லாப நோக்கில் ஈமு வளர்ப்பு (emu koli)
முதலில் பண்ணை (emu form) வைக்க குஞ்சுகளை எவ்வாறு தேர்வு செய்வது என்பதை பார்ப்போம்....
கண் பார்வை சரியாக உள்ளதா என அறிந்து தேர்ந்தெடுக்க வேண்டும். பார்வை குறைபாடு இருக்குமேயானால் கொடுக்கும் தீவனத்தை சரியாக எடுக்க முடியாமல் போகலாம். அதோடு கூட்டமாக வளரும் நிலையில் மற்ற ஈமுக்களை பார்த்து ஒதுங்கி போகவும், தடுப்பு பொருளில் மோதி இறப்பு உண்டாகாமலும் இருக்க பார்வை மிகவும் அவசியம். அதனால் ஈமு வாங்கும் போதே பார்வை திறனை சோதித்து வாங்க வேண்டும்.
மனிதர்களை போலவே ஈமுவிற்கு காது கேட்கும் திறன் மிகவும் அவசியம். ஏனென்றால் இனச்சேர்க்கை காலத்தில் ஆண் ஈமு எழுப்பும் ஓசையையும், பெண் ஈமு எழுப்பும் ஓசையையும் பிரித்து அறிந்தால்தான் இனச்சேர்க்கை மேற்கொள்ள முடியும். காது கேட்கும் திறன் குறைந்து இருந்தால் குஞ்சுகளின் உற்பத்தி பாதிக்கப்படும்.
ஈமுவின் அலகு ஒழுங்காக இருக்க வேண்டும். இரு கன்னங்களும் சரியான அளவில் ஒன்றை விலகி இருக்காமல் இரண்டு கன்னங்களும் சமமாக இருக்க வேண்டும். கன்னத்தில் ஏற்றத்தாழ்வு இருந்தால் தனக்கு தேவையான தீவனத்தை எடுத்துக்கொள்ளாமல் போக வாய்ப்பு உள்ளது. தீவனம் குறைந்தால் ஈமுவின் வளர்ச்சியும் குறையும். மேலும் தீவனம் அதிகம் வீணாகும்.
ஈமுவின் கால்கள் நொண்டி, நொண்டி நடக்காமலும், நடக்கும் போது இரு கால்களின் முட்டிகள் மோதாமலும், இரு கால்களுக்கும் இடையே சரியான இடைவெளியுடனும் இருக்க வேண்டும். மேலும், கால்களில் வளைவுகள் இல்லாமல் இருப்பது அவசியம்.
வளர்க்க குஞ்சு வாங்கும் போது 3 மாதம் வயதானவற்றை பார்த்து வாங்க வேண்டும். இதை அறிந்து கொள்ள வாங்கும் குஞ்சுகளில் வெள்ளை கோடுகள் மறையும் தருவாயில் இருக்க வேண்டும். அதோடு வாங்கும் அனைத்து குஞ்சுகளின் உயரம் வேறுபாடு இல்லாமல் பார்த்துக்கொள்ள வேண்டும்.
மற்ற பண்ணை வளர்ப்பு விலங்கினங்களில் இருந்து ஈமு பண்ணை முற்றிலும் வேறுபட்டு இருக்க காரணம்....
1. ஈமுவின் ஆயுட்காலம் அதிகமாக இருப்பதால் ஒருமுறை ஈமு வாங்கி வளர்த்தால் தொடர்ந்து 20 ஆண்டு வரை வருமானம் பெற முடியும்.
2. பண்ணை பராமரிப்பிற்கென்று அதிகசெலவு செய்ய தேவையில்லை.
3. பண்ணையை பராமரிப்பது எளிது.
4. ஈமு பண்ணையின் மூலம் அதில லாபம் கிடைக்கும்.
5. நன்கு பழகும் தன்மையுள்ள சாதுவான பறவை இதனால் மனிதர்களுக்கு எந்த தொந்தரவும் இருக்காது.
6. ஈமு, எரு 250 கிராம் அளவில் தென்னைக்கு இட்டால் நல்ல மகசூல் கிடைக்கும்.
7. பண்ணையில் உள்ள மற்ற விலங்கினங்களோடு சேர்ந்து வாழும்.
8. ஈமு பண்ணை கொட்டகை கட்ட அதிக செலவு தேவையில்லை.
9. எல்லா நேரமும், எல்லா நாட்களும் பண்ணையில் இருக்க வேண்டும் என்பதில்லை. வேறு வேலையாக 2-3 நாட்கள் வெளியில் சென்று வரலாம். இதனால் ஈமு கோழிக்கு எவ்விதமான பாதிப்பும் ஏற்படாது.
10. ஈமுவை அதிக அளவில் நோய்கள் தாக்காது. ஜீரண கோளாறு, சளி ஆகியவை ஏற்படும் போது கை வைத்தியம் செய்தால் போதுமானது.
11. குழந்தைகளும், வயதானவர்களும் கூட பண்ணைக்கு சென்று பயம் இல்லாமல் வேலை செய்யலாம்.
12. எல்லாவிதமான தட்ப வெப்ப நிலையிலும் ஈமுவை வளர்க்கலாம், துர்வாசனை வராது. இதனால் அருகில் உள்ளவர்களுக்கு எந்தவிதமான தொந்தரவும் இல்லை.
by
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக