வியாழன், டிசம்பர் 01, 2011

  பூமியை போன்று புதிய கிரகம் கண்டுபிடிப்பு
பூமியை போன்று புதிய கிரகம் கண்டுபிடிப்பு


அமெரிக்காவின் கலிபோர்னியா பல்கலைக்கழகத்தை சேர்ந்த விண்வெளி துறை பேராசிரியர் ஸ்டீவன் வோக்ட் தலைமையிலான குழுவினர் ஆய்வு மேற் கொண்டனர். அப்போது, பூமியை போன்ற மற்றொரு கிரகம் இருப்பதை கண்டுபிடித்துள்ளனர். அந்த கிரகத்துக்கு கிளைஸ் 581ஜி என பெயரிட்டுள்ளனர். இது பூமியில் இருந்து 123 லட்சம் கோடி தொலைவில் உள்ளது. 
இந்த புதிய கிரகத்தில் தண்ணீர் உள்ளது. எனவே அங்கு மனிதர்கள் உள்ளிட்ட உயிரினங்கள் வாழும் சூழ்நிலை இருக்கும் என விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். பூமியை சுற்றி இருப்பது போன்றே இங்கும் சந்திரன் உள்ளது. மேலும், கிளைஸ் 581ஜி கிரகத்தின் அருகே மேலும் 2 கிரகங்கள் உள்ளன.
அவற்றை சுற்றி 6 நட்சத்திரங்கள் உள்ளன. அவை குறித்த ஆய்வுகள் நடைபெற்று வருகின்றன. புதிய “கிளைஸ் 581ஜி” கிரகம் பூமியை விட 4 மடங்கு பெரியது. 11 வருட ஆராய்ச்சிக்கு பிறகு இது கண்டுபிடிக்கப்பட்டது. என விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்
by
valipoacan

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக