஏன் என்றால் எல்லோரும் உங்கள் கூகுலில் தேடிக்கொண்டிருக்கின்றனர். ஆம் கூகுலில் தகவல்களை மட்டும் தேடுவதில்லை. மனிதர்கள் பற்றிய விவரங்களையும் தான் தேடுகின்றனர். வேலைக்காக விண்ணப்பித்தவ‌ர்களின் தகுதியை சரி பார்க்க வேண்டும் என்றாலும் சரி, புதிதாக அறிமுகமானவர் தொடர்பான விவரங்கள் தேவை என்றாலே பலரும் செய்வது கூகுலில் பெயரை குறிப்பிட்டு தேடிப்பார்ப்பது தான். இவ்வளவு ஏன் பெண் பார்ப்பவர்கள் மாப்பிளை எப்படி என தெரிந்து கொள்ளவும் கூட கூகுல் மூலம் தேடிப்பார்க்கலாம்.


கூகுலிங் என்று சொல்லப்படும் இந்த பழக்கம் மிகவும் பரவ‌லாகி வருகிறது. இவ்வாறு தேடப்படும் போது இணையத்தில் உங்களைப்பற்றி இறைந்து கிடக்கும் தகவல்களை எல்லாம் கூகுல் பட்டியலிட்டு காட்டும். பேஸ்புக்கில் பகிர்ந்தவை, வலைப்பதிவில் உள்ளவை, வேலைவாய்ப்பு தளங்களில் சமர்பித்தவை, இணைய குழுக்களில் விவாதங்களின் போது தெரிவித்த‌வை என எல்லா வகையான தகவல்களையும் கூகுல் திரட்டித்தரலாம்.


அவற்றில் எதிர்மறையானவையும் இருக்கலாம், பாதகமானவையும் இருக்கலாம். உங்களைப்பற்றி தவறான தகவலை தரக்கூடியவையும் இருக்கலாம். இப்போது யோசித்து பாருங்கள் உங்களுக்கென தனியே இணையதளம் இருக்கும் பட்சத்தில் கூகுலிங் செய்யும் போது அநேகமாக அந்த பக்கம் முதலில் வந்து நிற்கும். உங்ககளை பற்றிய சரியான அறிமுகத்தையும் அந்த பக்கம் தரக்கூடும் அல்லது மற்ற பக்கங்களில் உள்ள விவரங்களோடு ஒப்பிட்டு பார்த்து சரியான முடிவுக்கு வரவும் உதவும்.


எனவே கூகுலில் தேடப்படும் போது நீங்கள் நீங்களாகவே அறியப்பட வேண்டுமாயின் உங்களூக்கான இணையதளம் அவசியம். ஆனால் இணையதளம் வைத்து கொள்ளும் அளவுக்கு நான் பெரிய ஆள் இல்லையே என்றோ அல்லது இணையதளத்தை வைத்து பராமரிப்பது கடினம் என்று நினைத்தாலோ அதற்கு சுலபமாக ஒரு வழி இருக்கிற‌து. இதற்காக என்றே விஸிபிலிட்டி என்னும் தளம் உருவாக்க‌ப்பட்டுள்ளது. இந்த தளம் கூகுலில் உங்களை பற்றி எந்த வகையான தகவல்கள் இடம்பெற வேண்டும் என்பதை கட்டுப்படுத்த உதவுகிறது.


அதாவது இந்த தள‌த்தில் உங்களுக்கான தேடல் பட்டனை உருவாக்கி அதில் உங்களைப்பற்றிய தகவல்களை இடம்பெற வைக்கலாம். நீங்கள் பணியாற்றும் இடம், உங்கள் கல்வித்தத்குதி போன்ற விவரங்களை பதிவேற்றலாம். அதன் பிறகு கூகுலில் உங்களைப்பற்றி தேடும் போது இந்த பெட்டியே முதலில் வரும். அது சரியான அறிமுகத்தை தரும். ஆக கூகுல் யுகத்தில் தேவையான சேவை என்றே இதனை குறிப்பிடலாம்.


இணையதள முகவரி
http://vizibility.com/


நன்றி  : inoj

வழிபோக்கன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக