திங்கள், அக்டோபர் 31, 2011

பென் ட்ரைவினைக் கணணிக்கான சாவியாகப் பயன்படுத்த ?

உங்கள் யு.எஸ்.பி. ப்ளாஷ் ட்ரைவினைக் கணணிக்கான சாவியாகப் பயன்படுத்தலாம். இதற்கான வசதியை பிரிடேட்டர்(Predator) என்ற புரோகிராம் தருகிறது.
நீங்கள் கணணியைப் பயன்படுத்திக் கொண்டிருக்கையில் வெளியே சென்றாலும் பிரிடேட்டர் உங்கள் கணணியைப் பாதுகாக்கிறது.
இந்த புரோகிராமை இன்ஸ்டால் செய்கையில் தரப்படும் வழிமுறைகளைப் பின்பற்றி யு.எஸ்.பி. ப்ளாஷ் ட்ரைவினைத் தயார் செய்திடவும்.
பிரிடேட்டர் புரோகிராமினை விண்டோஸ் இயங்கத் தொடங்கும் போதே இயக்குவதற்கும் ஆப்ஷன் உண்டு அல்லது நீங்கள் விரும்பும் போது அதற்கான யு.எஸ்.பி. ப்ளாஷ் ட்ரைவினை இணைத்து இயக்கலாம். இயக்கியபின் தொடர்ந்து நீங்கள் கணணியில் பணியை மேற்கொள்ளலாம்.
சற்று வெளியே செல்ல வேண்டும் என்றால் கணணியிலிருந்து ப்ளாஷ் ட்ரைவினை எடுத்துச் செல்லவும். அதனை எடுத்தவுடன் உங்கள் மொனிட்டர் திரை இருட்டாக, கருப்பாக மாறிவிடும். கீ போர்ட் மற்றும் மவுஸ் தங்கள் செயல்திறனை இழக்கின்றன.
நீங்கள் திரும்பி வந்தவுடன் மீண்டும் ப்ளாஷ் ட்ரைவினை இணைத்து பணியைத் தொடரலாம். மொனிட்டர் முன்பு இருந்த திரையைக் காட்டும். மவுஸ் மற்றும் கீ போர்ட் உயிர் பெற்று இயங்கும்.
இது விண்டோஸ் இயக்கத்தை நிறுத்தி மீண்டும் கணணியை உயிர்ப்பித்து கடவுச்சொல்லை தந்து இயக்குவதைக் காட்டிலும் எளிதானதாகத் தெரிகிறது. இந்த புரோகிராமினைக் கட்டணம் செலுத்திப் பெற்றால் கீழ்க்காணும் கூடுதல் வசதிகளைப் பெறலாம்.
அனுமதி பெறாதவர் கணணியை இயக்க முற்படுகையில் பிரிடேட்டர் எஸ்.எம்.எஸ் அல்லது மின்னஞ்சல் மூலம் நம்மை எச்சரிக்கும். பாதுகாப்பு நடவடிக்கை சார்ந்த அனைத்து பணிகளையும் பட்டியலிட்டுக் காட்டும்.
இந்த பட்டியலை உங்களுடைய ட்விட்டர் கணக்கிலும் காட்டும். இதனால் இன்னொரு கணணியிலிருந்து இந்த கணக்கைப் பார்த்து அறிந்து கொள்ளலாம்.
பாதுகாப்பிற்கென பயன்படுத்தப்படும் யு.எஸ்.பி.ட்ரைவில் உள்ள பாதுகாப்பு குறியீட்டினை பிரிடேட்டர் அடிக்கடி மாற்றிக் கொள்ளும். இதனால் ப்ளாஷ் ட்ரைவில் உள்ள அனைத்து தகவல்களையும் ஒருவர் கொப்பி செய்தாலும் அவர் அதனைப் பயன்படுத்த முடியாது.
பிரிடேட்டர் ப்ளாஷ் ட்ரைவினை எடுத்த பின்னர் விண்டோஸ் டாஸ்க் மேனேஜர் நிறுத்தப்படும். எனவே யாரும் செயல்படும் புரோகிராம்களை நிறுத்த இயலாது. இதே போல சிடி ஆட்டோ ரன் வசதியும் நிறுத்தப்படும்.
ப்ளாஷ் தொலைந்து போனால் கெட்டுப் போனால் என்ன செய்வது? என்ற கேள்வி எழலாம். முதன் முதலில் இதனை நிறுவும் போது கடவுச்சொல் ஒன்றை அமைக்க வேண்டும். இது பூட்டப் பட்ட உங்கள் கணணியின் பணியினை மீண்டும் உயிர்ப்பிக்க பயன்படுத்தலாம்.
தவறான கடவுச்சொல் கொடுத்தால் கணணியில் இருந்து எச்சரிக்கை மணி ஒலிக்கும். ஒரே பிளாஷ் ட்ரைவ் கொண்டு பல கணணியைப் பாதுகாக்கலாம்.

ஞாயிறு, அக்டோபர் 30, 2011


நம்முடைய மொபைல் போனில் தமிழ் தளங்களை பார்க்க புதிய      ப்ரௌசெர்                  

                
நாம் நம்முடைய மொபைல் போனில் அனைது தமிழ் வெப் தளங்களை பார்ப்பதற்கு mini opera  ப்ரௌசெர்ஐ உபயோகித்து வந்தோம். அனால் இப்போது அதைவிட மிகவும் பயனுள்ள  BOLT எனும் புதிய ப்ரௌசெர் வந்துள்ளது. அதை நாம் டௌன்லோட் செய்ய www.boltbrowser.com என்று டைப் செய்து ப்ரௌசெர்ஐ டௌன்லோட் செய்யும். Bolt தளத்தில் indic வெர்சென்ஐ இன்ஸ்டால் செய்யும். ( குறிப்பு : இந்த indic வெர்செனில் மட்டும்தான் தமிழ் வேலை செய்யும்)
பிறகு Not a Nokia Series 60 Phone ?CLICK HERE என்பதை கிளிக் செய்யும்.
பிறகு To Instal Indic Version  CHICK HERE என்பதை கிளிக் செய்யும்.
அடுத்தாக கீழேயுள்ள நான்கு இணைப்புகளில்எதேனும் ஒன்றை கிளிக் செய்யும்.
                                                      Dual Signed Version
                                       Verisign Signed Version
                                       Thawte Signed Version
                                        Unsigned Version
தற்போது டௌன்லோட் ஆகி ப்ரோவ்செர் இன்ஸ்டால் ஆகும். அதன் பிறகு அப்ளிகேஷன்ஸ் க்கு சென்று கிளிக் செய்து  ப்ரோவ்செர்ஐ திறக்கவும்.
அடுத்தாக கீழ்கண்ட வகையில் தமிழ் ஃபாண்டினை இன்ஸ்டால் செய்யும்.

MINU – PREFERINCES – INSTALL FONT – TAMIL


                        
தற்போது  தங்கள்  மிகவும் எளிதாக உங்கள் வழிபோக்கன் தளம் முதல், மற்ற அனைது தமிழ் தளங்களை பார்வையிடலாம்.

 

சூரியனில் அமைதி - விஞ்ஞானிகள் திகைப்பு!





சுமார் ஐந்தரை ஆண்டுகள் அமைதியின் சொரூபம். பின்னர் ஐந்தரை ஆண்டுகள் ஆக்ரோஷத் தாண்டவம். பொதுவில் சூரியனில் இதுதான் மாறி மாறி நிகழ்ந்து கொண்டிருக்கிறது. இப்போது சூரியன் ஆக்ரோஷத்தைக் காட்டவேண்டிய காலம். ஆனால், அமைதியாக இருக்கிறது. இது ஏன் என்பதுதான் விளங்கவில்லை. விஞ்ஞானிகள் திகைத்து நிற்கின்றனர்.
கண்ணைக் கூச வைக்கிற அளவுக்கு மிகப் பிரகாசமான ஒளித்தட்டாக சூரியன் காட்சி அளிக்கிறது. ஆனாலும், சூரியனின் மேற்புறத்தில் அவ்வப்போது கரும்புள்ளிகள் தென்படுகின்றன. இது சுமார் 400 ஆண்டுகளுக்கு முன்னரே கண்டுபிடிக்கப்பட்ட விஷயம். இத்தாலிய விஞ்ஞானி கலிலியோ 1612-ம் ஆண்டில் தமது சிறிய தொலைநோக்கி மூலம் சூரியனின் கரும்புள்ளிகளை ஆராய்ந்து வரைபடமே தயாரித்தார். கட்டுரைகளையும் எழுதினார். கிட்டத்தட்ட அப்போதிலிருந்தே சூரியனின் ஒளித்தட்டு தொடர்ந்து ஆராயப்பட்டு வந்துள்ளது.


சூரியனில் கரும்புள்ளிகள் நிரந்தரமாக இருப்பது கிடையாது. ஒருசமயம் கரும்புள்ளிகளே இராது. பிறகு கொஞ்சம் கொஞ்சமாகப் புள்ளிகளின் எண்ணிக்கை அதிகரிக்கும். ஒருகட்டத்தில் அது உச்சத்தை எட்டும். பின்னர் அதேபோல மறைய ஆரம்பிக்கும். ஒரு கட்டத்தில் கரும்புள்ளிகளே இராது. பிறகு மறுபடி அவை தோன்ற ஆரம்பிக்கும். இதற்கெல்லாம் ஒரு காலக்கணக்கு உள்ளது.
அதாவது கரும்புள்ளிகள் தெரிய ஆரம்பித்து உச்சத்தை எட்டுவதற்கு சுமார் ஐந்தரை ஆண்டுகள் ஆகும். பிறகு அவை படிப்படியாகக் குறைந்து புள்ளிகள் மறைவதற்கு அதேபோல ஐந்தரை ஆண்டுகள் பிடிக்கும். ஆக மொத்தம், 11 ஆண்டுகள் ஆகும். இது 11 ஆண்டு கரும்புள்ளிக் காலச்சுழற்சி என்று குறிப்பிடப்படுகிறது.


சில சமயங்களில் கரும்புள்ளிகளின் எண்ணிக்கை அதிகபட்சம் 200 வரை இருக்கலாம். உதாரணமாக, 1954-ம் ஆண்டில் 201 கரும்புள்ளிகள் தென்பட்டன. கரும்புள்ளிகள் முதலில் சூரியனின் நடுக்கோட்டுக்கு மேலேயும் கீழேயும்தான் தோன்றுகின்றன. பின்னர் சூரியனின் நடுப்பகுதியிலும் இவை தோன்றுகின்றன. பெயர்தான் கரும்புள்ளியே தவிர, கரும்புள்ளி ஒவ்வொன்றும் பிரம்மாண்டமானது. சிறிய கரும்புள்ளிகூட ஒரு பூமியை உள்ளே இறக்கி விடலாம் என்று சொல்லத்தக்க அளவில் மிகப்பெரியது. உண்மையில் சூரியனின் கரும்புள்ளிகள் கருமையானவை அல்ல. சூரியனின் மேற்புறத்தில் மற்ற இடங்களைவிட வெப்பம் குறைவான பகுதிகளே நமக்குக் கரும்புள்ளிகளாகத் தெரிகின்றன.
சூரியனில் மிக நீண்ட காலம் கரும்புள்ளிகளே தோன்றாமல் போகுமா? கடந்த காலத்தில் நமக்குத் தெரிந்து குறைந்தது நான்கு தடவை அவ்விதம் ஏற்பட்டுள்ளது. கி.பி. 1645 முதல் 1715-ம் ஆண்டு வரையிலான 70 ஆண்டுகளில் சூரியனில் கரும்புள்ளிகளே காணப்படவில்லை. சூரியனின் கரும்புள்ளிகளை ஆராய்ந்தவரான எட்வர்ட் மாண்டர் என்ற விஞ்ஞானியைக் கௌரவிக்கும் வகையில் இக் காலகட்டத்துக்கு "மாண்டர் மினிமம்' என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது. இதற்கு முன்னர் கி.பி. 1280 - 1350 காலகட்டத்திலும் கி.பி.1460 - 1550 காலகட்டத்திலும் இவ்வித நிலைமை இருந்தது. மாண்டர் மினிமத்துக்குப் பிறகு கி.பி. 1790 முதல் 1830-ம் ஆண்டு வரையிலான காலகட்டத்திலும் இதேபோல சூரியனில் அனேகமாகக் கரும்புள்ளிகளே காணப்படவில்லை.
கரும்புள்ளிகள் நிறைய இருந்தால் என்ன அல்லது இல்லாவிட்டால் என்ன என்று கேட்கலாம். சூரியனில் கரும்புள்ளிகளின் எண்ணிக்கை உச்சத்தை எட்டுமானால் அது பூமியில் நம்மைப் பல வகைகளிலும் பாதிக்கிறது. சூரியனிலிருந்து இயல்பாக ஆற்றல் மிக்க துகள்கள் (இதைச் சூரியக்காற்று என்றும் சொல்வதுண்டு) வெளிப்பட்டு வருகின்றன. கரும்புள்ளிகள் அதிகமாகத் தோன்றும் காலகட்டத்தில் சூரியனிலிருந்து இவ்விதத் துகள்கள் அதிக அளவில் அதிக வேகத்தில் வெளிப்படுகின்றன.
இவை பூமியை அதாவது மக்களைத் தாக்காதபடி பூமியின் காந்த மண்டலம் தடுத்து விடுகிறது. சூரியனில் கரும்புள்ளிகள் அதிகரிக்கும்போது சூரியனில் கடும் சீற்றம் ஏற்படுகிறது. தவிர, சூரியனிலிருந்து ஆற்றல் முகில் தூக்கி எறியப்படுகிறது. இந்த உருண்டை பூமியின் காந்த மண்டலத்தில் பெரும் பாதிப்பை உண்டாக்குகிறது. இதை விண்வெளியிலிருந்து பயங்கர மின்னல் தாக்குவதற்கு ஒப்பானது என்றும் கூறலாம். இதன் விளைவாக, நீண்ட தூரம் மின்சாரத்தை எடுத்துச்செல்லும் கம்பிகளில் கூடுதல் மின்சாரம் தோன்றி மின்சார டிரான்ஸ்பார்மர்கள் வெடிக்கும். இதனால் பெரிய பிராந்தியத்தில் மின்சப்ளை பாதிக்கப்படும்.
1989-ம் ஆண்டில் கனடாவின் கிழக்குப் பகுதியில் இவ்விதம் மின்சப்ளை பாதிக்கப்பட்டு 6 கோடி மக்கள் பல மணி நேரம் மின்சாரம் இன்றி அவதிப்பட்டனர். வடகிழக்கு அமெரிக்காவிலும் மற்றும் சுவீடன் நாட்டிலும் பாதிப்பு ஏற்பட்டது. இப்போது அது மாதிரி சூரியனிலிருந்து வெளிப்படும் ஆற்றல் முகில் தாக்குமானால் பல நாடுகளில் பாதிப்பு ஏற்பட்டு கோடானுகோடி மக்கள் பாதிக்கப்படுவர். மின்சார சாதனங்களையும் இயந்திரங்களையும் சீர்படுத்த பல ஆண்டுகள் பிடிக்கும். தவிர, சூரியனிலிருந்து வெளிப்படும் ஆபத்தான ஆற்றல் முகில்,தொலைபேசித் தொடர்பு உள்பட தகவல் தொடர்பு சாதனங்களையும் பாதிக்கும். தரைக்கு மேலே அமைந்த எண்ணெய்க் குழாய்களையும் இது பாதிக்கும்.
பூமியைச் சுற்றுகிற செயற்கைக்கோள்களின் சுற்றுப்பாதை வேகம் பாதிக்கப்பட்டு அதனால் அவற்றின் ஆயுள் குறையும். பூமியைச் சுற்றுகிற விண்வெளி நிலையத்திலிருந்து யாரேனும் வெளியே வந்து அந்தரத்தில் பணியாற்ற நேர்ந்தால் கடும் கதிரியக்கப் பாதிப்பு ஏற்பட்டு அவர்களின் உயிருக்கு ஆபத்து நேரிடலாம். பூமியில் ஏற்படக்கூடிய பாதிப்புகளை இவ்விதம் அடுக்கிக் கொண்டே போகலாம். சூரியனில் கரும்புள்ளிகள் அனேகமாக இல்லாத காலம் முடிந்து புதிய 11 ஆண்டுகால சுழற்சி கடந்த 2008 டிசம்பரில் தொடங்கியது. அப்போதே அமெரிக்க விண்வெளி அமைப்பான நாஸப் 2011 வாக்கில் சூரியனின் ஒளித்தட்டில் 150 முதல் 200 கரும்புள்ளிகள் தென்படலாம் என்று கூறியது. ஆனால், அப்படி நிகழவில்லை.
2011-ம் ஆண்டு ஜனவரி 15-ம் தேதி வரையிலான புள்ளிவிவரப்படி தொடர்ந்து 820 நாள்களுக்கு சூரியனில் கரும்புள்ளிகளே காணப்படவில்லை. நியாயமாகப் பார்த்தால் 2012-ம் ஆண்டில் சூரியனின் கரும்புள்ளிகளின் எண்ணிக்கை உச்ச அளவை எட்ட வேண்டும். ஆனால், அப்படி நிகழும் என்று தோன்றவில்லை. சூரியனின் வழக்கமான போக்கு மாறிவிட்டது போலத் தோன்றுகிறது. இதில் வேடிக்கை என்னவென்றால் 2012-ம் ஆண்டு வாக்கில் சூரியனில் அதிகபட்சமாகக் கரும்புள்ளிகள் தோன்றும் என்றும், அதன் விளைவாக சூரியனில் கடும் சீற்றங்கள் ஏற்படும் என்றும், அதையடுத்து பூமிக்கே ஆபத்து ஏற்படும் என்ற கற்பனை அடிப்படையில் இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் ஹாலிவுட் தயாரிப்பாக ஓர் ஆங்கிலப் படம் வெளியானது. இந்தியாவிலும் அது திரையிடப்பட்டது.
உள்ளபடி இப்போது சூரியனில் கரும்புள்ளிகள் எண்ணிக்கை அதிக அளவில் இல்லை. ஆகவே, சூரியனில் சீற்றங்கள் ஏற்படுவதற்கான வாய்ப்பும் குறைவாகவே உள்ளதாக விஞ்ஞானிகள் கருதுகிறார்கள். 2010 ஆகஸ்டிலும் 2011 பிப்ரவரியிலும் சூரியனிலிருந்து ஆற்றல் முகில் வெளிப்பட்டு பூமியை நோக்கி வந்தன என்றாலும் பொதுவில் சூரியன் அமைதியாக இருக்கிறது.
சூரியனின் கரும்புள்ளிகள் விஷயத்தில் கடந்த நூறு ஆண்டுகளுக்கும் மேலாகத் தொடர்ந்து காணப்பட்டு வந்த 11 ஆண்டு காலச் சுழற்சி மறைந்து முன்பு மாண்டர் மினிமம் காலகட்டத்தில் நிகழ்ந்ததுபோல தொடர்ந்து நீண்ட காலம் சூரியன் அமைதியாக இருந்து வருமோ என்று விஞ்ஞானிகள் கருதத் தொடங்கியுள்ளனர். சூரியனில் அப்படியான அமைதி நிலை ஏற்பட்டால் பூமியில் ஏற்படக்கூடிய முக்கிய பாதிப்பு ஒன்று உண்டு. அதாவது, பூமியில் குறிப்பாக வட பகுதியில் உள்ள நாடுகளில் வெப்ப நிலை குறையும். முன்பு மாண்டர் மினிமம் காலகட்டத்தில் ஐரோப்பாவின் வட பகுதியில் அமைந்த நாடுகளில் பல பகுதிகள் பனிக்கட்டியால் மூடப்பட்டன. அதுபோல இப்போது பொதுவில் பூமியில் வெப்ப நிலை குறையலாம். ஆனாலும் இது காற்று மண்டலத்தில் கார்பன் சேர்மானம் அதிகரித்து வருவதால் பூமியின் சராசரி வெப்ப நிலை அதிகரித்து வருகிற பிரச்னையை சரிக்கட்டி விடாது என்று விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.
சூரியனில் கடும் சீற்றங்கள் ஏற்பட்டு, சூரியனிலிருந்து ஆற்றல் முகில் தூக்கி எறியப்பட்டு, அது பூமியை நோக்கி வந்தால் பூமியில் தகவல் தொடர்பு உள்பட பலவும் கடுமையாகப் பாதிக்கப்படும் என்று கூறினோம். ஆகவே, இவை பற்றி முன்கூட்டி அறிந்து கொள்வதற்காக சூரியனை ஆராயும் பொருட்டு சில ஆளில்லா செயற்கைக்கோள்கள் செலுத்தப்பட்டுள்ளன. அவற்றில் ஒன்று "ஏசிஇ' என்பதாகும். இது தொடர்ந்து சூரியனை ஆராய்ந்து வருகிறது. சூரியனில் நிகழும் முக்கிய மாற்றங்களை இது ஆராய்ந்து தகவல் அனுப்புகிறது. ஆகவே, நாம் உஷாராகி, தக்க பாதுகாப்பு நடவடிக்கைகளை எடுக்கப் போதிய அவகாசம் கிடைக்கிறது. சூரியனில் நிகழும் மாற்றங்கள் ஏன் நிகழ்கின்றன என்பது பற்றி நீண்ட நாள்களாகவே ஆராய்ச்சிகள் நடந்து வருகின்றன.
இதுதொடர்பாக பல கொள்கைகளும் கூறப்பட்டுள்ளன. ஆனாலும் நம்மால் இன்னும் சூரியனை முழுமையாகப் புரிந்துகொள்ள முடியவில்லை. ஆகவேதான் சூரியனில் கரும்புள்ளி இல்லாத காலம் இன்னும் எவ்வளவு காலம் நீடிக்கும் என்று நம்மால் திட்டவட்டமாகக் கூற முடியவில்லை. ஒன்று மட்டும் உறுதியாகத் தெரிகிறது. சூரியனின் கரும்புள்ளிகளுக்கும் பூமியின் பருவ நிலைமைகளுக்கும் ஏதோ ஒரு வகையில் தொடர்பு உள்ளது. விஞ்ஞானிகள் விசேஷ கருவிகளைப் பயன்படுத்தி சூரியனை ஆராய்கிறார்கள். ஆகவே, சூரியனில் கரும்புள்ளிகள் உள்ளனவா என்று கண்டறிய ஒருபோதும் சூரியனை வெறும் கண்ணால் பார்க்கலாகாது. அவ்விதம் செய்தால் நிச்சயம் கண் பார்வை போய்விடும்

 


சனி, அக்டோபர் 29, 2011

விண்டோஸ்Toஆப்பிள்


விண்டோஸ் கணினியை ஆப்பிள் கணினியாக மாற்றும் மென்பொருள்!

நம்மில் பலரும் விண்டோஸ் இயங்குதளம் கணினி தான் அதிகமாக பயன்படுத்துகிறோம் ஆனால் நம்மில் பலருக்கும் ஆப்பிள் கணினி மீது அதிக ஆர்வம் இருக்கும் அதை எப்படியாவது பயன்படுத்த வேண்டும் என்ற ஆசையும் இருக்கும்.அதில் உள்ள கிராபிக்ஸ் மற்றும் அதன் அனிமேஷன் இதற்க்கு முக்கியமான காரணமாக இருக்கலாம். இந்த பதிவில் நாம் எப்படி ஒரு விண்டோஸ் கணினியை ஆப்பிள் ஆக மாற்றுவது என்பது பற்றி பார்ப்போம். நாம் விண்டோவ்சின் இயல்பான தோற்றத்தை மிகவும் எளிதாக அப்பிளை போல மாற்றலாம் இதற்க்கு நாம் ஒரு மென்பொருளை நிறுவவேண்டும் பின்னர் கணினியை மறுத்தொடக்கம் செய்ய வேண்டும் அவ்வளவு தான். இந்த மென்பொருள் நம் கணினியை அப்படியே ஆப்பிள் கணினி போல தோற்றத்தில் மாற்றுகிறது மற்றும் MAC இல் உள்ள அனிமேஷனோடு வருகிறது.
இதனை பதிவிறக்க :  MAC OSX LION
மேலே உள்ள சுட்டியில் உள்ள மென்பொருளை பதிவிறக்கி கொள்ளுங்கள் இதனை நாம் சாதரணமாக மற்ற மென்பொருள்கள் நிறுவுவது போல நிறுவுங்கள்.பின்னர் உங்கள் கணினியை பாருங்கள். இதில் 4 வகையான தீம் இருக்கிறது அதில் நீங்கள் உங்கள் விருப்பதை போல் தேர்வு செய்யுங்கள். இதனை பெருவதற்க்கு உங்கள் டெஸ்க்டாப்பில் வலது கிளிக் செய்து அதில் PERSONALIZE என்பதை தேர்வு செய்யுங்கள் அதில் INSTALLED THEMES என்ற பிரிவில் உங்களுக்கு பிடித்த தீம்சை தேர்வு செய்யுங்கள்.
இப்படி இருக்கும் உங்கள் விண்டோ :
இப்படி  ஆகிவிடும் :
இது உங்களுக்கு பிடிக்கவில்லை என்றால் அதனை அன்இன்ஸ்டால் செய்து கொள்ளுங்கள். உங்கள் கணினி முதலில் இருந்தது போல மாறிவிடும்.

புதிய  உலகம்.கம்






Dharwesh

வியாழன், அக்டோபர் 27, 2011

ஜோக்ஸ் 2


  
 வழிபோக்கன் : நம்ம ஊர்ல காலரா வராம தடுக்கணும்னா ஈக்களை ஒழிக்கணும்.அதுக்கு கம்ப்யூட்டர்களுக்கு  தடைவிதிக்கணும் 
நன்பர் : என்ன சொல்றீங்க
வழிபோக்கன்  : இப்ப எல்லாம்..ஈ மெயில்கள் நிறையவருதாமே..அதை ஒழிக்கணுமே
                             *******************
நன்பர் : எலிக்கும், மவுசுக்கும் என்ன வித்தியாசம்
வழிபோக்கன்  : எலிக்கு வால் பின்னாடி இருக்கும், மவுசுக்கும் வால் முன்னாடி இருக் கும்.
                             *******************
அமைச்சர் : மன்னா ! எதிரி மன்னன் நம்மீது படையெடுத்து வருவதாக ஓலை அனுப்பி இருக்கான்...
மன்னர்(வழிபோக்கன் ) : ஓ !!அப்படியா ? யானை படையை கிழக்கு திசையில் அனுப்பு, குதிரை படையை மேற்கு திசையில் அனுப்பு, காலாட் படையை தெற்கு திசையில் அனுப்பு...
அமைச்சர் : வடக்கு திசையில்...
மன்னர்(வழிபோக்கன் )  : அந்த திசையில் தான் தப்பி ஓடப் போகிறேன்
                           **********************
வழிபோக்கன்   : ரேஷனுக்கு, பேஷனுக்கும் என்ன ஒற்றுமை?

வழிபோக்கன்  1: ரேஷனில் எடை குறையும், பேஷனில் உடை குறையும்.
                           **********************
வழிபோக்கன்  : டாக்டர் என்னை பத்து நாள் ரெஸ்ட் எடுக்க சொல்லிட்டாரு நல்லா தூங்கணுமே...
நண்பர் : ஆபீஸ்க்கு லீவு போடறிங்களா?
வழிபோக்கன்  : ம்ஹும் ஆபிஸ்க்கு லீவுவே போடாம போயிடுவேன்.
                           **********************
ஒரு பொறியியல் கல்லூரி வாசல் முன் தம் பிள்ளையை படிக்க வைக்க வந்தார் வழிபோக்கன் ...
வழிபோக்கன்  : இந்த காலேஜ் நல்ல காலேஜா?
வாட்ச்மேன் : ரொம்ப நல்ல காலேஜ். இங்க படிச்சா வேலை ரொம்ப ஈசியா கிடைக்கும்.
வழிபோக்கன்  : அப்படியா!!
வாட்ச்மேன் : ஆமா. நானும் இந்த காலேஜ்ல தான் எஞ்சினியரிங் படிச்சேன். படிச்ச முடிச்ச உடனே இங்கேயே இந்த வேலை கிடைச்சிடுச்சு.
                          **********************
வழிபோக்கன்  : என் மனைவி எனக்கு அடங்கி ஒடுங்கி நடக்க நீங்க தான் சாமி அருள் புரியனும்
சாமியார் : அது முடியாமத்தான் நானே சாமியாராகி விட்டேன் மகனே.

                           **********************
டீவி பார்த்துக்கொண்டிருந்த வழிபோக்கன் தடாலென்று எழுந்து அறையை நாலாபக்கமும் துருவித் துளாவுகிறார்.

வழிபோக்கனின் மனைவி : என்ன தேடுறீங்க?

வழிபோக்கன் : இங்க எங்கேயோ கேமராவை மறைச்சு வச்சிருக்காங்க.

வழிபோக்கனின் மனைவி : யாரு? எப்படிச் சொல்றீங்க?

வழிபோக்கன் : அந்த டீவில வர்ற பயல் நான் அந்த சேனல்தான் பாக்குறேன் அப்படிங்கறத எப்படியோ கண்டுபிடிச்சு சொல்லிக்கிட்டே இருக்கான்.

வழிபோக்கனின் மனைவி: என்ன சொல்றான்?

வழிபோக்கன் : நீங்கள் பார்த்துக் கொண்டிருப்பது சன் டிவி என்று.

ஜோக்ஸ்



ரயிலில் விழுந்து தற்கொலை செய்துகொள்ளப்போன நம வழிபோக்கன் கூடவே வறுத்த சிக்கனையும் தண்ணீர் பாட்டிலையும் எடுத்துக்கொண்டு போனார்.

தண்டவாளத்தில் தலைவைத்துப் படுத்திருந்த அவரைப் பார்த்து ஒருவர் கேட்கிறார் யோவ்தற்கொலை பண்ணிக்க வந்தியா? இல்ல..தின்னுட்டுப் போக வந்தியா?

அட..மடையா.. நம்மூரு ரயில்லாம் எப்பவுமே லேட்டாதான் வரும் தெரியுமா.. அது வரைக்கும் எவன் பசியோட காத்திருக்கறது.

                         ******************

ஜெராக்ஸ் எடுத்தப் பிறகு வழிபோக்கன் என்ன செய்வார் தெரியுமா?

ஒரிஜினலை வைத்து செக் செய்வார், ஜெராக்ஸில் எதுவும் ஸ்பெல்லிங் மிஸ்டேக் இருக்கிறதா என்று!

                                                           ******************

நபர் : உங்கள் பிறந்த நாள் என்றைக்கு?
வழிபோக்கன்  : டிசம்பர் 17
நபர் : எந்த வருடம்?
வழிபோக்கன்  : எல்லா வருடமும்

                                                           ******************

ஒரு பன்னாட்டு நிறுவனத்தில் வேலைக்குச் சேர்கிறார் நம்ம வழிபோக்கன்

முதல்நாளில் கேண்டீனுக்கு ஃபோன் செய்கிறார்.

எனக்கு சீக்கிரமா ஒரு ஸ்ட்ராங்கான காபி கொண்டாப்பா

எதிர்முனை ஆக்ரோஷமாகப் பதிலளிக்கிறது, ஏ முட்டாளே! நீ தவறான நம்பருக்கு டயல் செஞ்சிருக்கே. நான் யார் தெரியுமா?

எனக்குத் தெரியாது

நான் இந்தக்கம்பெனியின் மேனேஜிங் டைரக்டர்

வழிபோக்கன்  அரண்டுபோனாலும் குரலை உயர்த்துகிறார், இடியட்நான்சென்ஸ். நான் யார் தெரியுமா?

மேனேஜிங் டைரக்டர் கோபமாக தெரியாதுடா

டக்கென்று போனை வைக்கிறார் வழிபோக்கன் . அப்பாடா..பொழச்சேன்

                                                            ******************

நண்பர் : அதோ செத்துக் கிடக்கும் பறவைகளைப் பாருங்க.
வழிபோக்கன்  : (வானத்தை அண்ணாந்து பார்த்துக்கொண்டே) எங்கே...எங்கே?
நண்பர் மயக்கம் போட்டு விழுகிறார். 

                                                            ******************

அதிகாரி : ஒரே ஒரு வார்த்தையில் அம்பது லெட்டர்ஸ் இருக்கு. அது என்ன தெரியுமா?
வழிபோக்கன்  : போஸ்ட் பாக்ஸ்

                                                             ******************

டாக்டர் : உங்களுக்கு பாடி வெயிட் ரொம்ப ஏறிப்போச்சு. கண்டிப்பா ஒரு முப்பது கிலோவாவது குறைச்சாகனும்.
வழிபோக்கன்  : அதுக்கு என்ன செய்யணும் டாக்டர்.
டாக்டர் : ஓட்டப்பயிற்சிதான் செய்யணும். ஒருநாளைக்கு எட்டு கிலோமீட்டர் ஓடுங்க. இப்படி தொடர்ந்து 3  0  நாட்கள் ஓடினா கண்டிப்பா 3  0   கிலோவெயிட் குறையும்.
(300நாட்களுக்குப் பின்.)
தர்வேஷ் : (போனில்) டாக்டர்..எனக்கு ஒரு பிரச்சினை.
வழிபோக்கன் : என்ன பிரச்சினை? உடம்பு எடையெல்லாம் குறைஞ்சிடுச்சா?
வழிபோக்கன்  : அதெல்லாம் குறைஞ்சிடுச்சு டாக்டர். ஆனா டெய்லி எட்டு கிலோமீட்டர் ஓடினதுல இப்போ 2  4  0  கிமீ தொலைவுல இருக்கேன். நான் எப்படி திரும்பறதுதிரும்ப ஓடி வரணுமா?

                                                           ******************

ஆசிரியர் : இன்று புத்தர் ஜெயந்தி. எல்லோரும் புத்தர் ஜெயந்தியைப் பற்றி சிறு குறிப்பு எழுதுங்கள் பார்க்கலாம்.

வழிபோக்கன்  : புத்தர் இந்தியாவில் பிறந்தவர். சிறந்த தத்துவவாதி. வாழ்க்கையின் உண்மையை அறிந்து ஞானம் பெற்றவர். ஆனால் ஜெயந்தி யாரென்று எனக்குத் தெரியாது. அவருடைய மனைவியாக இருக்குமோ?!
.
                                                           ******************

வழிபோக்கன் 1 : இந்த பீர்ல நிறம் இல்லை.
வழிபோக்கன் 2 : இந்த பீர்ல சுவை இல்லை
வழிபோக்கன் 3 : இந்த பீர்ல திடம் இல்லை

ஒயின்ஸ்ஷாப் காரர் : அட! மக்குகளாஇப்ப நான் குடுத்தது பீர்ல கலக்குறதுக்கான சோடா
.
                          ******************

வழிபோக்கன் : தம்பி நீ என்ன படிச்சிருக்க?

பையன்: B.A.

வழிபோக்கன்  : அடப்பாவி! படிச்சதே ரெண்டு எழுத்து! அதையும் தலை கீழா படிச்சிருக்கே!
                                                            ******************

ஆசிரியர் : மனுஷனாப் பொறந்தா வாழ்க்கையில ஏதாவது பெரிசா சாதிக்கணும்.
வழிபோக்கன்  : நல்லவேளைநான் கொழந்தையாத் தான் பொறந்தேன்.

புதன், அக்டோபர் 26, 2011

சர்தார்ஜி யின் உடல் வலிமையை

                சர்தார்ஜி யின் உடல் வலிமை.!!??


சர்தார்ஜி ஜோக்குகளை கேட்டும், படித்தும் இருப்பீர்கள். ஆனால் சர்தார்ஜியின் உடல் வலிமையை பார்த்ததுன்டா? இதோ பாருங்கள் !, அனால் ,நடுவரை மட்டும்தான் பார்க்க தோன்றும். ஹீ .,ஹீ.,ஹீ










dharwesh