செவ்வாய், டிசம்பர் 13, 2011

 கூட்டத்தைக் கலைக்கப் `புது வழி’!


மொத்தமாகத் திரண்டு கட்டுப்பாடின்றி கலவரத்தில் ஈடுபடும் கும்பல், போலீசாருக்கு பெரும் தலைவலி. தற்போது, கூட்டத்தைக் கலைப்பதற்கான புதிய கண்டுபிடிப்பை ஓர் அமெரிக்கப் பாதுகாப்பு அமைப்பு நிகழ்த்தியிருக்கிறது.


மில்லி மீட்டர் அளவுள்ள கண்ணுக்குத் தெரியாத இந்த அலைகள், தற்காலிக எரிச்சல் தவிர வேறு எந்தப் பாதிப்பையும் ஏற்படுத்தாதவை.
“குறிவைக்கப்படும் நபர்களின் தோலில் 64-ல் 1 பங்கு அளவுக்கு இந்த அலை ஊடுருவும், தீவிரமான எரிச்சலை ஏற்படுத்தும். குறிப்பிட்ட நபர் அல்லது நபர்கள், அலையின் பாதையை விட்டு விலகியதுமே எரிச்சலும் நின்றுவிடும்” என்கிறார், இந்த உபகரணத்தை உருவாக்கிய, பாதுகாப்பு உபகரண ஒப்பந்த நிறுவனமான ரேதியானின் ஜார்ஜ் ஸ்விடாக்.
இந்த உபகரணத்துக்கு `அமைதியான பாதுகாவலர்’ (சைலண்ட் கார்டியன்) என்று பெயரிட்டிருக் கிறார்கள். தடியடி, தண்ணீரைப் பீய்ச்சுதல் போன்ற கூட்டத்தைக் கலைக்கும் வழக்கமான முறைகளால் பெரும் கூச்சல், குழப்பம் ஏற்படும். ஆனால் கண்ணுக்குத் தெரியாமல் காரியம் ஆற்றும் இந்த அலைக்கு அமைதியான பாதுகாவலர் என்று பெயர் சூட்டியிருப்பது பொருத்தமே!

by

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக