சனி, அக்டோபர் 01, 2011

அழகற்ற மீன்

ritten by on March 9th, 2011 |   No Comments
Font size:
மிகவும் அசிங்கமான மீன் பார்த்திருக்கிறீர்களா?? இதோ பாருங்கள்! கடலில் எத்தனையோ அழகுகள் கொட்டிக்கிடக்க, அழகற்ற மீன்வகைகள் பட்டியலில் முதல் இடத்தை பிடித்திருப்பதுதான் நீங்கள் காணும் பிளாப்ஃபிஷ். பார்க்கும்போதே பாவத்தை வரவழைக்கும் இது 12 அங்குலம் மட்டுமே வளரும். மேலும் இது கடலில் மிக ஆழத்தில் அதாவது கிட்டத்தட்ட 1 கிலோ மீட்டர் அடிப்பரப்பில் வாழ்கிறது. உணவுக்காக இது எங்கேயும் நகர்வதில்லை. தான் இருக்கும் இடத்தை தேடி வரும் இரைகளை மட்டுமே உண்டு வாழும் அப்பிராணி இது.
UK ,World ,Politics ,Obituaries ,Royal Wedding Earth, Science,Health ,news Education, Celebrities ,Weird News ,News ,Blogs
ஆஸ்திரேலிய கடலில் வாழும் இந்த அப்பிராணி மீனுக்கும் இப்போது ஆபத்து வந்துவிட்டதாம். முன்பெல்லாம் மேலோட்டமாக மீன் பிடித்துக்கொண்டிருந்த ஆஸ்திரேலியர்கள் இப்போதெல்லாம் கொஞ்சம் அடியிலும் வலையை வீசி விடுகிறார்களாம். மற்ற மீன்களோடு இந்த பிளாப்ஃபிஷ்ஷும் வலையில் சிக்கிக் கொள்கிறதாம். இப்படி தெரியாமல் பிடிக்கப்படும் இந்த வகை மீன்கள் கரைக்கு வந்ததும் இறந்து போகின்றன. இந்த அரிய வகை அழகற்ற மீனை காப்பாற்றும் படி கோரிக்கைகள் எழுந்து வருகின்றன. ஆஸ்திரேலியா மனம் வைக்கும் என்றும் நம்பப்படுகிறது
நன்றி 
புதிய உலகம்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக