புதன், நவம்பர் 30, 2011

சிறுநீரகமும் அதை பாதுகாக்கும் முறையும்!

மனித உடலில் உள்ள உறுப்புகளில் மிகவும் இன்றியமையாதது சிறுநீரகம் ஆகும். மனித உடலின் மிக முக்கிய உறுப்பாக செயல்பட்டு, சிறுநீரை பிரித்து வெளியேற்றி, உடலின் தட்ப வெப்பத்தை சீராக வைத்திருப்பதுதான் சிறுநீரகத்தின் வேலை. அவரை விதை வடிவில் இரண்டு சிறுநீரகங்கள் ஒவ்வொரு மனித உடம்பிலும் உள்ளன.

இரத்தத்தில் உள்ள அசுத்தங்களை சுத்திகரிக்கும் மிக நுண்ணிய சுத்திகரிப்பு உபகரணம்தான் சிறுநீரகம் இந்த சிறுநீரகம் கருவின் நான்காவது மாதத்திலிருந்து அதனுடைய இயக்கத்தை தொடங்கி மனிதனின் மரணம் வரை இடைவிடாது இயங்குகிறது. வயிற்றின் பின் பகுதியில் விலா எலும்பிற்குக் கீழே, பக்கத்திற்கு ஒன்றாக சற்று மேலும் கீழும் இறங்கி காணப்படுகிறது. சிறுநீரகம் சீராக இயங்குவதில் சிக்கல் ஏற்பட்டால் சில மணி நேரங்களில் உயிரழப்பு கூட நேரிட வாய்ப்புண்டு.

சிறுநீரகத்தின் செயல்பாடுகள்: இதயத்திலிருந்து வெளியேற்றப்படும் இரத்தத்தில் நான்கில் ஒரு பங்கு சிறுநீரகத்திற்கு சுத்திகரிக்க அனுப்பப்படுகிறது. நாள் ஒன்றுக்கு 150 லிட்டர் கழிவுநீர் சுத்திகரிக்கப்பட்டு அதில் 1.5 லிட்டர் முதல் 2 லிட்டர் வரை சிறுநீராக வெளியேறுகிறது.

மீதி அனைத்தும் மீண்டும் இரத்தத்தில் கலந்து விடுகிறது. இதனால் உடலிலுள்ள அனைத்து கழிவுகளும் வெளியேற்றப்படுகின்றன.  இரத்தம் சுத்தமடைகிறது. இரத்தத்தை சுத்தப்படுத்துதல் மட்டும் சிறுநீரகத்தின் வேலையல்ல. மற்ற உறுப்புகளின் செயல்பாடுகளை தூண்டுவதும் சிறுநீரகத்தின் வேலைதான்.

உடலின் திரவ நிலையை சம நிலையில் பராமரிக்கிறது. இரத்த அழுத்தத்தை சம நிலைப்படுத்துகிறது. இரத்த சிவப்பணுக்களின் உற்பத்திக்குத் தேவையான சுரப்பினை சுரக்கச் செய்கிறது. எலும்பு வளர்ச்சிக்கு தேவையான கால்சியம், பாஸ்பரஸ் போன்றவற்றை சமப்படுத்தும் தன்மை சிறுநீரகத்திற்கு உண்டு.  அமில, காரத்தன்மைகளையும், சோடியம் பொட்டாசியம், அம்மோனியம் போன்றவற்றை சரிவிகிதத்தில் சமன்செய்யும் பணியையும் சிறுநீரகம் சிறப்பாக செயல்படுத்துகிறது.

நெப்ரான்: இதுவே சிறுநீரகத்தின் முக்கிய வடிகட்டி. இது இரத்தத்தில் உள்ள வேதியல் பொருட்களில், தேவையுள்ள, தேவையில்லாதவற்றை பிரித் தெடுக்கிறது. சிறுநீரகத்தில் இந்த நெப்ரான்கள் பல கோடிகள் உள்ளன. மால்பிஜியன் குழாயின் மூலம் வடிகட்டி மீண்டும் உறிஞ்சி இரத்தத்துடன் கலக்க வைப்பதும், மீதத்தை சிறுநீர் குழாய் வழியாகவும் வெளியேற்றுகிறது.

சிறுநீரகம் சீராக செயல்படவில்லை யென்றால்: இரத்தம் அசுத்தமாகும், இரத்த சிவப்பணுக்களின் உற்பத்தி பாதிக்கப் படும். தண்ணீர், யூரியா, சோடியம் மற்றும் வேதிப் பொருட்களின் சமநிலை பாதிக்கப்பட்டு, உடலின் அக, புற அமைப்பில் மாற்றங்கள் உண்டாகும். மூச்சுத் திணறல், நினைவிழத்தல் இரத்தக் கொதிப்பு ஆகியவை உண்டாகும்.

சிறுநீரகம் சரியாக செயல்படாததால் ஏற்படும் அறிகுறிகள்:  யூரியா மற்றும் வேதிப் பொருட்கள் அதிகளவில் இரத்தத்தில் கலந்துவிடுவதால் சிறுநீர் சரியாக பிரியாது. சிறுநீர் சரிவர பிரியாததால் மூச்சுத் திணறல், அதிக இருமல், நெஞ்சுவலி, சளியில் இரத்தம் வருதல், விக்கல், பசியின்மை, இரத்த வாந்தி, நினைவிழத்தல், குழப்பம், கை நடுக்கம், நரம்பு தளர்ச்சி, தோல் வறண்டு அரிப்பு ஏற்படுதல் போன்ற ஒருசில அறிகுறிகள் தென்பட்டால் உடனே மருத்துவரை அணுகி பரிசோதனை செய்து கொள்வது நல்லது.

சிறுநீரகம் யாருக்கு அதிகம் பாதிப்படையும்: சிலருக்கு பிறக்கும்போதே சிறுநீரகம் சிறுத்து காணப்படும். பரம்பரையாகவும், பாதிக்கப் படலாம். இரத்தக் கொதிப்பு, பாம்புக்கடி, கதண்டு வண்டுக்கடி, மலேரியா, உயிர்க்கொல்லி மருந்து உட்கொண்டவர்கள், வயிற்றுப் போக்கு அடிக்கடி உள்ளவர்கள், பிரசவ காலங்களில் உண்டாகும் இரத்தப்போக்கு, அடிக்கடி கருக்கலைப்பு செய்பவர்களுக்கும், நீர் அதிகம் அருந்தாதவர் களுக்கும், மது போதை பொருட்கள் உட் கொள்பவர்களுக்கும், அடிக்கடி வலி நிவாரண மாத்திரைகளை பயன்படுத்துபவர்களுக்கும், உடல் பயிற்சியில்லாதவர்களுக்கும் சிறுநீரகம் பாதிக்க வாய்ப்புண்டு.

சிறுநீரகத்தைக் காக்க:
*  உடல் பருமன் பிரச்சனை ஏற்படாமல் பார்த்துக் கொள்வது அவசியம்.

*  புகைப் பழக்கத்தை தவிர்க்க வேண்டும். மது, போதை பழக்கம் இருக்கக் கூடாது.

*  அடிக்கடி வலிநிவாரணி மாத்திரைகளை உட்கொள்வதை தவிர்க்க வேண்டும்.

*   எளிதில் சீரணமாகும் உணவுகளை உட் கொள்வது நல்லது. சிறுநீரை அடக்குதல் கூடாது.

*   தினமும் 3 லிட்டர் தண்ணீர் அருந்துவது நல்லது.

*   வாழைத்தண்டு, முள்ளங்கி போன்றவற்றை உணவில் அதிகம் சேர்த்துக்கொள்ள வேண்டும்.

சிறுநீரகக் கோளாறு உள்ளவர்கள் பொதுவாக வாழைத்தண்டு, 3 விரலளவு எடுத்து அதனுடன் சின்ன வெங்காயம் 4, சீரகம் 1 தேக்கரண்டி, சோம்பு 1 தேக்கரண்டி, நல்ல மிளகு 4, பூண்டு பல் 4, கொத்துமல்லி இலை தேவையான அளவு, கறிவேப்பிலை 20 இலை, இலவங்கப்பட்டை 2 கிராம் எடுத்து 3 குவளை தண்ணீரில் போட்டு கொதிக்க வைத்து 1 குவளை அளவு வந்தபின் எடுத்து காலை மாலை இருவேளை என வாரத்தில் 2 நாட்கள் அருந்தி வந்தால் சிறுநீரகக் கோளாறுகளை தவிர்க்கலாம். இது பக்க விளைவில்லாத மருந்தாகும். கழிவு நீக்கத்திற்கு முக்கிய பங்கு வகிக்கும் சிறுநீரகங்களை பாதுகாக்க மேற்கண்ட நடை முறைகளை பின்பற்றுவது நல்லது.
-உஸ்மான்-

by valipoacan

ஓரினச்சேர்க்கை (Homosex) ‘எய்ட்ஸ்’ நோய் கடுமையாக பரவுகிறது!

JUNE 30, நியுயார்க் ஜுன் 30,  ‘ஓரினச்சேர்க்கை’ யால் எய்ட்ஸ் மற்றும் பால்வினை நோய்கள் மேற்கத்திய நாடுகளில் கடுமையாக பரவுவது உறுதி செய்யப்பட்டுள்ளது.

அமெரிக்கா, பிரிட்டன், மற்றும் பிற ஐரோப்பிய நாடுகளில் பலவற்றில் கொடுமையான எச்.ஐ. வி கிருமியால் வரும் எய்ட்ஸ் மற்றும் பால்வினை நோய்களால் ஓரினச்சேர்க்கையில்  ஈடுபடும் இளைஞர் மற்றும் யுவதிகளை கடுமையாக பாதித்து பரவிக் கொண்டிருப்பது சிக்மா எய்ட்ஸ் ஆய்வு குழும ஆய்வுகளின் மூலம் உறுதி செய்யப்பட்டுள்ளது.

அமெரிக்காவில், மட்டும் கடந்த பத்தாண்டுகளில் கிட்டத்தட்ட ஐந்து லட்சத்து ஐம்பத்து ஐயாயிரம் ஓரின சேர்க்கையாளர்கள் எச் ஐ வி / எய்ட்ஸ் நோய் தொற்றுக்கு ஆளாகி வருவதாக கண்டறியப்பட்டுள்ளது. இவர்களில் சுமார் ஒரு லட்ச்சத்திற்கும் மேற்பட்ட ‘ஓரின சேர்க்கையாளர்கள்’ எய்ட்ஸ் நோய் தோற்றால் இறந்து போனதாக அஞ்சப்படுகிறது.

அமெரிக்காவில் உள்ள மொத்த எய்ட்ஸ் நோயாளிகளில் 48% சதவீதம் பேர் ‘ஓரினச்சேர்க்கை’ பழக்கத்தால் இந்த நோய்க்கு இலக்காகியுள்ளதாக தெரிகிறது. இதே போன்று இங்கலாந்தில் நடத்தப்பட்ட ஆய்வில், ‘ஓரினச்சேர்க்கையால் எய்ட்ஸ் மற்றும் பால்வினை தாக்கியவர்களின் சதவீதம், சாதாரண ஆண் மற்றும் பெண் இடையேயான செக்ஸ் உறவில் இடுபடுபவர்களை விட பல மடங்கு அதிகமாக இருந்தது கண்டறியப்பட்டுள்ளது.

அதே வேளை, இவ்வாறான ‘எய்ட்ஸ் மற்றும் பால்வினை’ நோய்களால் பாதிக்கப்பட்டவர்களில் 53% பேர் 35 வயதுக்கும் குறைவான வயது பிரிவினர் என்ற அதிர்ச்சியளிக்கும் உண்மையும் தெரிய வந்துள்ளது. இது போன்ற உலகெங்கும் பல நாடுகளில் ஒரே நேரத்தில் மேற்கொள்ளப்பட்ட இந்த ஆய்வு ‘ஓரினச்செர்க்கையால்’ எய்ட்ஸ் பரவும் அபாயத்தை உறுதி செய்துள்ளது.

குறிப்பாக ‘ஓரினச்சேர்க்கையாளர்கள்’ குறிப்பிடத்தக்க அளவில் பெருகிவரும் லத்தின் அமெரிக்காவில், எச் ஐ வி மற்றும் எய்ட்ஸ் தோற்றால் பாதிக்கப்பட்டுள்ளவகளிடையே நடத்தப்பட்ட ஆய்வில் எய்ட்ஸ் நோய் தோற்று குறித்த இதுவரை வெளிவராத அதிர்ச்சிகரமான பல புதியஉண்மைகள் வெளிவந்துள்ளன.

முதலாவதாக, லத்தீன் அமெரிக்காவில் எச் ஐ வி மற்றும் எய்ட்ஸ் பரவலுக்கு பிரதான காரணமாக ‘ஓரினச்சேர்க்கை’ விளங்குவது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. லத்தின் அமெரிக்க நாடுகளில் ‘எய்ட்ஸ் நோயால்’ தாக்கப்பட்டவர்களில் 40% பேர் ‘ஓரினச்சேர்க்கை’ மூலமே நேரடியாக எய்ட்ஸ் நோய் தாக்குதலுக்கு ஆளாகியுள்ளனர்.

இதை விட மிகவும் மோசமான விடயம் என்னவென்றால், எய்ட்ஸ் பற்றிய சரியான அறிவுள்ள, உயர் கல்வி மற்றும் மருத்துவ துறையில் உள்ள ‘ஓரினச்செர்கையாலர்களிடையே’ நிலவும் ‘எய்ட்ஸ்’ தங்களை தாக்க வாய்ப்பில்லை என்று நிலவும் தவறான நம்பிக்கையாகும்.

இவ்வாறு ‘எய்ட்ஸ்’ தங்களை தாக்க வாய்ப்பில்லை என்று கருதும் ‘உயர் கல்வி, வேலை மற்றும் பொரளாதார’ பிரிவினரிடையே உள்ள ‘ஓரினச்சேர்க்கையில்’ ஈடுபடும் 35% பேருக்கு, எய்ட்ஸ் நோய் தோற்று ஏற்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

இங்கிலாந்தில் நடத்தப்பட்ட இந்த ஆய்வுகளில், ‘ஓரினச்சேர்க்கை’ யில் ஈடுபடுவோரிடையே, எய்ட்ஸ், கிளமீடியா, கோனோரியா மற்றும் பிறப்புறுப்பு ஹெர்பிஸ் ஆகிய நோய் பதிப்பு கடந்த பத்து வருடங்களில் 100% க்கும் மேற்பட்ட அளவில் அதிகமாகியுள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

by
valipoacan
 Tom & Jerry 7




 

விஷத்தை கக்கும் கொடிய   நாகபாம்பு பற்றிய தகவல்! (வீடியோ இணைப்பு)

இ மெயில் - புதிய 3D தோற்றத்தில்




நீங்கள் இப்போது பயன்படுத்தி கொண்டிருக்கும் இ மெயிலின் தோற்றத்தை மாற்றி 3D அனிமேஷன் தோற்றத்தை ஏற்படுத்த முடியும். உங்களுடைய இ மெயில் எதுவாக இருந்தாலும் அதன் அவுட் லுக்கை மொத்தமாக மாற்ற முடியும். உங்களுடைய பழைய இ மெயில் தோற்றத்தை மாற்றி 3D தோற்றத்தை ஏற்படுத்த Incredimail என்னும் மென்பொருளை உங்கள் கணினியில் இன்ஸ்டால் செய்ய வேண்டும். இந்த மென்பொருளை பயன்படுத்த வேண்டிய வழிமுறைகள் கீழே கொடுக்கப் பட்டுள்ளது.


இறைமறுப்பாளர்கள் பகுத்தறிவாளர்களா?

பகுத்தறிவுகாரர்கள் கண்னுக்குத் தெரியாத கடவுளை நம்புவது காட்டு மிராண்டித்தனம். பகுத்தறிவுக்கு ஒவ்வாதது. கடவுளைக் காட்டினால் நம்புகிறோம், லட்சக்கணக்கில் பணம் பரிசும் தருகிறோம் என்று சவால் விடுகிறார்கள். இதை உண்மையான பகுத்தறிவு என்று ஏற்றுக்கொள்ள முடியுமா? எந்த உண்மையான பகுத்தறிவுவாளனும் இதை பகுத்தறிவு என்று ஒப்புக் கொள்ளமாட்டான். இதனைப் பார்த்தறிவு அதாவது ஜயறிவு என்றே சொல்லுவான். இன்னும் பச்சையாகச் சொன்னால் இதை மிருக அறிவு என்றே சொல்ல வேண்டும்.
by valipoacan

கணனியின் பாதுகாப்பிற்கு இலவசஆண்டிவைரஸ் Bitdefender மென்பொருள்!

விண்டோஸ் கணினியின் பாதுகாப்பு பற்றி அக்கறை உள்ளவர்கள் அதிகம் கவலைப்படுவது தங்களது ஆண்டிவைரஸ் மென்பொருள் உருவாகி வரும் அனைத்து வைரஸ்களையும் கண்டறியும் திறமையுள்ளதா என்பதை பற்றி...


சில நேரங்களில் கணினியிலுள்ள ஆண்டிவைரஸ் மென்பொருளையும் மீறி வைரஸ் தாக்குதல் நடைபெறுகிறது.


இது போன்ற சந்தர்ப்பங்களில் பல பிரபலமான ஆண்டிவைரஸ் மென்பொருட்களை கணினியில் நிறுவி ஸ்கான் செய்யுமாறு பரிந்துரைக்கிறார்கள். எனினும் ஒரே நேரத்தில் இரு ஆண்டிவைரஸ் மென்பொருட்களை நிறுவ முடியாது.


பிரபலமான சில ஆண்டிவைரஸ் மென்பொருட்களின் ஆன்லைன் ஸ்கானிங்க் இணைப்புக்களை தொடர்ச்சியாக இங்கே பார்க்கலாம்.



Bitdefender online scanner எனும் பிரபலமான ஆண்டிவைரஸ் மென்பொருளின் இலவச ஆன்லைன் ஸ்கானிங்க் இணைப்பு இதுவாகும். இங்கே சென்று Start Scanner என்பதை கிளிக் செய்தால் திறக்கும் விண்டோவில் நீங்கள் பயன்படுத்தும் உலாவி பயர்பாக்ஸ் ஆயின் அதற்குரிய ஆட் ஒன் ஐ நிறுவ வேண்டும். அதிலே Quick Scan என்பதை அழுத்தி கணினியை வேகமாக ஸ்கான் செய்து கொள்ளமுடியும்.


நன்றி  ; http://eutamila

செவ்வாய், நவம்பர் 29, 2011

உணவுக்கு மட்டுமல்ல மருந்தாகவும் பயன்படும் வெங்காயம் !

தூக்கமில்லாமல் கஷ்டப்படும் குழந்தைகளுக்கு சிறிய வெங்காயத்தைத் தண்ணீரில் கொதிக்க வைத்து எடுத்த தண்ணீரில் இரண்டு ஸ்பூன் சர்க்கரை சேர்த்துக் கொடுக்க நல்ல தூக்கம் வரும்.


 "கொ வெறி, கொ வெறி" பாடலும் .  சரத் (பளார் )ரும் Sorry சரத்பவார்ரும் 
                                        காமெடி வீடியோ !



by
valipoacan

திங்கள், நவம்பர் 28, 2011

நாத்திகத்தின் தோற்றம்



பொதுவான ஒரு நிலை என்னவென்றால் எந்த ஒன்றைப் பற்றியும் உண்டு என்ற நிலைக்குப் பிறகுதான் இல்லை என்ற நிலை தோன்ற முடியும். இல்லாத ஒன்றை இல்லை என்று கற்பனை செய்ய முடியாது. அரிசி தமிழக மக்களின் பிரதான உணவு; அத்தியாவசியத் தேவை, அதனால் தான் மனித நேயமற்ற அரக்க குணம் கொண்ட வியாபாரிகள் அதில் கல்லைக் கலந்து கல்லைம் அரிசியாக்குகின்றனர். மக்களுக்குத் தேவையில்லாத ஒன்றை கலப்படம் செய்து ஆதாயம் அடைய முடியாது. மக்களுக்குத் தேவையானவற்றில் தான் கலப்படம் நடக்கிறது. அரிசியில் மனிதனின் சமூக வாழ்க்கைக்கு இன்றியமையாத ஒன்றாக இருக்கிறது. அதனால் தான் மனித நேயமற்ற அரக்க குணம் கொண்ட அரசியல்வாதிகள் மதத்தின் பேராலும் ஜாதியின் பேராலும், மாநிலத்தின் பேராலும், மொழியின் பேராலும் மக்களுடைய உள்ளங்களில் நஞ்சைக் கலந்து மனித அமைதியைக் கெடுக்கிறார்கள். இதுவே எதார்த்த நிலை.