சனி, அக்டோபர் 01, 2011

பேசுகின்ற நோட்பேட்-Speaking Notepad

நோட் பேட் பற்றி நமக்கு தெரியும். ஆனால் பேசுகின்ற நோட்பேட்-Speaking Notepad  பற்றி கேள்விப்பட்டிருக்கின்றீர்களா? இன்றைய பதிவில் அதைப்பார்க்கலாம்.4 எம்.பி. கொள்ளளவு கொண்ட இதை பதிவிறக்க இங்கு கிளிக்செய்யவும்.இதை இன்ஸ்டால் செய்ததும் உங்களுக்கு கீழ்கண்ட விண் டோ ஓப்பன் ஆகும்.

தேவையான டாக்குமெண்டை திறந்துகொள்ளுங்கள். அல்லது புதிய தாக ஒன்றை தட்டச்சு செய்துகொள்ளுங்கள் இதில் உள்ள Reading டேபை கிளிக் செய்யுங்கள் கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும். 
Read என்பதை கிளிக் செய்யுங்கள். நீங்கள் தட்டச்சு செய்த -அல்லது ஓப்பன் செய்த டாக்குமெண்டை இந்த சாப்ட்வேர் படித்துக்காண்பிக்கும். இதில் உள்ள மற்றும் ஒரு வசதி என்னவென்றால் இதில் விதவிதமான 12 ஆண்-பெண் குரல்கள் உள்ளது. உங்களுக்கு எது தேவையோ அதை தேர்வு செய்து கொள்ளலாம். மேலும் இதில் உள்ள டாக்குமெண்டை படிக்க வைத்து அதை wav.mp3 என எந்த வகையான ஆடியோ-சிடியாகவும் எளிதில் மாற்றிக்கொள்ளலாம்.
இதனால் என்ன பலன் என்று கேட்கின்றீர்களா? மாணவர்கள் தயாரிக்கும் கட்டுரையை ஆடியோ சிடியாக மாற்றிக்கொண்டு ஒலியாக கேட்டால் எளிதில் மனதில் பதியும். இதில் உள்ள கூடுதல் வசதிகள் கீழே-
Main features

Handy notepad with speaking capabilities
Supporting DOC, PDF, RTF, HTML and text files
Recording speech into WAV, MP3 and WMA sound files
Choose one of dozens of different voices
Change voice speed and pitch in one click
Powerful bookmark system
Type & Read function
SAPI4 and SAPI5-compliant voices
Large number of visual styles
Smart Spell Checker
Efficient work with hot keys
User-friendliness and handy interface

மேலும் இதில் உள்ள Preferences மூலம் General -Editor -Reading- Spell Check வசதிகளை கொண்டுவரலாம். கீழே உள்ள விண்டோவினை பாருங்கள்.

 இதில் பல வண்ணங்களும் இணைத்துள்ளதால் வேண்டிய வண்ணத்திற்கு இதன் முகப்பை மாற்றிக்கொள்ளலாம். Read  வசதி மூலம் நாம் தட்டச்சு செய்யும்போதே தட்டச்சு செய்தததை கேட்க்கும் வசதியும் கர்சரை எங்கு வைத்துள்ளமோ அங்கிருந்து கேட்கும் வசதியையும் இதில் கொண்டுவரலாம். 
பயன்படுத்திப்பாருங்கள்.
நன்றி
வேலன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக