திங்கள், ஜனவரி 23, 2012

இடுகைத் தலைப்பு

 

மொபைல் & இணையம் வழி Google AdSense ஐ விட இனையற்ற பணம் 

tamil


Google Adsense தமிழ் பதிவர்களை வஞ்சித்துவிட்டாலும் உங்களுக்கு ஒரு இனிப்பான செய்தி .இணயம் மூலம் நேர்மையான வழியில் உழைத்து Google Adsense விட அதிகம் பணம் சம்பாதிக்கலாம் .

இணையம் மூலம் பணம் சம்பாதிக்க ஆயிரம் வழிகள் இருந்தாலும் அவற்றில் பெரும்பாலும் முதலில்  நம்மை கொஞ்சம் பணம் கட்டச்சொல்வார்கள் அதற்க்கு தகுந்தவாறு  Data தருவார்கள் நாம் Data Entry மூலம் தகவலை அவர்களுக்கு தரவேண்டும் சில மாதம் கழித்து  நீங்களே இனி சொந்தமாக செய்துகொள்ளுங்கள் கைவிரித்துவிடுவார்கள் மேலும் விளம்பரங்களை படித்தால் காசு என்று கூறும் வலைத்தளங்கள் இருக்கின்றன  அவைகள் ஒரு விளம்பரத்திற்க்கு பத்து காசு  அல்லது இருபது காசு என தருகின்றன  இவைகள் மூலம்  நாம் உருபடியாக  அதிகம் சம்பாதிக்க முடியாது  .

அன்பு நண்பர்களே  நான் குறிப்பிடும் இணையத்தை  எனக்கு அறிமுகம் செய்வதற்க்கும் அதில் ஒரு பயிற்சிக்கும் 18000 ருபாய்  கேட்டார்கள்  நம்மால் அவ்வளவு பணம் கட்ட முடியாது  என  நான் சேரவில்லை ஆனல்   ஒரு முறை எண் நண்பன் ஒருவரை என்னிடம் அழைத்து வந்தான் அவர்  18000 ருபாய் கட்டி இனையம் வழி வருமானதில் சேர்ந்திருக்கிறார் எனவும் அதில் ஆங்கிலத்தில் சிறுது சந்தேகம் என்றும் கூறினான் வந்த நபரோ என்னிடம் அந்த வலைதளத்தை கூறாமல் சந்தேகம் மட்டும் கூறினார் எங்கே  நான் அந்த வலைத்தளம் மூலம்  சம்பாதித்து  விடுவேன் என்று . வலைத்தளம் தெரியாமல் விளக்கமளிக்க முடியாது என அவரை திருப்பி அணுப்பி விட்டேன்  ஒரு வாரம் கழித்து  அந்த நபர் அந்த வலைத்தளத்தை  பற்றி யாருக்கும் சொல்லாதீர்கள்  என வேண்டுகோள் கூறி விளக்கம் கேட்டார் நான் உரிய விளக்கம் அளித்து அணுப்பினேன்  அந்த நபர் ஒரு மாதத்தில்  100  டாலர் சம்பாதித்து அதற்க்கான  செக் காண்பித்தார்  அவர் ஆங்கிலம் சரிவர தெரியாதவர் பத்தாவதுவரை மட்டும் படித்தவர் என்பது குறிப்பிட்த்தக்கது  பின்பு அந்த வலைதளத்தை முழுவதும் ஆராய்ந்தேன்  நான் அறிந்த செய்திகளை  உங்களிடம் பகிர்ந்து கொள்வதில் பெரிதும் மகிழ்ச்சி கொள்கிறேன் .

அமேசான் என்ற மிக பிரபலமடைந்த வலைத்தளம் www.mturk.com
வலைத்தளத்தை  நடத்துகிறது . இதில்    Human intelligence Task  எனப்படும் HITs வடிவில் பல்வேறு வேலைகள்  இருக்கும் அதனை நாம் செய்ய வேண்டும் .
வேலைகள் என்றால் கடினமாக இருக்காது காப்பி & பேஸ்ட் செய்வது போட்டோக்களை வரிசைபடுத்துவது , இமெயில் உருவாக்குவது , யூடூப்பில் அவர்களின் வீடியோ படத்தை பார்த்து அதில் வரும் இணையதளங்களின் பெயர்கள் கூறுவது , பொது அறிவு கேள்விகளுக்கு பதில் கூறுவது போல எளிமையானதாக இருக்கும்  இதற்க்கெல்லாம் $ 0.10 முதல் $ 0.25  வரை தருவார்கள் உங்களுக்கு ஆங்கிலம் நன்றாக தெரிந்தால் நேர்மையான சுயமான கட்டுரைகள் எழுத சொல்வார்கள் . இணையத்தில் இருந்து கட்டுரைகளை காப்பி & பேஸ்ட் செய்தால் அதை கண்டுபிடித்து நமது கணக்கை முடக்கி விடுவார்கள் மேலும் Audio Transcription எனப்படும் ஒலி வடிவ கோப்புகளை டெக்ஸ்ட்டாக மாற்றம் செய்ய வேண்டும்  இதற்க்கெல்லாம் $ 5 முதல் $ 10  டாலர் வரை தருவார்கள்  இந்த வேலைகள் மட்டுமல்ல  இதுபோல பல்வேறு வேலைகள் ஆயிரக்கணக்கில் காணப்படும் இதில்  இருந்து நமக்கு செய்ய தெரிந்த வேலைகளை  தேர்ந்தெடுத்து செய்ய வேண்டும்  அதற்க்கான  பணம் நமது கணக்கில் சேர்க்கப்படும்  சேர்ந்த பணத்தை எப்போது வேண்டுமானாலும் இந்தியன் கரண்சியாக நமக்கு அனுப்பிக்கொள்ளலாம் . பணம் அனுப்பும்போது இந்தியன் கரண்சியாக மாற்றி நமக்கு செக் அனுப்புவதற்காக  $ 5  பிடிதம் செய்து கொள்வார்கள்  நான் ஒரு வாரதில்  $ 18  சேர்த்துள்ளேன் எனக்கு இதுவரை பணம் அனுப்பிக்கொள்ளவில்லை $ 50 சேர்ந்த்தும் அனுபிக்கொள்ளலாம் என உத்தேசித்து உள்ளேன் நான் பெற்ற இன்பத்தை Google Adsense மூலம் பணம் கிடைக்காதா என ஏங்கும் என்னுடைய தமிழ் பதிவுலக சொந்தங்களும் பெறவேண்டும் என்பதற்காக  உடனே பதிவிடுகிறேன் .


www.mturk.com   மூலம் வருமான வாய்ப்பை கூறிய அந்த நபர் அதில் புதிய கணக்கை துவங்கும் வழிமுறையை அவரே அறிந்திருக்கவில்லை அவரின் யூசர்நேம் , பாஸ்வேர்டை அவர் சேர்ந்த நிறுவனமே கொடுத்துள்ளது அவருக்கும் சொல்லிதரவில்லை  ஏன் எனில் அந்த நிறுவணத்தின் வருமாம் போய்விடுமே . www.mturk.com தளத்தில் தற்போது அமெரிக்கா , ஐரோப்பா உள்ளிட்ட நாடுகளை சேர்ந்தவர்கள் மட்டும் தான் சேரமுடியும்  ஆனால் அவருக்கு  எப்படி யூசர்நேம் , பாஸ்வேர்டு  அந்த நிறுவனம் கொடுத்தது என்பது எனக்கு புதிராக  இருந்தது பின்பு  இணைய தேடலில்  அதற்கான  விடையை கண்டுபிடித்து விட்டேன் முதலில் http://www.amazon.com வலைதளத்திற்க்கு சென்று உங்களது இமெயில் முகவரி கொடுத்து அமேசானின் புதிய கணக்கை துவக்கிக்கொள்ளுங்கள் பின்பு அமேசானின் யூசர்நேம் , பாஸ்வேர்டு கொண்டு www.mturk.com தளத்தில் Worker எனப்படும் பகுதியில் நுழைந்து முதலீடு ஏதும் இல்லாமல் அள்ள அள்ள குறையாத பணத்தை  நேர்மையான வழியில் சம்பாதிக்க தொடங்குங்கள் மேலும் இந்த வலைதளத்தை மொபைல் மூலமாக அணுகி அதிலிருந்தும் பணம் சம்பாதிக்கலாம் .
பணம் உங்களின் கணக்கில் சேர துவங்கியதும் எனக்கு ஒரு கருத்துரை மட்டும்  சொல்லுங்கள் எனக்கு அது போதும்  உங்களுக்கு சந்தேகம் இருந்தால் கருத்துரையில் கூறவும் அதை விளக்கி ஒரு பதிவு இடுகிறேன்   எனக்கு தெரியாத கருத்துகளை நீங்கள் கண்டுபிடித்தால்  நீங்களும் அதை பற்றிய கருத்துகளை பதிவிடுங்கள் நம்முடைய தமிழ் சொந்தங்களும் வாழ்வில் உயரட்டுமே.
நேசம் நிறைந்த நெஞ்சமுடன் 
.குரு
நன்றி  : http://nilanilal.blogspot.com

by

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக