நீங்களே உருவாக்கலாம் வீடியோ டிவிடியை!
Super DVD Creator 9.8
நண்பர்களே!
நீங்களே வீடியோ டிவிடி உருவாக்குவது எப்படி என்று பார்ப்போம்.இதற்கு ஒரு
மென்பொருள் உதவுகிறது. சூப்பர் டிவிட் கிரியேட்டர். என்பதுதான் அது.
உதாரணமாக உங்களிடம் இது போன்ற வீடியோ கிளிப்ஸ் இருப்பதாக வைத்துக் கொள்வோம்.
VTS_01_1.VOB
VTS_02_1.VOB
VTS_02_3.VOB
VTS_02_4.VOB
VTS_02_1.VOB
VTS_02_3.VOB
VTS_02_4.VOB
ஆனால்
இப்படி இருந்தால் டிவிடி பிளேயரில் படம் ஓடாது. இது போன்ற பைல்களை நீங்கள்
வெவ்வேறு டிவிடி-களில் இருந்து காப்பி செய்து வைத்திருக்கலாம். இவை
அனைத்தையும் ஒரே வீடியோ டிவிடி-யாக மாற்றி தர இம்மென்பொருள் உதவும்.
இம்மென்பொருளை தரவிறக்க:
இது ஒரு டிவிடியை உருவாக்க அதிகபட்சமாக ஐந்து நிமிடம் எடுத்துக்கொள்கிறது
இப்போது எப்படி ஒரு டிவிடி-யை உருவாக்குவது என்று பார்ப்போம்...
01. இன்ஸ்டால் செய்த மென்பொருளை இயக்கினால் கீழ்கண்ட விண்டோ வரும்.
இதில் டிவிடி கம்பைலர் என்பதை தேர்வு செய்யுங்கள்
02. இரண்டாவதாக வரும் விண்டோவில் தோன்றும் படங்களை தேர்வு செய்து
பின்னனி படமாக மெனுவிற்கு அமைத்துக் கொள்ளலாம். இதில் உங்கள் விருப்பமான படங்களையும் பிரவுஸ் செய்து கொடுக்கலாம்
இதில் கீழ் இருக்கும் பிளஸ் குறியில் கிளிக் செய்யுங்கள்
03. அடுத்து வரும் விண்டோவில் இப்படி பைல்களை தேர்வு செய்து ஒப்பன் என்று கொடுங்கள்.
04.தேர்வு செய்த பைல்கள் இப்படி ஒப்பன் ஆகி காட்சியளிக்கும்
இதில் நெக்ஸ்ட் என்பதை தேர்வு செய்யுங்கள்
05.இந்த விண்டோவில் ஸ்டார்ட் என்பதை தேர்வு செய்யுங்கள்
06.ஸ்டார்ட்டை
தேர்வு செய்த பிறகு இப்படி ஒரு மெசேஜ் வரும் நேரடியாக டிவிடி-ல் பதிவு
செய்ய விரும்பினால் யெஸ் என்றும் தற்காலிகமாக போல்டரில் சேமிக்க
விரும்பினால் நோ என்றும் கொடுங்கள்.பொதுவாக நோ என்று கொடுத்து போல்டரில்
சேமித்து பிறகு டிவிடியில் நீரோ போன்ற மென்பொருள் மூலமாக பதிந்து கொள்வது
நல்லது.
07.
சிறிது நேரம் காத்திருங்கள். அதாவது கீழ்கண்ட விண்டோ வரும் வரை. இந்த
விண்டோ வந்த பிறகு ஸ்டார்ட் பட்டனுக்கு மேலா உள்ள விஓபி என்ற பட்டனை கிளிக்
செய்து வீடியோ சேமிக்கப்பட்ட போல்டரை ஓப்பன் செய்யலாம். அல்லது அனைத்து
விண்டோவையும் குளோஸ் (மூடி விட்டு) செய்து விட்டு நேரடியாக சேமிக்கப்பட்ட போல்டரை திறந்து கொள்ளலாம்
08. சேமிக்கப்பட்ட போல்டரை ஓப்பன் செய்தால் இப்படி இருக்கும்
நன்றி
தமிழ்தேன்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக