“பசியால் வாடுபவனுக்கு ஒரு வேளை உணவு கொடுப்பதை விட, மீன் பிடிக்க கற்றுக் கொடுத்தால், வாழ்நாள் முழுவதும் அவன் நிம்மதியாக சாப்பிடுவான்…’ என, மேற்கத்திய நாடுகளில் ஒரு பழமொழி உண்டு. இந்த பழமொழியை உண்மை யாக்கியுள்ளது, ஜப்பானை சேர்ந்த ஜவோ என்ற ஓட்டல் நிர்வாகம்.
இந்த நிறுவனத்துக்கு டோக்கியோ உள்ளிட்ட பல இடங்களில் ஓட்டல்கள் உண்டு. இவர்களின் ஒவ்வொரு ஓட்டல்களிலும், மிகப் பெரிய மீன் தொட்டிகளை அமைத்து, அவற்றில் பல்வேறு வகையான மீன்களை வளர்க்கின்றனர். மீன் தொட்டிகளுக்கு அருகிலேயே, மிக நேர்த்தியாக வடிவமைக்கப் பட்ட படகுகள் நிறுத்தப்பட்டுள்ளன. இந்த படகுகளில், ஓட்டலில் இருப்பது போன்ற உணவு மேஜைகள் அமைக்கப்பட்டுள்ளன.
ஓட்டலுக்கு வரும் வாடிக்கையாளர்களுக்கு, ஒரு தூண்டிலும், அதில் மாட்டுவதற்கான இரையும் கொடுக்கப்படுகிறது. படகில் அமர்ந்தபடி, அருகில் உள்ள தொட்டிகளுக்குள் தூண்டிலைப் போட்டு, வாடிக்கையாளர்கள் காத்திருக்க வேண்டியது தான். தூண்டிலில் மீன் மாட்டியவுடன், சர்வர் வேகமாக வருவார். “பிடிபட்ட மீனை, வறுக்க வேண்டுமா, பொறிக்க வேண்டுமா?’ என கேட்பார். அவரிடம் உங்கள் தேவையை தெரிவித்து விட்டால், அடுத்த சில நிமிடங்களில், சுடச்சுட, சுவையாக தயாரிக்கப்பட்ட மீன், உங்கள் மேஜைக்கு வந்து விடும்.
அதைச் சாப்பிட்டு முடித்ததும், அடுத்த மீனை பிடிக்கச் சென்று விடலாம். மீன் வகைகளை பொறுத்து, கட்டணம் வசூலிக்கப் படுகிறது. அதிகமாக மீன் பிடிக்கும் வாடிக்கையாளர்களுக்கு, தள்ளுபடியும் உண்டு.
by
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக