வியாழன், டிசம்பர் 01, 2011

  
வாஷிங் மெஷினியில் போட்டு 3 வயது மகனை கொன்ற தந்தை
பிரான்ஸ் தலைநகர் பாரிஸ் அருகேயுள்ள பியாஸ் என்ற நகரை சேர்ந்தவர் கிறிஸ்டோபி சேம்பியனாஸ் (35). இவரது மனைவி சார்லின் (25), இவர்களுக்கு பாஸ்டியன் என்ற 3 வயது மகன் இருந்தான். இவன் அங்குள்ள ஒரு நர்சரி பள்ளியில் படித்து வந்தான். படு சுட்டியான இவன் தன்னுடன் படிக்கும் சக மாணவனின் ஓவியத்தை வீணடித்ததாக கூறப்படுகிறது.

எனவே, பள்ளி நிர்வாகம் கிறிஸ்டோபியை அழைத்து கண்டித்தது. இதனால் ஆத்திரம் அடைந்த அவர் தனது மகன் பாஸ்டியனின் கை, கால்களை கட்டி வாஷிங் மெஷினுக்குள் போட்டார். பின்னர் சுவிட்சை ஆன் செய்து துணி சலவை செய்வது போன்று அவனை துவைத்து எடுத்தார்.
இதனால் அவன் தலை மற்றும் கை, கால்களில் அடிபட்டது.   இதை சிறிது நேரம் வேடிக்கை பார்த்து கொண்டிருந்த அவரது மனைவி சார்லின் இதுகுறித்து அக்கம் பக்கத்தினரிடம் தெரிவித்தார். அவர்கள் வந்து கிறிஸ் டோபியை தடுத்து நிறுத்தி சிறுவன் பாஸ்டியனை வாஷிங் மெஷினியில் இருந்து மீட்டனர். படுகாயங்களுடன் இருந்த அவனை ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால், அவன் ஏற்கனவே இறந்து விட்டதாக டாக்டர்கள் தெரிவித்தனர்.  
இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து கொடூர மனம் கொண்ட கிறிஸ்டோபியை கைது செய்தனர். இச்சம்பவத்தை தடுக்காமல் வேடிக்கை பார்த்த அவரது மனைவி சார்லினும் கைதானார். கிறிஸ்டோபிக்கு பாஸ்டியனை பிடிக்காது. பிறந்ததில் இருந்தே அவன் மீது வெறுப்பை காட்டி வந்த அவர் கொடூரமான முறையில் கொன்று விட்டார் என உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.

by
valipoacan

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக