வியாழன், டிசம்பர் 15, 2011

 வீட்டில் இருந்தே இணையம் வழியாக பணம் சம்பாதிப்பது எப்படி ?
வீட்டில் இருந்தே பணம் சம்பாதிப்பது எப்படி?, ஓன்லைன் மூலம் பணம் சம்பாதிக்க வழிமுறை என்ன?, ஓன்லைன் மூலம் வேலை செய்வது எப்படி?, இணையம் வழியாக பணம் சம்பாதிப்பது எப்படி? இன்னும் நம்மவர்கள் கேட்கும் பல கேள்விகளுக்கு இந்த தளம் பதிலாக இருக்கும்.

இத்தளத்திற்கு சென்று நாம் நம்முடைய பேஸ்புக் அல்லது டிவிட்டர் கணக்கைப் பயன்படுத்தி உள்நுழையலாம், இணையப் பயனாளர்கள் பலபேர் தங்களுக்கு செய்ய வேண்டிய வேலை மற்றும் பணம், எத்தனை நாட்களுக்குள் முடிக்க வேண்டும் என்று கொடுத்துள்ளனர், தினமும் பலவகையான பிராஜெக்ட் இங்கு கிடைக்கிறது, இதில் நாம் எதில் திறமைசாலியாக இருக்கிறோமோ அதில் விருப்பத்துடன் பங்கு பெறலாம்.
பல பேர் பங்கு பெறுவதில் போட்டி கொஞ்சம் அதிகமாக இருக்கும், ஆனால் வெற்றி பெற்றால் பணத்தை குவிக்கலாம். குறிப்பிட்ட விளம்பரத்தை கிளிக் செய்யுங்கள் மாதம் இவ்வளவு பணம் என்று ஏமாற்றும் கும்பலிடம் இருந்து தப்பிக்கலாம்.
உதாரணமாக இந்ததளத்தில் இருந்து ஒருவர் தன் நிறுவனத்திற்கு லோகோ வேண்டும் என்று கேட்டிருக்கிறார் என்று வைத்துக்கொள்வோம், நாமும் பங்கு கொண்டு வெற்றி பெற்றால் பணமும் கிடைக்கும், உங்கள் திறமை அவருக்கு பிடித்திருந்தால் அந்த நிறுவனத்தில் வேலையும் கிடைக்கும்.

by

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக