வியாழன், அக்டோபர் 27, 2011

ஜோக்ஸ்



ரயிலில் விழுந்து தற்கொலை செய்துகொள்ளப்போன நம வழிபோக்கன் கூடவே வறுத்த சிக்கனையும் தண்ணீர் பாட்டிலையும் எடுத்துக்கொண்டு போனார்.

தண்டவாளத்தில் தலைவைத்துப் படுத்திருந்த அவரைப் பார்த்து ஒருவர் கேட்கிறார் யோவ்தற்கொலை பண்ணிக்க வந்தியா? இல்ல..தின்னுட்டுப் போக வந்தியா?

அட..மடையா.. நம்மூரு ரயில்லாம் எப்பவுமே லேட்டாதான் வரும் தெரியுமா.. அது வரைக்கும் எவன் பசியோட காத்திருக்கறது.

                         ******************

ஜெராக்ஸ் எடுத்தப் பிறகு வழிபோக்கன் என்ன செய்வார் தெரியுமா?

ஒரிஜினலை வைத்து செக் செய்வார், ஜெராக்ஸில் எதுவும் ஸ்பெல்லிங் மிஸ்டேக் இருக்கிறதா என்று!

                                                           ******************

நபர் : உங்கள் பிறந்த நாள் என்றைக்கு?
வழிபோக்கன்  : டிசம்பர் 17
நபர் : எந்த வருடம்?
வழிபோக்கன்  : எல்லா வருடமும்

                                                           ******************

ஒரு பன்னாட்டு நிறுவனத்தில் வேலைக்குச் சேர்கிறார் நம்ம வழிபோக்கன்

முதல்நாளில் கேண்டீனுக்கு ஃபோன் செய்கிறார்.

எனக்கு சீக்கிரமா ஒரு ஸ்ட்ராங்கான காபி கொண்டாப்பா

எதிர்முனை ஆக்ரோஷமாகப் பதிலளிக்கிறது, ஏ முட்டாளே! நீ தவறான நம்பருக்கு டயல் செஞ்சிருக்கே. நான் யார் தெரியுமா?

எனக்குத் தெரியாது

நான் இந்தக்கம்பெனியின் மேனேஜிங் டைரக்டர்

வழிபோக்கன்  அரண்டுபோனாலும் குரலை உயர்த்துகிறார், இடியட்நான்சென்ஸ். நான் யார் தெரியுமா?

மேனேஜிங் டைரக்டர் கோபமாக தெரியாதுடா

டக்கென்று போனை வைக்கிறார் வழிபோக்கன் . அப்பாடா..பொழச்சேன்

                                                            ******************

நண்பர் : அதோ செத்துக் கிடக்கும் பறவைகளைப் பாருங்க.
வழிபோக்கன்  : (வானத்தை அண்ணாந்து பார்த்துக்கொண்டே) எங்கே...எங்கே?
நண்பர் மயக்கம் போட்டு விழுகிறார். 

                                                            ******************

அதிகாரி : ஒரே ஒரு வார்த்தையில் அம்பது லெட்டர்ஸ் இருக்கு. அது என்ன தெரியுமா?
வழிபோக்கன்  : போஸ்ட் பாக்ஸ்

                                                             ******************

டாக்டர் : உங்களுக்கு பாடி வெயிட் ரொம்ப ஏறிப்போச்சு. கண்டிப்பா ஒரு முப்பது கிலோவாவது குறைச்சாகனும்.
வழிபோக்கன்  : அதுக்கு என்ன செய்யணும் டாக்டர்.
டாக்டர் : ஓட்டப்பயிற்சிதான் செய்யணும். ஒருநாளைக்கு எட்டு கிலோமீட்டர் ஓடுங்க. இப்படி தொடர்ந்து 3  0  நாட்கள் ஓடினா கண்டிப்பா 3  0   கிலோவெயிட் குறையும்.
(300நாட்களுக்குப் பின்.)
தர்வேஷ் : (போனில்) டாக்டர்..எனக்கு ஒரு பிரச்சினை.
வழிபோக்கன் : என்ன பிரச்சினை? உடம்பு எடையெல்லாம் குறைஞ்சிடுச்சா?
வழிபோக்கன்  : அதெல்லாம் குறைஞ்சிடுச்சு டாக்டர். ஆனா டெய்லி எட்டு கிலோமீட்டர் ஓடினதுல இப்போ 2  4  0  கிமீ தொலைவுல இருக்கேன். நான் எப்படி திரும்பறதுதிரும்ப ஓடி வரணுமா?

                                                           ******************

ஆசிரியர் : இன்று புத்தர் ஜெயந்தி. எல்லோரும் புத்தர் ஜெயந்தியைப் பற்றி சிறு குறிப்பு எழுதுங்கள் பார்க்கலாம்.

வழிபோக்கன்  : புத்தர் இந்தியாவில் பிறந்தவர். சிறந்த தத்துவவாதி. வாழ்க்கையின் உண்மையை அறிந்து ஞானம் பெற்றவர். ஆனால் ஜெயந்தி யாரென்று எனக்குத் தெரியாது. அவருடைய மனைவியாக இருக்குமோ?!
.
                                                           ******************

வழிபோக்கன் 1 : இந்த பீர்ல நிறம் இல்லை.
வழிபோக்கன் 2 : இந்த பீர்ல சுவை இல்லை
வழிபோக்கன் 3 : இந்த பீர்ல திடம் இல்லை

ஒயின்ஸ்ஷாப் காரர் : அட! மக்குகளாஇப்ப நான் குடுத்தது பீர்ல கலக்குறதுக்கான சோடா
.
                          ******************

வழிபோக்கன் : தம்பி நீ என்ன படிச்சிருக்க?

பையன்: B.A.

வழிபோக்கன்  : அடப்பாவி! படிச்சதே ரெண்டு எழுத்து! அதையும் தலை கீழா படிச்சிருக்கே!
                                                            ******************

ஆசிரியர் : மனுஷனாப் பொறந்தா வாழ்க்கையில ஏதாவது பெரிசா சாதிக்கணும்.
வழிபோக்கன்  : நல்லவேளைநான் கொழந்தையாத் தான் பொறந்தேன்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக