வியாழன், அக்டோபர் 27, 2011

ஜோக்ஸ் 2


  
 வழிபோக்கன் : நம்ம ஊர்ல காலரா வராம தடுக்கணும்னா ஈக்களை ஒழிக்கணும்.அதுக்கு கம்ப்யூட்டர்களுக்கு  தடைவிதிக்கணும் 
நன்பர் : என்ன சொல்றீங்க
வழிபோக்கன்  : இப்ப எல்லாம்..ஈ மெயில்கள் நிறையவருதாமே..அதை ஒழிக்கணுமே
                             *******************
நன்பர் : எலிக்கும், மவுசுக்கும் என்ன வித்தியாசம்
வழிபோக்கன்  : எலிக்கு வால் பின்னாடி இருக்கும், மவுசுக்கும் வால் முன்னாடி இருக் கும்.
                             *******************
அமைச்சர் : மன்னா ! எதிரி மன்னன் நம்மீது படையெடுத்து வருவதாக ஓலை அனுப்பி இருக்கான்...
மன்னர்(வழிபோக்கன் ) : ஓ !!அப்படியா ? யானை படையை கிழக்கு திசையில் அனுப்பு, குதிரை படையை மேற்கு திசையில் அனுப்பு, காலாட் படையை தெற்கு திசையில் அனுப்பு...
அமைச்சர் : வடக்கு திசையில்...
மன்னர்(வழிபோக்கன் )  : அந்த திசையில் தான் தப்பி ஓடப் போகிறேன்
                           **********************
வழிபோக்கன்   : ரேஷனுக்கு, பேஷனுக்கும் என்ன ஒற்றுமை?

வழிபோக்கன்  1: ரேஷனில் எடை குறையும், பேஷனில் உடை குறையும்.
                           **********************
வழிபோக்கன்  : டாக்டர் என்னை பத்து நாள் ரெஸ்ட் எடுக்க சொல்லிட்டாரு நல்லா தூங்கணுமே...
நண்பர் : ஆபீஸ்க்கு லீவு போடறிங்களா?
வழிபோக்கன்  : ம்ஹும் ஆபிஸ்க்கு லீவுவே போடாம போயிடுவேன்.
                           **********************
ஒரு பொறியியல் கல்லூரி வாசல் முன் தம் பிள்ளையை படிக்க வைக்க வந்தார் வழிபோக்கன் ...
வழிபோக்கன்  : இந்த காலேஜ் நல்ல காலேஜா?
வாட்ச்மேன் : ரொம்ப நல்ல காலேஜ். இங்க படிச்சா வேலை ரொம்ப ஈசியா கிடைக்கும்.
வழிபோக்கன்  : அப்படியா!!
வாட்ச்மேன் : ஆமா. நானும் இந்த காலேஜ்ல தான் எஞ்சினியரிங் படிச்சேன். படிச்ச முடிச்ச உடனே இங்கேயே இந்த வேலை கிடைச்சிடுச்சு.
                          **********************
வழிபோக்கன்  : என் மனைவி எனக்கு அடங்கி ஒடுங்கி நடக்க நீங்க தான் சாமி அருள் புரியனும்
சாமியார் : அது முடியாமத்தான் நானே சாமியாராகி விட்டேன் மகனே.

                           **********************
டீவி பார்த்துக்கொண்டிருந்த வழிபோக்கன் தடாலென்று எழுந்து அறையை நாலாபக்கமும் துருவித் துளாவுகிறார்.

வழிபோக்கனின் மனைவி : என்ன தேடுறீங்க?

வழிபோக்கன் : இங்க எங்கேயோ கேமராவை மறைச்சு வச்சிருக்காங்க.

வழிபோக்கனின் மனைவி : யாரு? எப்படிச் சொல்றீங்க?

வழிபோக்கன் : அந்த டீவில வர்ற பயல் நான் அந்த சேனல்தான் பாக்குறேன் அப்படிங்கறத எப்படியோ கண்டுபிடிச்சு சொல்லிக்கிட்டே இருக்கான்.

வழிபோக்கனின் மனைவி: என்ன சொல்றான்?

வழிபோக்கன் : நீங்கள் பார்த்துக் கொண்டிருப்பது சன் டிவி என்று.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக