சனி, மார்ச் 03, 2012

பெட்ரோல் விலை உயர்வுக்கு இந்தியா-சீனா காரணம்: அமெரிக்க அதிபர் ஒபாமா குற்றச்சாட்டு

 பெட்ரோல் விலை உயர்வுக்கு இந்தியா-சீனா காரணம்: அமெரிக்க அதிபர் ஒபாமா குற்றச்சாட்டு





அமெரிக்காவில் காலன் (4 1/2 லிட்டர்) ஒன்றுக்கு 4 டாலர் என்ற அளவில் பெட்ரோல் விலை உயர்ந்துள்ளது. இதற்கு மக்களிடையே எதிர்ப்பு கிளம்பியுள்ளது. அமெரிக்காவில் அதிபர் தேர்தலில் நடைபெற உள்ள நிலையில் பெட்ரோல் விலை உயர்வை மையப்படுத்தி எதிர்கட்சியான குடியரசு கட்சியினர் தங்கள் பிரசாரத்தை தீவிரப்படுத்தியுள்ளனர்.

இந்த பிரசாரத்தை முறியடிக்கும் முயற்சியில் அதிபர் ஒபாமா ஈடுபட்டுள்ளார். நியூ ஹாம்ஷியரில் உள்ள நாஷுவாவில் நடந்த கூட்டத்தில் ஒபாமா கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் பெட்ரோல் விலை உயர்வுக்கு இந்தியாவும், சீனாவும் காரணம் என குற்றம்சாட்டினார்.

இந்தியா, சீனா மற்றும் பிரேசில் நாடுகளில் ஆட்டோ மொபைல் வாகனங்களின் விற்பனை அதிகரித்துள்ளது. இந்தியா மிக வேகமாக வளர்ச்சி அடைந்து வருகிறது.

இந்தியர்களும், சீனர்களும் வசதி படைத்தவர்களாகி விட்டனர். எனவே அவர்கள் அமெரிக்கர்களை போன்று அதிக கார்களை தாராளமாக வாங்குகின்றனர். அவற்றில் பெட்ரோலை நிரப்பி ஓட்டி செல்கின்றனர். சீனாவை பொறுத்தவரை கடந்த 5 ஆண்டுகளில் 3 மடங்கு அதிகமாக கார் விற்பனை ஆகி உள்ளது.

கடந்த 2010-ம் ஆண்டில் மட்டும் அங்கு 1 கோடி கார் விற்கப்பட்டுள்ளது. அந்த ஒரு நாட்டில் மட்டும் ஆண்டுக்கு அவ்வளவு கார்கள் விற்பனை உள்ளது. இதனால் சீனா, இந்தியா போன்ற நாடு களில் பெட்ரோல் மிக அதிக அளவில் பயன்படுத்தப்பட்டுள்ளது. எனவே உலக அளவில் தட்டுப்பாடு ஏற்பட்டு அதன் மூலம் பெட்ரோல் விலை உயர்ந்துள்ளது.

இவ்வாறு அதிபர் ஒபாமா பேசினார்.


by

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக