கறிவேப்பிலையின் பயன்
இந்தியன் கவுன்சில் ஆப் மெடிகல் தினமும் 170 கிராம் காய்கறிகளை சாப்பிட சிபாரிசு செய்கிறது.
75 - 125 கிராம் கீரைகளையும் சாப்பிட சிபாரிசு செய்கிறது.
170 கிராம் காய்கறிகளை சாப்பிட முக்கியமான 10 காய்கறிகளையும் குறிப்பிடுகிறது. அதில் ஒன்று கறிவேப்பிலை என்பது குறிப்பிடத்தக்கது. ]
உணவு உண்ணும்போது, கறிவேப்பிலையை பார்த்தவுடன், ஏதோ கரப்பான்பூச்சியைப் பார்த்ததுபோல் நாம் தூக்கி எறிகிறோம். கறிவேப்பிலையின் நன்மைகளை அறியாததால்தான் நாம் இவ்வாறு செய்கிறோம்.
கறிவேப்பிலையில் புரதம், இரும்புச்சது, சுண்ணாம்புச்சத்து, பாஸ்பரஸ், கொழுப்பு, கார்போஹைட்ரேட், வைட்டமின் ஏ, சி போன்ற சத்துக்கள் உள்ளன. இந்த சத்துக்களால் கண் பார்வைக் கோளாறுகள், சோகை நோய்கள் குணமடைகின்றன.
மலச்சிக்கலைப் போக்குதல், ஜீரண சக்தியை அதிகரித்தல், பேதியைக் கட்டுப்படுத்துதல், பித்தத்தை மாற்றி வாந்தியைத் தடுத்து வயிற்று இரைச்சலைப் போக்குதல் போன்ற குணநலன்கள் கறிவேப்பிலைக்கு உண்டு.
முகத்தில் அம்மை வடு இருப்பின், ஒரு பிடி கறிவேப்பிலை, கசகசா ஒரு கரண்டி, கஸ்தூரி மஞ்சள் ஒரு துண்டு இவற்றை அம்மியில் வைத்து அரைத்து, முகத்தில் தடவுங்கள். பின் அரை மணி நேரம் கழித்து முகம் கழுவவும். இவ்வாறு இரு வாரங்களுக்கு மேலாக செய்துவந்தால் தழும்புகள் அடியோடு மறைந்துவிடும்.
கறிவேப்பிலையை வறுத்து மிளகு, சீரகம், சுக்கு இவற்றைப் பொடி செய்து, உப்பு சேர்த்து சோற்றுடன் பிசைந்து சாப்பிட, பசி எடுக்காமல், வயிறு மந்தமாக இருப்பின் குணமாகும்.
"அவனுக்கு நீ கறிவேப்பிலை மாதிரிதான்; பார்த்து கவனமாக அவனிடம் இரு" என்று பலர் சொல்வதுண்டு. இனியும் யாராவது இப்படி சொல்வார்கள்?
புற்று அபாயத்தை தடுக்கும் கறிவேப்பிலை
உணவின் வாசனையை அதிகரிக்கத்தான் கறிவேப்பிலை பயன்படுகிறது என்று பலர் கருதுகின்றனர். இதனால் தான் சாப்பிடும்போது உணவில் கிடக்கும் கறிவேப்பிலையை எடுத்து கீழே போட்டு விடுகிறார்கள். ஆனால் இனிமேல் இப்படிச் செய்யாதீர்கள். ஏனெனில் கறிவேப்பிலையில் பல்வேறு மருத்துவ குணங்கள் இருப்பதாக சமீபத்திய ஆய்வுகள் மூலம் தெரிய வந்துள்ளது.
கறிவேப்பிலையின் தாவரப்பெயர் முரையா கோய்னிஜா. இது ருட்டேசி என்ற தாவரக் குடும்பத்தை சேர்ந்தது. கறிவேப்பிலையில் வைட்டமின் ஏ, பி, சி, கால்சியம் போன்றவைகள் உள்ளன. மேலும் கறிவேப்பிலையில் கோயினிஜாக், குளுகோசைட், ஒலியோரெசின், ஆஸ்பர்ஜான் சொரின், ஆஸ்பார்டிக் அமிலம், அயாமைன், புரோலைன் போன்ற அமினோ அமிலங்கள் உள்ளது. இவைகள் தான் கறிவேப்பிலைக்கு இனிய மணத்தை தருகிறது. பல மருத்துவ குணங்களையும் வெளிப்படுத்துகிறது.
இந்திய சமையலில் வாசனைக்கு சேர்க்கப்படும் மசாலா அயிட்டமான கறிவேப்பிலை புற்றுநோயை ஆரம்பித்திலேயே கொல்லும் ஆற்றல் உடையது என்பதை அண்மையில் ஆஸ்திரேலிய உணவியல் அறிஞர்கள் கண்டறிந்துள்ளனர்.
நியூட்ரிசன் சைன்டிஸ்ட் ஆப் சிசைய்ரோ என்பது ஆஸ்திரேலியாவின் மிகப்பெரிய மருத்துவ ஆராய்ச்சி நிறுவனம். மசாலாப் பொருட்கள் நல்ல வாசனை உடையது மட்டுமல்ல அது பல மருத்துவ குணங்களை கொண்டது என்பதை அந்நிறுவனம் கண்டறிந்துள்ளது.
இந்நிறுவன தலைமை ஆராய்ச்சியாளர் லனேகோபியாக் கறிவேப்பிலை சிறந்த ஆண்டி ஆக்ஸிடென்டாக இயங்குகிறது என்கிறார். இது புற்றுநோய், இதய நோய்களை குறைக்கும் ஆற்றல் கொண்டது. மேலும் கறிவேப்பிலையால் ஞாபக சக்தி எளிதில் கிடைக்கிறது என்கிறார் இவர்.
கறிவேப்பிலையிலிருந்து எண்ணை எடுத்து அதை நுரையீரல், இருதயம், கண்நோய்களுக்கு தலைக்கு தேய்க்கும் எண்ணையாக பயன்படுத்தலாம் என இங்கிலாந்தில் உள்ள வேளாண் மருத்துவ ஆராய்ச்சி நிலையம் தெரிவித்துள்ளது.
சாதாரணமாக 100 கிராம் கறிவேப்பிலையை அரைத்து சாற்றை எடுத்து 100 கிராம் தேங்காய் எண்ணையில் கலந்து இதமான சூட்டில் ஈரப்பதம் நீங்கும் வரை காய்ச்சி தினசரி தலைக்கு தேய்த்து வந்தால் உடல் உஷ்ணம் மங்கும். பரம்பரை நரை வராது. கண்பார்வை குறைவு ஏற்படாது. கறிவேப்பிலையை அரைத்து சாப்பிட்டால் நுரையீரல், இருதய சம்பந்தப்பட்ட ரத்த சம்பந்தப்பட்ட நோய்கள் வருவது குறையும் என்கிறது இந்நிறுவனம்.
திருவனந்தபுரத்திலுள்ள கேரளா யூனிவர் சிட்டியில் கறிவேப்பிலையையும், கடுகையும் தாளிக்க பயன்படுத்தினால் அதனால் நன்மை உண்டா? என்பது பற்றி ஆராய்ந்தார்கள் மருத்துவ குழுவினர். அதில் கறிவேப்பிலையும், கடுகும் சேர்ந்து நமது திசுக்களை அழிவிலிருந்து பாதுகாக்கிறது என்பது தெரிய வந்தது. மேலும் பிரிரேடிக்கல்ஸ் உருவாவதையும் தடுக்கிறது. பிரிரேடிக்கல்ஸ் உருவாவதால்தான் டி.என்.ஏ. பாதிக்கிறது. செல்களிலுள்ள புரோட்டின் அழிகிறது. விளைவு கேன்சர், வாதநோய்கள் தோன்றுகின்றன. தாளிதம் செய்யும்போது நாம் பயன்படுத்தும் கறிவேப்பிலையும், கடுகும் பிரிரேடிக்கல்ஸ் உருவாவதை தடுப்பதாக ஆய்வில் கண்டறிந்துள்ளனர்.
இந்தியன் கவுன்சில் ஆப் மெடிகல் தினமும் 170 கிராம் காய்கறிகளை சாப்பிட சிபாரிசு செய்கிறது. 75 - 125 கிராம் கீரைகளையும் சாப்பிட சிபாரிசு செய்கிறது. 170 கிராம் காய்கறிகளை சாப்பிட முக்கியமான 10 காய்கறிகளையும் குறிப்பிடுகிறது. அதில் ஒன்று கறிவேப்பிலை என்பது குறிப்பிடத்தக்கது.
நீரழிவு நோயை கட்டுப்படுத்த
இதுதவிர நீரிழிவு நோயாளிகள் காலையில் 10 கறிவேப்பிலை இலையையும், மாலையில் 10 இலையையும் பறித்த உடனேயே வாயில் போட்டு மென்று சாற்றை விழுங்கி வந்தால் மாத்திரை சாப்பிடும் அளவை பாதியாக குறைத்து விடலாம் என்கிறார்கள் மருத்துவர்கள்.
தினசரி வெறும் வயிற்றில் கறிவேப்பிலை இலையை 3 மாதங்கள் சாப்பிட்டு வந்தால் நீரிழிவால் உடல் கனமாவது குறைக்கப்படும். சிறுநீரில் சர்க்கரை வெளியேறுவதும் முற்றிலும் தடை செய்யப்படும். கறிவேப்பிலை ரத்தத்தில் இருக்கும் கொழுப்பை குறைக்கவும், அறிவை பெருக்கவும் உதவுகிறது. கறிவேப்பிலையை பச்சையாகவே மென்று தின்றால் குரல் இனிமையாகும். சளியும் குறையும் என்கிறார்கள் மருத்துவர்கள்.
இளம் வயதில் நரை முடி வராமல் தடுக்க கறிவேப்பிலை பயன்படும் என்பது தெரிந்த விஷயம். ஆனால் தெரியாத விஷயம் ஒன்று உள்ளது.
அதாவது, நரை முடி வந்தவர்களும், உணவிலும், தனியாகவும் கறிவேப்பிலையை அதிகமாக சாப்பிட்டு வந்தால் நரை முடி இருக்கும் இடம் தெரியாமல் போய்விடும்.
உணவில் கறிவேப்பிலை சேர்ப்பது ஏன்?
கறிவேப்பிலை - பெயரைக் கேட்டதுமே சமையலில், உணவுப் பதார்த்தங்களில் வாசனைக்காக சேர்க்கப்படுவது என்று தான் பலரும் நினைக்கின்றார்கள். ஆனால், அதிலும் எண்ணற்ற மருத்துவ குணங்கள் இருப்பது பல பேருக்குத் தெரியாது.
அதன் மருத்துவ குணங்களை புரிந்து கொண்டதால் தான் காலங்காலமாக கறிவேப்பிலையை முன்னோர்கள் உணவில் பயன்படுத்தி வந்துள்ளனர்.
தேவைப்படும் போது பயன்படுத்திக் கொண்டு, உணவு தயாராகி சாப்பிடுகையில், கறிவேப்பிலையை பலர் தனியாகத் தூக்கி வைத்து விடுவதைப் பார்த்திருக்கிறோம்.
பொதுவாக காரியம் ஆகும்வரை காலைப் பிடித்துக் கொண்டு, அவர்களின் காரியங்கள் அனைத்தும் முடிந்ததும், நம்மை புறக்கணித்து விடுவோரைப் பார்த்து, கறிவேப்பிலை போன்று பயன்படுத்திக் கொண்டார்களே என்று வேடிக்கையாகக் கூறுவதுண்டு.
கறிவேப்பிலையில் உள்ள மருத்துவ குணங்கள் நிறைந்த சாறு, உணவில் முழுவதுமாக இறங்கி உணவுக்கு சுவை கூட்டுவதுடன், உடலுக்கு ஜீரணசக்தியை அளித்து பித்தம், வாயு, கபம் போன்றவற்றையும் போக்குகிறது.
எந்த உணவானாலும், கடைசியாக அவற்றை தாளிக்கும் தருணத்தில், ஒன்றிரண்டு கறிவேப்பிலைகளை கிள்ளிப் போட்டு இறக்கி வைப்பார்கள்.
மலச்சிக்கலை தவிர்த்து, தேவையான பசியைத் தூண்டும் வேலையையும் கறிவேப்பிலை செய்கிறது.
கறிவேப்பிலையுடன் சிறிது உளுந்து மற்றும் வெந்தயத்தை வறுத்து மிக்ஸியில் போட்டு அரைத்து, மிளகாய் மற்றும் தேவையான உப்பைச் சேர்த்து சட்னியாக செய்து இட்லி, தோசை போன்றவற்றுக்கு தொட்டு சாப்பிடலாம்.
கறிவேப்பிலை சட்னி சுவையைத் தருவதுடன் உடல் எடையை சீராக வைப்பதிலும் முக்கியப் பங்காற்றுகிறது.
கறிவேப்பிலையையும், பச்சைக் கொத்தமல்லியையும் சேர்த்தும் இதுபோன்று துவையல் அரைத்து சாப்பிடலாம். கறிவேப்பிலையைப் போலவே, மல்லி இலையும் ஜீரண சக்திக்கு முக்கியப் பங்காற்றக்கூடியது.
தவிர, கறிவேப்பிலை இலையை அரைத்து காய வைத்த பின், தேங்காய் எண்ணெய் அல்லது தலைமுடிக்கு உபயோகிக்கும் எண்ணெயில் போட்டு சில நாட்கள் ஊற வைத்து, அந்த எண்ணெயைத் தேய்த்து வர, நரை முடி நம்மை நெருங்காது. மேலும் முடி உதிர்தலையும் இந்த எண்ணெய் தடுத்து நிறுத்தும்.
உணவில் மட்டுமல்லாது, நமது புற ஆரோக்கியத்திற்கும் கறிவேப்பிலையின் பங்கு குறிப்பிடத்தக்கதாக அமைந்துள்ளது.
கறிவேப்பிலை சட்னி
தேவையான பொருட்கள்
கறிவேப்பிலை - 1 கட்டு
சின்ன வெங்காயம் - 1 கோப்பை
தக்காளி - 1
பச்சை மிளகாய் - 2
கடலைப்பருப்பு - 1/2 தேக்கரண்டி
உடைத்த உளுந்து - 1/2 தேக்கரண்டி
புளி - 1 கொட்டை அளவு
தேங்காய் துருவல் - 1 மேஜைக்கரண்டி
பூண்டு - 4 பல்லு
இஞ்சி - 1 துண்டு
உப்பு - தேவையான அளவு
தாளிக்ககடுகு - 1/2 தேக்கரண்டி
கடலைப்பருப்பு - 1/4தேக்கரண்டி
உடைத்த உளுந்து - 1/4 தேக்கரண்டி
பெருங்காயம் - சிறிது
எண்ணெய் - 1 தேக்கரண்டி
கறிவேப்பிலை - 1 கொத்து
செய்முறை:-
1. சிறிது எண்ணெயை விட்டு கருவேப்பிலையை நன்றாக வறுத்துக்கொள்ளவும்.
2. வாணலியில் சிறிது எண்ணெயைவிட்டு கடலைபருப்பையும் உளுந்தையும் சிவக்க வறுத்துக் கொள்ளவும்.
3. பிறகு அதில் வெங்காயத்தைக் கொட்டி சிவக்க வதக்கவும்.
4. அதனுடன் தக்காளி, பச்சை மிளகாய், இஞ்சி, பூண்டு போட்டு, பச்சை வாசனை போகும் வரை வதக்கவும்.
5. பிறகு அதில் புளியைச் சேர்க்கவும்.
6. பின்னர் இறக்கிவைத்து தேங்காய் துருவலைச் சேர்த்து ஆறவைக்கவும்.
7. பிறகு அனைத்தையும் சேர்த்து கெட்டியாக அரைக்கவும்.
8. அடுத்து தாளிக்கும் பொருள்களைக் கொண்டு தாளிக்கவும்.
குறிப்பு:
1. இறக்கும் போது ஒரு தேக்கரண்டி நெய்விட்டு இறக்கினால் வாசனையாக இருக்கும்.
by
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக