சனி, அக்டோபர் 29, 2011

விண்டோஸ்Toஆப்பிள்


விண்டோஸ் கணினியை ஆப்பிள் கணினியாக மாற்றும் மென்பொருள்!

நம்மில் பலரும் விண்டோஸ் இயங்குதளம் கணினி தான் அதிகமாக பயன்படுத்துகிறோம் ஆனால் நம்மில் பலருக்கும் ஆப்பிள் கணினி மீது அதிக ஆர்வம் இருக்கும் அதை எப்படியாவது பயன்படுத்த வேண்டும் என்ற ஆசையும் இருக்கும்.அதில் உள்ள கிராபிக்ஸ் மற்றும் அதன் அனிமேஷன் இதற்க்கு முக்கியமான காரணமாக இருக்கலாம். இந்த பதிவில் நாம் எப்படி ஒரு விண்டோஸ் கணினியை ஆப்பிள் ஆக மாற்றுவது என்பது பற்றி பார்ப்போம். நாம் விண்டோவ்சின் இயல்பான தோற்றத்தை மிகவும் எளிதாக அப்பிளை போல மாற்றலாம் இதற்க்கு நாம் ஒரு மென்பொருளை நிறுவவேண்டும் பின்னர் கணினியை மறுத்தொடக்கம் செய்ய வேண்டும் அவ்வளவு தான். இந்த மென்பொருள் நம் கணினியை அப்படியே ஆப்பிள் கணினி போல தோற்றத்தில் மாற்றுகிறது மற்றும் MAC இல் உள்ள அனிமேஷனோடு வருகிறது.
இதனை பதிவிறக்க :  MAC OSX LION
மேலே உள்ள சுட்டியில் உள்ள மென்பொருளை பதிவிறக்கி கொள்ளுங்கள் இதனை நாம் சாதரணமாக மற்ற மென்பொருள்கள் நிறுவுவது போல நிறுவுங்கள்.பின்னர் உங்கள் கணினியை பாருங்கள். இதில் 4 வகையான தீம் இருக்கிறது அதில் நீங்கள் உங்கள் விருப்பதை போல் தேர்வு செய்யுங்கள். இதனை பெருவதற்க்கு உங்கள் டெஸ்க்டாப்பில் வலது கிளிக் செய்து அதில் PERSONALIZE என்பதை தேர்வு செய்யுங்கள் அதில் INSTALLED THEMES என்ற பிரிவில் உங்களுக்கு பிடித்த தீம்சை தேர்வு செய்யுங்கள்.
இப்படி இருக்கும் உங்கள் விண்டோ :
இப்படி  ஆகிவிடும் :
இது உங்களுக்கு பிடிக்கவில்லை என்றால் அதனை அன்இன்ஸ்டால் செய்து கொள்ளுங்கள். உங்கள் கணினி முதலில் இருந்தது போல மாறிவிடும்.

புதிய  உலகம்.கம்






Dharwesh

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக