சனி, அக்டோபர் 08, 2011

விளையாட்டு

          


மூளைக்கு கொஞ்சம் அல்ல நிறையவே வேலைகொடுக்கும் விளையாட்டு
மூளைக்கு கொஞ்சம் அல்ல நிறையவே வேலைகொடுக்கும் விளையாட்டு இது.மிகவும் சிறிய விளையாட்டாக 800 கே.பி. அளவுள்ள இதனை பதிவிறக்கம் செய்ய இங்கு கிளிக்செய்யவும்.இதனை இன்ஸ்டால் செய்ததும் உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்.இதில் மொத்தம் 5 நபர்கள் இருப்பார்கள். அவர்கள் பாலத்திற்கு அந்தப்புரம் இருப்பார்கள்.. அவர்கள் அனைவருக்கும் சேர்த்து ஒரே ஓரு விளக்குதான் இருக்கும். அந்த விளக்கு மொத்தம் 30 வினாடிகள் தான் எரியும். அதற்குள் இங்குள்ள அனைவரும் கரையின் மறுபக்கம் சென்றுவிடவேண்டும்.பாலத்தினை கடக்க இருவர் செல்லவேண்டும். ஆனால் ஒருவர் உடன்செல்பவரை விட்டுவிட்டு மீண்டும் மறுபக்கம் வந்துவிடவேண்டும்.
ஒவ்வொரு மனிதர்களும் பாலத்தை கடக்கும் நேரம் அவர்களுக்கு கீழே கொடுக்கப்பட்டிருக்கும்.இருவரை தேர்வு செய்து அடுத்த கரைக்கு கொண்டு சென்று விடவேண்டும்.
 நடுவழியில் 30 வினாடிகள் கடந்துவிட்டால் விளக்கு அணைந்துவிடும்.பாலத்தில் செல்பவர்கள் தண்ணீரில் விழுந்துவிடுவார்கள்.
 மீண்டும் விளையாட ஆரம்பிக்கவேண்டும்.
முதல் இரண்டுரவுண்ட் விளையாட ஆரம்பித்துவிட்டவுடன் நமக்கு டென்ஷன் ஆரம்பித்துவிடும்.விளையாடிப்பாருங்கள்.
நன்றி
http://velang.blogspot.com/2011/10/solve-game.html

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக