சனி, மார்ச் 03, 2012

41 MP Camera வை கொண்ட புத்திய மொபைல் போன் அறிமுகம் !



41 MP Camera  வை  கொண்ட புத்திய மொபைல் போன் அறிமுகம் !

Nokia 808






நொக்கியா நிறுவனம் இதுவரை வெளியானதில் மிகச் சிறந்த கெமராவைக் கொண்ட கையடக்கத்தொலைபேசியை வெளியிடவுள்ளதாக நாம் கடந்த சில தினங்களுக்கு முன்னர் உங்களுக்கு செய்தி வழங்கீருந்தேன்

தற்போது அச்செய்தி உறுதியாகியுள்ளது.

ஆம், 41 மெகாபிக்ஸல் கெமராவினைக் கொண்ட கையடக்கத்தொலைபேசியொன்றை நொக்கியா தற்போது அறிமுகப்படுத்தியுள்ளது.

கையடக்கத்தொலைபேசி கெமராக்களில் இது ஒரு புதிய புரட்சியையே ஏற்படுத்தியுள்ளது எனக் கூடக் கூறலாம்.

இது சில தொழில்ரீதியான கெமராக்களை விட சிறந்த கெமரவாகக் கருதப்படுகின்றது.

Nokia 808 PureView lens and sensor specifications

Carl Zeiss Optics
Focal length: 8.02mm
35mm equivalent focal length: 26mm, 16:9 | 28mm, 4:3
F-number: f/2.4
Focus range: 15cm – Infinity (throughout the zoom range)
Construction:
• 5 elements, 1 group. All lens surfaces are aspherical
• One high-index, low-dispersion glass mould lens
• Mechanical shutter with neutral density filter
Optical format: 1/1.2”
Total number of pixels: 7728 x 5368
Pixel Size: 1.4um

இக்கையடக்கத்தொலைபேசி 1080p Full HD வீடியோ ரெக்கோடிங் வசதியையும் கொண்டுள்ளது.

இது 1.3 GHz ARM 11 புரசசரைக் கொண்டுள்ளதுடன் 16 ஜி.பி உள்ளக நினைவகத்தினையும் இக்கையடக்கத்தொலைபேசி கொண்டுள்ளது.

ClearBlack AMOLED திரை, மேலதிகமாக நினைவகத்தினைக் கூட்டிக்கொள்ளும் வசதி ஆகியன இதன் சிறப்பம்சங்களில் சிலவாகும்.

எவ்வளவு நல்ல வசதிகளைக் கொண்டிருந்த போதிலும் இதன் தோற்றம் பெரிதாக யாரையும் கவரவில்லை. நொக்கியா 5800 மாதிரியை ஒத்ததாகவே இதன் முன்பக்க தோற்றம் அமைந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.



இது சந்தைக்கு வருவதற்கு இன்னும் சில மாதங்கள் ஆகலாம்.

தொழில்ரீதியான கெமரா ஒன்றினைக் கொள்வனவு செய்ய எண்ணம் இருந்தால் நீங்கள் இதையும் சற்று கருத்தில் கொள்ளலாம்.

ஏனெனில் தொழில்ரீதியான கெமராக்களின் விலை ஒப்பீட்டளவில் அதிகம் என்பதுடன் உருவமும் சற்று பெரியதாகும்.

ஆனால் இதைப்போன்ற ஒன்றைக் கொள்வனவு செய்யும்போது காவிச் செல்வதில் சிரமமில்லை. பொறுத்திருந்து பார்ப்போம் சந்தையில் இதன் நிலை என்ன என்பதனை.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக