சனி, மார்ச் 03, 2012

உலகின் மிகப்பெரிய தகவல் ஒளிபரப்பு கோபுரம்

 உலகின் மிகப்பெரிய தகவல் ஒளிபரப்பு கோபுரம்.


Sky Tree' tower



டோக்கியோ: உலகின் மிகப்பெரிய தகவல் ஒளிபரப்பு கோபுரம் ‌ஜப்பானின் ‘ஸ்கைட்ரீ’ யின் கட்டுமானப்பணிகள் முழுமையாக நிறைவடைந்தன. வரும் மே மாதம் பொதுமக்கள் பார்வைக்காக திறந்துவைக்கப்படவுள்ளது. ஜப்பானின் தலைநகர் டோக்‌கி‌யோ நகரில் உலகின் மிகவும் உயரமான தகவல் தொடர்பு கோபுரத்திற்கு கடந்த2008-ம் ஆண்டு ஜூலை மாதம் 14-ம் தேதி கட்டுமானப்பணிகள் துவங்கின..


மொத்தம் 634 மீ (2,080 அடி உயரம் ) உயரம் கொண்ட இந்த ‌கோபுரத்தின் அனைத்து கட்டுமானப்பணிகள் நேற்றுடன் நிறைவடைந்தன. இதற்கான விழா நடந்தது.
ஒபாயஷிகி கார்ப்பரேசன் நிறுவனம் இக்கோபுரத்தை கட்டிமுடித்துள்ளது.

இதில் இக்கோபுரத்தை வடிவமைத்த ‌டோபு டவர் ஸ்கை ட்ரீ கம்பெனியின் தலைவர் மிட்சாகிசுசுகி உள்ளிட்ட 70 -க்கும் மேற்பட்ட கட்டுமானத்துறை தலைவர்கள் கலந்து கொண்டனர்.உலகத்தின் கவனத்தை ஈர்க்கும் வகையில் இந்த ‌‌கோபுரம் அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது. வரும் மே மாதம் 22-ம் தேதி பொதுமக்கள் இக்கோபுரத்தை காணலாம். முன்னதாக ரிசர்வேசன் முறையில் அனுமதி வழங்கப்படவுள்ளது.

வரும் மார்ச் 22-ம் தேதி முதல் இக்கோபுரம் குறித்த இணையதளம் துவங்கப்படவுள்ளது. பின்னர் ஜூலை 10-ம் தேதி முதல் ரிசர்வேசன் துவங்கப்படவுள்ளதாக டோக்கியோ நகர நிர்வாகம் தெரிவித்துள்ளது.

by



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக