கூகுள் பிளஸ் பயனாளரை தேடிக் கொடுக்கும் பயனுள்ள இணையம்
சமூக இணையதளங்களில் தற்போது பிரபலமாகி வரும் கூகுள் பிளஸ்-ல் இருக்கும் பயனாளர்களை எளிதாக சில நொடிகளில் தேடிக் கொடுப்பதற்காக ஒரு தளம் உள்ளது. பேஸ்புக் பயனாளர்களை தேட பல வழிகள் இருக்கிறது, ஆனால் கூகுள் பிளஸ் பயனாளர்களை தேடுவது சற்று சிரமமக இருந்து வந்தது. கூகுளில் சென்றும் தேடலாம், ஆனால் பிரத்தியேகமாக கூகுள் பிளஸ் பயனாளர்களை தேடிக்கொடுக்க ஒரு தளம் உள்ளது. இத்தளத்திற்கு சென்றவுடன் தோன்றும் விண்டோவில் Search என்ற கட்டத்திற்குள் கூகுள் பிளஸ்-ல் இருக்கும் பயனாளர் பெயர் தொடர்புடையதை வார்த்தையை தட்டச்சு செய்ய ஆரம்பித்த உடனே கூகுள் பிளஸ்-ல் பயனாளரை தேடி நமக்கு எளிதாக காட்டுகிறது. இதிலிருந்து நாம் தேடும் நபரை எளிதாக கண்டுபிடிக்கலாம். பயனாளரின் அடிப்படை தகவல் மற்றும் அவர்களின் பெயரின் அடிப்படையில் தேடிக்கொடுக்கும் இந்தத் தளம் கூகிள் பிளஸ் -ல் இருக்கும் மக்களை எளிதாக தேடிக் கண்டுபிடிக்க உதவும்.
WEBSITE LINK:- http://www.findpeopleonplus.com/
by :
வழிபோக்கன் |
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக