செவ்வாய், அக்டோபர் 04, 2011

டிரையல்விஷன் காலகெடுதேதியை நீடிக்க



காலம் தான் எவ்வளவு வேகமாக செல்கின்றது. எல்லாவற்றையும் நிறுத்தலாம். ஆனால் காலத்தை நம்மால் நிறுத்த முடியுமா? வாய்ப்பே இல்லை.சாப்ட்வேர் சோதனை பதிப்பாக வாங்குவோம். சில நாட்களில் அதற்கான நேரம் முடிந்ததும் ஒப்பன் ஆகாது.நாட்களை நீடிக்க(நேரத்தை நீட்டிக்க) - என்றும் மார்க்கென்டேயனாக சாப்ட்வேர் நமக்கு ஒத்துழைக்க இந்த சாப்ட்வேரை நாம் நமது கணிணியில் இன்ஸ்டால் செய்யவேண்டும்.1 எம்.பி. கொள்ளளவு கொண்ட இதனை பதிவிறக்கம் செய்ய இங்கு கிளிக் செய்யவும்.உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்.
உங்கள் கணிணியில் உள்ள டிரையல் விஸன் சாப்ட்வேரின் .Exe பைலை  நீங்கள் தேர்வு செய்யுங்கள்.புதிய தேதியினை தேர்வு செய்யுங்கள். பக்கத்திலேயே உங்களுக்கு காலண்டர் கொடுக்கப்பட்டிருக்கின்றது பாருங்கள்.
தேவையான தேதியை தேர்வு செய்யுங்கள்.Enter a name for create desktop icon என்கின்ற விண்டோவில் ஒரு புதிய பெயரை சாப்ட்வேருக்கு நிறுவுங்கள்(வையுங்கள்). அடுத்து்ள்ள Create Desktop Short-cut  கிளிக் செய்யுங்கள் இப்போது உங்கள் டெக்ஸ்டாப்பில் சாப்ட்வேர் அமரந்துகொள்ளும். இப்போழுது நீங்கள் நீடிப்பு செய்த சாப்ட்வேரின் பழைய Desktop short cut.Startup முதலியவற்றை நீக்கி விடுங்கள். இப்போது நீங்கள் தேர்வு செய்த ஐ-கானை கிளிக்செய்யுங்கள்.
உங்களுக்கு சாப்ட்வேர் தடையில் லாமல் வேலை செய்யும்.
பயன்படுத்திப்பாருங்கள்.
நன்றி
வேலன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக