வெளிநாட்டில் வசிப்பவரில் இந்தியர்களுக்கு 2ம் இடம்.
வாஷிங்டன்:
வெளிநாடுகளில் வசிப்பவர்களில் இந்தியர்கள் 2ம் இடத்தைப் பிடித்துள்ளனர்.
மெக்சிகோவைச் சேர்ந்தவர்கள் முதலிடத்தில் உள்ளனர். வெளிநாட்டினருக்கு
புகலிடம் அளிப்பதில் இந்தியா 9வது இடத்தில் உள்ளது. இந்தியாவில் 54 லட்சம்
வெளிநாட்டினர் வசிக்கின்றனர். வெளிநாடுகளில் வசிக்கும் வெளிநாட்டினர் பற்றி
சர்வதேச ஆய்வு நிறுவனமான பியூ ரிசர்ச் ஒரு ஆய்வறிக்கையை வெளியிட்டுள்ளது.
அதன் விவரம்: தாய்நாட்டிலிருந்து வெளியேறி வெளிநாடுகளில் வசிப்பவர்களில் 36
சதவீதம் பேர் அதாவது 7.7 கோடி பேர் 10 நாடுகளைச் சேர்ந்தவர்கள். மெக்சிகோ
நாட்டைச் சேர்ந்தவர்கள் 1.29 கோடியுடன் முதலிடத்தைப் பிடித்துள்ளனர். 1.18
கோடியுடன் இந்தியர்கள் 2ம் இடத்திலும்,
1.13 கோடியுடன் ரஷ்யர்கள்
3ம் இடத்தையும் பிடித்துள்ளனர். சீனா (84 லட்சம்), வங்கதேசம் (65 லட்சம்),
உக்ரைன் (65 லட்சம்), பாலஸ்தீனம் (57 லட்சம்) ஆகியவை அடுத்தடுத்த இடங்களைப்
பிடித்தன. வெளிநாடுகளில் வசிப்பவர்களில் 50 சதவீதம் பேர் அதாவது 11 கோடி
பேர் வெறும் 10 நாடுகளில் மட்டுமே வசிக்கின்றனர். வெளிநாட்டினர் அதிகம்
வசிக்கும் நாடுகளில் 4.3 கோடியுடன் அமெரிக்கா முதலிடத்தில் உள்ளது. ரஷ்யா
(1.23 கோடி), ஜெர்மனி (1.08 கோடி), சவுதி அரேபியா (73 லட்சம்), கனடா (72
லட்சம்), பிரான்ஸ் (67 லட்சம்), பிரிட்டன் (65 லட்சம்), ஸ்பெயின் (64
லட்சம்), இந்தியா (54 லட்சம்) மற்றும் உக்ரைன் (53 லட்சம்) ஆகியவை
வெளிநாட்டினர் அதிகம் வசிக்கும் முதல் 10ல் இடம்பெற்றுள்ள மற்ற நாடுகள்
ஆகும்.
by
வழிபோக்கன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக