திங்கள், மார்ச் 05, 2012

ராணுவத்தில் வெடிமருந்துகள் பற்றாக்குறை

நமது இந்தியாவிடம் துப்பாக்கி உண்டு தோட்டா இல்லை.!?






ராணுவத்தில் வெடிமருந்துகள் பற்றாக்குறை : அமைச்சர் அந்தோணிக்கு தளபதி சிங் கடிதம்

ராணுவத்தில் வெடிமருந்துகள் பற்றாக்குறை கடுமையாக உள்ளது. போர் உருவானால், தற்போதுள்ள வெடிமருந்துகள் இருப்பு இரண்டு நாட்களில் காலியாகி விடும்' என, ராணுவ தளபதி வி.கே.சிங் தெரிவித்துள்ளார்.


  

ராணுவ தளபதி வயது விவகாரம் தொடர்பாக, ராணுவ நிர்வாகத்திற்கும், ராணுவ அமைச்சகத்திற்கும் இடையே ஏற்பட்ட மோதல், சமீபத்தில் சுப்ரீம் கோர்ட் அளித்த தீர்ப்பால் முடிவுக்கு வந்தது. இதனால், வரும் மே மாதம் 31ம் தேதி, தற்போதைய ராணுவ தளபதி வி.கே.சிங் ஓய்வு பெறுகிறார். புதிய ராணுவ தளபதியாக பைக்ராம்சிங் பதவியேற்க உள்ளார்.

இந்நிலையில், ராணுவ அமைச்சர் ஏ.கே.அந்தோணிக்கு, ராணுவ தளபதி வி.கே.சிங் எழுதியுள்ள கடிதத்தில் கூறியுள்ளதாவது:ராணுவத்தில் வெடிமருந்துகள் மற்றும் குண்டுகள் போன்ற போர்த்தளவாடங்கள் பற்றாக்குறை கடுமையாக உள்ளது. போர் உருவானால், தற்போது இருப்பில் உள்ள வெடிமருந்துகள் எல்லாம் இரண்டு நாட்களில் காலியாகி விடும். இந்த நிலைமை உருவாவதற்கு, ராணுவத்திற்கு வெடிமருந்துகள் சப்ளை செய்யும், சில நிறுவனங்களை கறுப்பு பட்டியலில் வைத்ததே காரணம். பீரங்கிகளுக்கு தேவையான மற்றும் வான் வழியாக தாக்குதல் நடத்த தேவையான வெடிமருந்துகள் தான் மிக குறைவாக உள்ளன.

இந்த சூழ்நிலையில், ராணுவத்திற்கான செலவுகளை அடுத்த பட்ஜெட்டில் குறைக்க, அரசு திட்டமிட்டுள்ளது சரியல்ல. அப்படிச் செய்தால், ராணுவத்தின் திறன் வெகுவாக பாதிக்கப்படும். சீனாவோ, 2012ம் ஆண்டில், 11.2 சதவீத அளவுக்கு ராணுவ செலவை அதிகரிக்க திட்டமிட்டுள்ளது. அதாவது, 5 லட்சத்து 32 ஆயிரம் கோடி ரூபாய் அளவுக்கு, பட்ஜெட்டில் ராணுவத்திற்கு ஒதுக்கீடு செய்யவுள்ளது.இவ்வாறு, வி.கே.சிங் கடிதத்தில் கூறியுள்ளார்.

நன்றி : தினமலர்


by

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக