"ஹஜ்' செல்ல விண்ணப்பிக்கும் மனு ஏப்ரல் 16ம்தேதி கடைசி நாள்
ஹஜ் புனிதப்பயணம் செல்ல விண்ணப்பிக்கும் மனுவை,
ஏப்ரல் மாதம் 16ம்தேதிக்குள் தமிழ்நாடு மாநில ஹஜ் குழுவிற்கு சமர்பிக்க
வேண்டும் என, தமிழக அரசு அறிவித்துள்ளது.தமிழக அரசு வெளியிட்ட
செய்திக்குறிப்பு:தமிழ்நாட்டிலுள்ள முஸ்லிம் சமுதாயத்தைச் சேர்ந்த
மக்களிடமிருந்து, ஹஜ் புனிதப் பயணம் மேற்கொள்வதற்கான விண்ணப்பங்களை மும்பை,
இந்திய 3ஹஜ் குழு சார்பாக தமிழ் நாடு மாநில ஹஜ் குழு பெற்றுக் கெள்ள
இருக்கிறது.
by
ஹஜ்
2012-க்கான விண்ணப்பப் படிவங்களை சென்னை-34 புதிய எண்-13 மகாத்மா காந்தி
சாலை, நுங்கம்பாக்கம் நெடுஞ்சாலையில் ரோசி டவர், மூன்றாம் தளத்தில் இயங்கி
வரும் தமிழ்நாடு மாநில ஹஜ் குழுவின் நிர்வாக அலுவலரிடமிருந்து பெற்றுக்
கொள்ளலாம் அல்லது இவ்விண்ணப்பங்களை www.hajcommittee.com என்ற இணைய தளம்
மூலமாகவும் மற்றும் விண்ணப்பப் படிவத்தை நகல்கள் எடுத்தும்,
உபயோகப்படுத்தலாம்.பாஸ்போர்ட்டில் மட்டுமே ஹஜ் பயணத்திற்கான விசா
வழங்கப்படும் என சவுதி அரேபிய அரசு அறிவித்துள்ளதால், ஹஜ் 2012ல் பன்னாட்டு
பாஸ்போர்ட்டுகளை வைத்திருப்பவர்கள் மட்டுமே ஹஜ் பயணத்திற்கு விண்ணப்பிக்க
அனுமதிக்கப்படுவர். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை தமிழ்நாடு மாநில
ஹஜ் குழுவிற்கு ஏப்ரல் மாதம் 16ம்தேதிக்குள் சமர்பிக்க வேண்டும்.இவ்வாறு
செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
by
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக