வியாழன், ஜனவரி 12, 2012


ஈரான் அணு விஞ்ஞானி குண்டு வீசி படுகொலை!



அமெரிக்கா, இஸ்ரேலின் கடும் எதிர்ப்புக்கிடையே ஈரான் அணு ஆராய்ச்சிகளில் ஈடுபட்டுள்ள நிலையில், அந் நாட்டைச் சேர்ந்த மூத்த அணு விஞ்ஞானி காரில் செல்லும்போது வெடிகுண்டு வீசி கொலை செய்யப்பட்டுள்ளார்.



முஸ்தபா அகமதி ரோஷன் என்ற அந்த விஞ்ஞானி ஈரானின் நடான்ஸ் பகுதியில் உள்ள யுரேனிய சுத்திகரிப்பு மையத்தில் பணியாற்றி வந்தார். வாயுக்களை பிரித்தெடுப்பதில் வல்லுனரான இவர் இன்று காலை தெஹ்ரான் அல்லாமே தபதி பல்கலைக்கழகம் அருகே காரில் சென்று கொண்டிருந்தார்.




 
 



      






அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் கேஸ் குண்டை கார் மீது ஒட்டிவிட்டு வெடிக்கச் செய்தனர். அந்த குண்டு வெடித்ததில் முஸ்தபா அந்த இடத்திலேயே பலியானார். காரில் இருந்த மேலும் இருவர் காயமடைந்தனர்.


தனது அணு உலைகள், அணு ஆயுதங்களுக்கான யுரேனியத்தை வாயுக்களைப் பிரித்தெடுக்கும் தொழில்நுட்பம் மூலம் சுத்திகரித்து வருகிறது ஈரான். இந்தத் தொழில்நுட்பத்துக்குத் தேவைப்படும் பாலிமெரிக் மெம்பரேன்ஸ் தயாரிப்பில் ஈடுபட்டு வந்தார் முஸ்தபா என்பது குறிப்பிடத்தக்கது.


இதற்கு முன்பும் ஈரானின் இரு அணு விஞ்ஞானிகள் இதே போன்ற கேஸ் வெடிகுண்டு தாக்குதல் மூலம் கொல்லப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. ஈரானின் அணு ஆராய்ச்சி மையத்தின் இப்போதைய தலைவரான பிரேயதோன் அப்பாசி, இதே போன்ற குண்டுவீச்சுத் தாக்குதலில் இருந்து கடந்த 2010ம் ஆண்டு நவம்பரில் உயிர் தப்பியதும் குறிப்பிடத்தக்கது.


இந்தத் தாக்குதல்களை இஸ்ரேலிய உளவு அமைப்பான மொஸாத் மற்றும் அமெரிக்க உளவுப் பிரிவான சிஐஏ தான் நடத்தியுள்ள ஈரான் குற்றம் சாட்டியுள்ளது. அணு ஆராய்ச்சிகளை நிறுத்தாவிட்டால், ஈரானின் அணு ஆராய்ச்சி மையங்கள் மீது போர் விமானங்கள் மூலம் குண்டுவீசுவோம் என இஸ்ரேல் எச்சரித்து வருவதும் குறிப்பிடத்தக்கது.

ஆனால், அணு உலைகளுக்குத் தேவையான எரிபொருளுக்காகவே யுரேனியத்தை சுத்திகரித்து வருவதாகவும், ஆயுதம் ஏதும் தயாரிக்கவில்லை என்றும் ஈரான் கூறி வருகிறது.


அமெரிக்கா, இஸ்ரேல் விமானத் தாக்குதலில் இருந்து தனது அணு ஆராய்ச்சி மையங்களைக்காக்க, அவற்றை பெர்டோவில் உள்ள மலைகளைக் குடைந்து அதற்கு அடியில் அமைத்துவிட்டது ஈரான்.


 நன்றி : http://eutamilar.eu

  by
 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக