புதன், ஜனவரி 18, 2012

முட்டையுடன் பேசும் கோழிகள் : விஞ்ஞானிகளால் கண்டுபிடிப்பு!




முட்டையுடன் பேசும் கோழிகள் : விஞ்ஞானிகளால் கண்டுபிடிப்பு!

‘எப்படா கோழி முட்டை போடும்’னு காத்திருந்து , அது போட்டவுடன் ‘லபக்’ கென்று எடுத்துக்கொண்டுபோய் ஓம்லட் போட்டு சாப்பிட்டுவிடுகிறோம்.. ஆனால் தனது முட்டையோடு உரையாடிக்கொண்டிருக்கும் கோழியின் மனது அப்போது எப்படித் தவிக்கும் என்று நாம் கண்டுகொள்வதில்லை.
ஆமாம் .. முட்டை வெளிவந்து 48 மணி நேரம்வரை அதனோடு தொடர்பு வைத்திக்கொண்டிருக்கிறது கோழி!  பதினொரு வகை ஒலிக்குறிப்புகள் வல்லுனர்களால் பதிவு செய்யப்பட்டு, மேற்படி தகவலை விஞ்ஞானிகள் கண்டுபிடித்திருக்கின்றனர். தாய்க் கோழி ‘ப்ளாக்’ என்ற பாச ஒலியை எழுப்புவதாகவும், கரு முட்டை ‘பீப்’ என்ற வாஞ்சை ஒலியை பதிலாக எழுப்புவதாகவும் கண்டறியப்பட்டுள்ளது.


48 மணி நேரம்வரை நீடிக்கும் இந்த உறவுப்பரிமாற்றம் பின்னர் நின்று  கோழியும் முட்டையும் வேறாகி விடுகின்றன ..

 by
 



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக