வியாழன், மார்ச் 15, 2012

வெவெயில் காலத்தில் செல்லக்குட்டிகளை பாதுகாக்க என்ன செய்யலாம்.!க என்ன செயலாம்.!க என செயலாம்.!

வெயில் காலத்தில் செல்லக்குட்டிகளை பாதுகாக்க என்ன செய்யலாம்.!





பருவ நிலை மாற்றத்தினால் கோடை காலத்திற்கு முன்பே வெயில் வாட்டி வதைக்கத் தொடங்கியுள்ளது. வெப்பத்தினால் புழுக்கம் அதிகம் இருந்தாலும் மின்தடைவேறு வெப்பத்தின் கடுமையை அதிகப்படுத்துகிறது. பெரியவர்களினாலேயே வெப்பத்தை சமாளிக்க முடியாத நிலையில் பச்சிளம் குழந்தைகளின் பாடு பெரும்பாடாகிவிடுகிறது. கோடைவெப்பத்தில் இருந்து இளம் சிசுக்களை பாதுகாக்க சில டிப்ஸ்…

வியர்வை கவனம்

கோடை காலத்தில் குழந்தைகளுக்கு அதிகம் வியர்த்துக் கொட்டும். இதனால் உடைகள் நனைந்து அவர்களுக்கு சளி பிடிக்கும். அடிக்கடி தும்மல் போடுவார்கள். வியர்வை பற்றி அவர்களால் கூற முடியாது. அழுகையினால் மட்டுமே ஈரத்தை உணர்த்த முடியும் எனவே குழந்தைகளின் உடம்பில் வியர்வையினால் ஈரம் படிந்திருக்கிறதா என்று அவ்வப்போது சோதனை செய்யவேண்டும்.

ஒரே இடத்தில் படுத்து‌க்கொண்டிருப்பதால், குழந்தை உடலின் பின்பகுதி சீக்கிரம் உஷ்ணமாகிவிடும் என்பதால், குறைந்தது இரண்டு மணி நேரத்திற்கு ஒருதடவை, குழந்தையை இட‌ம்மாற்றி படுக்க வைக்க வேண்டும். அவ்வாறு தரையில் படுக்க வைக்கும்போது குழந்தைக்கு அருகில் ஒன்றின் மேல் ஒன்று அடுக்கப்பட்ட கனமான பொருட்கள் எதுவும் இருக்ககூடாது.

லேசான உடை

கோடையில் மெல்லிய பருத்தி உடைகளை அணிவிக்கலாம். இதனால் குழந்தையின் உடல் காற்றோட்டத்தை உணரும். எளிதில் மூச்சு விட முடியும்.

சூரிய ஒளியில் பாதுகாப்பு

குழந்தைகளை வெளியில் அழைத்துச் செல்லும் போது சூரிய ஒளியில் இருந்து பாதுகாக்க நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். குடை பிடித்துக்கொண்டு நிழலியே அழைத்துச் செல்லவேண்டும். பார்க், கடற்கரை பகுதிகளில் நிழலான இடங்களில் காற்றாட அழைத்துச் செல்வது பாதுகாப்பானது.

நீர் சத்து

கோடையில் குழந்தைகளுக்கு நீர்ச்சத்து அதிகம் தேவைப்படும். எனவே அவ்வப்போது கொதிக்க வைத்து ஆறவைத்த தண்ணீரை குடிக்கத் தரவேண்டும். இது வியர்வை மூலம் வெளியேறும் தண்ணீரை ஈடு செய்யும். தாய்ப் பால் ஊட்டும் பெண்கள் தங்கள் குழந்தைகளுக்கு சரியான நேரத்திற்கு பால் ஊட்டவேண்டும். நீர்ம ஆகாரங்களை அடிக்கடி குழந்தைகளுக்கு தருவது அவர்களின் ஆரோக்கியத்தை பாதுகாக்கும்.

தூக்கம் விழிக்கும்

கோடையில் குழந்தைகளை உறங்க வைப்பது எளிதான காரியமல்ல. அதுவும் மின்சாரம் இல்லையென்றால் அன்றைக்கு முழுக்க சிவராத்திரிதான். எனவே குழந்தைகளை உறங்கவைக்கும் அறையை குளுமை நிறைந்ததாக, காற்றோட்டமானதாக வைத்திருக்கவேண்டும். காற்றோட்டம் நிறைந்த ஜன்னல்கள் இருந்தால் அவற்றை நன்றாக திறந்து வெளிக்காற்று அறையினுள் வருமாறு அமைக்கவேண்டும். மஸ்லின் துணியினால் ஆன திரைச் சீலைகளை ஜன்னலுக்கு போடுவது குளுமையான காற்றினை அறைக்குள் தக்கவைக்கும்.

மிதமான காற்று

வெயில் காலத்தில் கட்டிலின் மேல் உஷ்ணம் அதிகம் இருக்கும் காரணத்தினால் உங்கள் குழந்தைகளை கட்டிலில் படுக்க வைப்பதற்குப் பதில், பாயை விரித்து, அதன் மேல் பருத்திப் புடவையை அடர்த்தியாக மடித்து தரையில் விரித்து குழந்தையை அதில் படுக்க விடலாம்.

குழந்தைக்கு வியர்த்துப் போகும் என்பதால், அதிகப்படியான மின்விசிறிக் காற்று குழந்தையின் முகத்திற்கு நேரே படும்படி படுக்க வைத்து, குழந்தைக்கு மூச்சுத்திணறலை ஏற்படுத்திவிடக்கூடாது. காற்றின் வேகம் மிதமானதாக இருப்பதே சிறந்தது.

by

வழிபோக்கன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக