புதன், அக்டோபர் 05, 2011

மிகவும் பயனுள்ள மென்பொருள்

மிகவும் பயனுள்ள மென்பொருள் - CASE CHANGER


நாம் அலுவலகத்திலோ அல்லது வீட்டிலோ அவசர அவசரமாக ஏதாவது டாகுமென்ட் உருவாக்கும் போது நாம் பெரிய எழுதுக்களில்(UPPER CASE) அடிக்க வேண்டியதை எல்லாம் சிறிய எழுத்துக்களில்(lower case)  மறந்து டைப் செய்து விடுவோம். அல்லது இடையிடையே சேர்க்க வேண்டிய பெரிய எழுத்துக்களை அவசரத்தில் சேர்க்க மறந்திருப்போம் இது போன்ற சமயங்களில் நாம் டைப் செய்ததை அழித்து திரும்பவும் டைப் செய்வதற்கு பதில் அதை அப்படியே நாம் சரி செய்து கொள்ளலாம்.
இந்த வேலையை சுலபமாக செய்ய CASE CHANGER என்ற இலவச மென்பொருள் உள்ளது.  

பயன்கள்
  • ஒவ்வொரு பகுதி ஆரம்பிக்கும் முன்னர் பெரிய எழுத்துக்களை அடிக்க தவறினால் "SENTENCE CASE" என்ற பட்டனை அழுத்தி சரி செய்து கொள்ளவும்.
  • அனைத்தையும் பெரிய எழுத்துக்களிலேயே அடித்து விட்டால் அதை சரி செய்ய "lower case" or "tOgGle cAsE" என்ற பட்டனை அழுத்தி சரி செய்து கொள்ளலாம்.
  • பெரிய எழுத்திக்களில் அடிக்க வேண்டியதை சிறிய எழுத்துக்களில் அடித்து விட்டால் சரி செய்ய "UPPER CASE" or "tOgGle cAsE" என்ற பட்டனை அழுத்தி திருத்தி கொள்ளவும்.
  • தலைப்பை சரியாக அடிக்க தவறினால் "Tittle Case" உபயோகிக்கவும்.
  • மற்றும் மிகச்சிறிய அளவே உடைய இலவச மென்பொருள்.
  • இதை நம் கணினியில் இன்ஸ்டால் செய்ய தேவையில்லை நேரடியாக உபயோகிக்கலாம்.
உபயோகிக்கும் முறை:
  • கீழே உள்ள டவுன்லோட் பட்டனை அழுத்தி இந்த மென்பொருளை தரவிறக்கி கொள்ளுங்கள்.
  • Zip பைலை extract செய்த பின்னர் மென்பொருளை நேரடியாக இயக்கலாம்.
  • நீங்கள் இப்பொழுது உங்கள் கணினியில் எந்த இடத்தில் டைப் செய்து காப்பி செய்த அடுத்த வினாடியே இந்த மென்பொருளில் வந்து விடும் பேஸ்ட் செய்ய வேண்டியதில்லை. பார்ப்பதற்கே ஆச்சரியமாக இருக்கும்.
  • இங்கு உங்களுக்கு தேவையான பட்டனை அழுத்தி நீங்கள் சரி செய்து கொள்ளலாம்.
  • இணையத்தில் காப்பி செய்தால் கூட இந்த மென்பொருளில் வந்து விடும்.

(அல்லது)

 
நன்றி-http://vandhemadharam.blogspot.com
 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக