இன்றைய அம்மா சமையல்
தேவையான பொருட்கள்:-
பாசுமதி அரிசி - 2 கப், கோழிக்கறி - 1/2 கிலோ, இஞ்சி - பெரிய துண்டு,
பூண்டு - 15 பற்கள், மிளகாய், தக்காளி - தலா 2, பெரிய வெங்காயம் - 2, புதினா - 1/2 கட்டு, கொத்துமல்லி - 1/4 கட்டு, பட்டை கிராம்பு ஏலக்காய் - தலா 3, பிரியாணி இலை - 2, மிளகாய்தூள் உப்பு - 1/2 ஸ்பூன், மஞ்சள் தூள் - 1/4 ஸ்பூன், கரம் மசாலா தூள் - 1/2 ஸ்பூன், எலுமிச்சை - 1, நெய் - 1 ஸ்பூன், சமையல் எண்ணெய் - 2 ஸ்பூன்.
செய்முறை:-
பாசுமதி அரிசியை ஊறவிடவும். கோழிக் கறியை மஞ்சள் தூள் சேர்த்து நன்கு சுத்தம் செய்து வைக்கவும். பச்சை மிளகாய், இஞ்சி-பூண்டு, வெங்காயம், தக்காளியைத் தனித்தனியாக அரைத்து வைக்கவும். குக்கரில் எண்ணெய், நெய் விட்டு சூடாக்கவும். பட்டை, கிராம்பு, ஏலக்காய், பிரியாணி இலை போட்டு, பொரிய விடவும்.
பச்சை மிளகாய் விழுதைப் போட்டு பொன்னிறமாக வதக்கவும். இஞ்சி-பூண்டு விழுதைப் போட்டு நன்கு வதக்கவும். வெங்காயம் சேர்த்து எண்ணெய் பிரியும் வரை வதக்கவும். தக்காளி விழுது சேர்த்து வதக்கவும். புதினா, சிறிது கொத்து மல்லி சேர்க்கவும். மஞ்சள்தூள், மிளகாய்த்துள், கரம் மசாலாதூள் சேர்த்து வதக்கி, அதில் கோழிக்கறியைப் போடவும். கறி வதங்கியதும் அரை கப் தண்ணீர் விட்டு, குறைந்த தீயில் வேக விடவும். கறி பாதி வெந்ததும் அரிசியைப் போட்டு வதக்கி, எலுமிச்சை சாறு சேர்த்து, 4 கப் தண்ணீர் ஊற்றி, குக்கறை மூடிவிடவும். ஒரு விசில் வந்ததும் கொத்துமல்லி இலை தூவிப் பரிமாறவும்.
தேவையானவை:-
கோழிக்கறி - அரை கிலோ
பூண்டு - 5
பச்சைமிளகாய் - சிறிதளவு
எண்ணெய் - 1 தேக்கரண்டி
வினிகர் - 1 தேக்கரண்டி
உப்பு - சிறிதளவு
செய்யும் முறை:-
கோழிக்கறியை சுத்தம் செய்து சிறு துண்டுகளாக நறுக்கி வைத்துக் கொள்ளவும்.
பூண்டையும், பச்சை மிளகாயையும் விழுதாக அரைத்துக் கொள்ளவும்.
ஒரு பாத்திரத்தில் கோழிக்கறி, வினிகர், உப்பு, பூண்டு, பச்சை மிளகாய் விழுது சேர்த்து கிளறி அரை மணி நேரம் ஊற விடவும்.
ஒரு வாணலியில் எண்ணெய் விட்டு அதில் ஊறிய கோழிக்கறியைக் கொட்டி வதக்கவும். சிறிது நேரம் வாணலியை மூடி வைக்கவும்.
கோழிக்கறி வெந்ததும் திறந்து மீண்டும் கிளறவும்.
எல்லாம் ஒன்றாக கலந்து நன்றாக வெந்து சுண்டி வரும்போது இறக்கி வைக்க வேண்டும். சுவையான கோழிக்கறி கார வறுவல் தயார்.
தேவையானவை :
மீன் - 1/4 கிலோ
தக்காளி - இரண்டு
சாம்பார் வெங்காயம் - ஒரு கைப்பிடி
புளி - எலுமிச்சையளவு
மிளகாய்த் தூள் - 4 தேக்கரண்டி
மஞ்சள் தூள் - 1/2 தேக்கரண்டி
கடுகு, வெந்தயம், எண்ணெய் - தாளிக்க
கறிவேப்பிலை - சிறிது
இஞ்சி - சிறிது
பூண்டு - ஐந்து பல்
மிளகு - அரை தேக்கரண்டி
செய்முறை :
மீனை சுத்தம் செய்யவும். இஞ்சி, தக்காளி, வெங்காயம் ஆகியவற்றை நறுக்கிக் கொள்ளுங்கள். பூண்டை தோலுரித்து வையுங்கள்.
மிக்ஸி ஜாரில் சிறிது தக்காளி, சிறிது வெங்காயம், இஞ்சி, பூண்டு, மிளகு, கறிவேப்பிலை ஆகியவற்றைப் போட்டு அரைக்கவும்.
புளியைக் கரைத்து அதில் உப்பு, மிளகாய்த் தூள், மஞ்சள் தூள் சேர்க்கவும்.
அடுப்பில் குழம்பு பாத்திரத்தை வைத்து தாளித்து கறிவேப்பிலை சேர்த்த பிறகு வெங்காயம், தக்காளியைப் போட்டு வதக்கவும்.
பிறகு புளிக் கரைசலை ஊற்றிக் கொதிக்கும் போது அரைத்து வைத்த விழுதை சேர்க்கவும்.
குழம்பு கொதித்து சுண்டி வரும் போது, கழுவிய மீனைப் போட்டு 10 நிமிடத்தில் இறக்கவும்.
தேவையான பொருட்கள்:-
கேரட் - 1
கோஸ் - 1 துண்டு
உருளைக் கிழங்கு - 2
பச்சை மிளகாய் - 2
பூண்டு - 4 பல்லு
சோள மாவு - 4 தேக்கரண்டி
எண்ணெய் - பொறிக்கத் தேவையான அளவு
சோயா சாஸ் - 1 தேக்கரண்டி
உப்பு - சிறிது
மிளகு தூள் - 1 தேக்கரண்டி
செய்யும் முறை:-
காய்கறிகளை நறுக்கிப் போட்டு வேக வைத்து எடுத்து மசித்துக் கொள்ளவும். அதில் சோள மாவு, அரைத்த பச்சை மிளகாய் விழுது, உப்பு சேர்த்து பிசையவும்.
அதனை சிறு சிறு உருண்டைகளாக உருட்டிக் கொள்ளவும்.
வாணலில் எண்ணெய் ஊற்றி இந்த உருண்டைகளை அதில் போட்டு நன்கு வேகவிட்டு எடுக்கவும்.
வேறொரு வாணலியில் சிறிது எண்ணெய் ஊற்றி சூடானதும் பூண்டு விழுது, பச்சை மிளகாய், வெங்காயத் தாள் போட்டு வதக்கவும். அதில் சிறிது தண்ணீர் ஊற்றி உப்பு, மிளகு தூள், சோயா சாஸ் ஊற்றி கொதிக்க விடவும்.
இந்த கரைசல் சுண்டி வரும் போது வறுத்த உருண்டைகளைப் போட்டு மெதுவாக கிளறி விடவும்.
5 நிமிடம் கழித்து கொத்துமல்லி தூவி பரிமாறவும்.
by
சிக்கன் பிரியாணி
கோழிக்கறி கார வறுவல்
மீன் குழம்பு
காய்கறி மஞ்சூரியன்

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக