ரோட்டோர கடைகளில் சில்லி சிக்கன் சாப்பிட போகின்றீர்களா? இதை படித்துவிட்டு சாப்பிடுங்கள். (முடிந்தால் ?!)
ரோட்டோர கடைகளில் (அங்கு மட்டுமா?) சில்லி சிக்கன், சிக்கன் 65 போன்ற சிக்கன் வகையறாக்களை சாப்பிடுபவரா நீங்கள். அந்த மாதிரியான கடைகளில் என்னென்ன வகைகளில் கலப்படம் செய்கிறார்கள் என தெரியுமா? பழைய எண்ணையை உபயோகிப்பார்கள், அல்லது மசாலாக்களில் கலப்படம் இருக்கலாம் என நினைக்கலாம், நீங்கள் நினைப்பது சரி தான் ஆனால் சிக்கனிலேயே கலப்படம் செய்கிறார்கள். என்ன, செத்த கோழியை யூஸ் பண்ணியிருப்பாங்க என சொல்றிங்களா? அப்படி இருந்தா தான் பரவாயில்லையே.
சிக்கனுக்கு பதிலாக என்ன உயிரினம் கலப்படம் செய்யப்படுகிறது என உங்களுக்கு தெரியுமா? தெரிந்தால் நீங்கள் சிக்கன் சாப்பிடுவதையே நிறுத்தி விடுவீர்கள். சிக்கனுக்கு பதிலா எலிக்கறி கலப்படமாக சேர்க்கப்படுகிறது. என்ன நண்பர்களே, அதிர்ச்சியா இருக்கா? ஆமாம், எலிக்கறி தான் சேர்க்கப்படுகிறது.
எப்படி எலி கிடைக்கிறது?
மளிகை கடைகள் இருக்கும் மார்க்கெட்டில் எலிகள் அதிகமா இருக்கும். சாக்கு
மூட்டைகளுக்கு இடையில், டின்களுக்கு இடையில், இன்னும் சொல்லிக் கொண்டே
போகலாம். கடைக்காரர்கள் அந்த எலிகளை பிடிப்பதில் அவ்வளவா ஆர்வம காட்டுவது
கிடையாது. அப்புறம் யார் பிடிக்கராங்கன்னு கேட்கறிங்களா? சில்லி சிக்கன்
விக்கிற ஆளுங்க பிடிக்கறாங்க. காலையில அஞ்சு மணிக்கெல்லாம்
மார்க்கெட்டுக்கு போயிருவாங்க, ஏற்கனவே எலிகளை பிடிக்க பொறிகளை மொத நாளே
வச்சிருப்பாங்க. அரிசி பருப்பை தின்னு நல்லா கொழுகொழுன்னு எலிகள் அந்த
பொறிகளில் மாட்டி இருக்கும். கடைக்காரங்களுக்கு எலித்தொல்லை இல்லாம இருந்தா
போதும்னு சந்தோசப்படுவாங்க.
சிக்கனுக்கும், எலிக்கும் என்ன வித்தியாசம்:
வெந்த
சிக்கனை பிச்சு பாருங்க, வெளுமையா இருக்கும், நார் போல நீள நீளமா
இருக்கும். ஆனா எலிக்கறியை பிச்சு பார்த்தா கொஞ்சம் பழுப்பு நிறமா
இருக்கும். சதையும் சிக்கனை போல சற்று நார் நாராக இல்லாமல் நல்ல மிருதுவாக
கட்டி கட்டியா இருக்கும். கொஞ்சம் கவனமா பார்த்தா வித்தியாசம்
கண்டுபிடிக்கலாம்.
நன்றி http://www.tamilvaasi.com/
by
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக