விமானத்தை, ஈரான் சிறைபிடித்துள்ளதால், வருங்காலத்தில் அமெரிக்கப் பாதுகாப்பிற்கு பாதிப்பு வருமா ?
அமெரிக்க
ராணுவத்தைச் சேர்ந்த, ஆளில்லாத உளவு விமானம், ஈரான் நாட்டில் விழுந்தது.
அதை, ஈரானியர்கள் கைப்பற்றியுள்ளனர். அந்த விமானத்தை தங்களிடம் திருப்பித்
தர வேண்டும் என, அமெரிக்க அதிபர் ஒபாமா வேண்டுகோள் விடுத்துள்ளார்.
அமெரிக்க நாட்டின், ராணுவத் துறையைச் சேர்ந்த, உளவு விமானம், ஆளில்லாமல் இயங்க வல்லது. இவ்வகை விமானமொன்று, ஈரான் நாட்டின் மீது பறந்து கொண்டிருந்த போது, ராணுவத்தினரால் தரையிறக்கப்பட்டது என்றும், ஈரான் ராணுவத்தினர் சுட்டு வீழ்த்தினர் என்றும், பல்வேறு தகவல்கள் வெளிவந்தன. ஆனால், அதுகுறித்து, இரு நாடுகளும் எதுவும் தெரிவிக்காமல் இருந்து வந்தன.

இந்நிலையில், அமெரிக்கா சென்றுள்ள ஈரான் பிரதமர் நூரி அல் மாலிகி, அமெரிக்க அதிபர் ஒபாமாவை சந்தித்து பேசினார். பின்னர் இருவரும் இணைந்து நடத்திய நிருபர்கள் சந்திப்பில் பேசிய, அமெரிக்க அதிபர் ஒபாமா, "ஈரான் நாட்டில் உள்ள அமெரிக்க விமானத்தை, எங்களிடம் திருப்பித் தருமாறு கோரி உள்ளோம். அதற்கு, ஈரான் என்ன பதில் சொல்லப் போகிறது என்பதை எதிர்பார்த்துள்ளோம். விமானத்தை, ஈரான் சிறைபிடித்துள்ளதால், வருங்காலத்தில் அமெரிக்கப் பாதுகாப்பிற்கு பாதிப்பு வருமா என்பது குறித்தெல்லாம், விரிவாக பதில் அளிக்க முடியாது' என்றார். இச்சம்பவம் மூலம், அமெரிக்க நாட்டின் ஆளில்லா உளவு விமானத்தை, ஈரான் சிறை பிடித்துள்ளது என்பது, முதல் முறையாக வெளி உலகுக்கு தெரியவந்துள்ளது.
by
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக