செவ்வாய், ஜனவரி 03, 2012

 டெக்னாலஜி வளர வளர திருட்டு டெக்னாலஜிகளும் நன்றாகவே.






டெக்னாலஜி வளர வளர திருட்டு டெக்னாலஜிகளும் நன்றாகவே வளர்கிறது. ICICI, HDFC வங்கிகள் தங்கள் வாடிக்கையாளர்களுக்கு கடன் கொடுத்து அதை திருப்பி செலுத்தும்போது பணமாக வாங்காமல் செக்காக (Cheque) கேட்கிறது. கடன் பெற்றவர்கள் செக்கை குறித்த தேதிக்குள் கொடுத்தாலும் வங்கிகள் தாமதமாக செக்கை கலெக்சனுக்கு அனுப்பி தாமதக்கட்டணம் வசூலிக்கிறார்கள். சரி... செக்கை கொடுத்தால்தானே இந்தப் பிரச்சனை? வங்கி இணையதளத்தின் மூலம் பணம் கட்டலாம் என்று சென்றால் அங்கேயும் பிரச்சனை.
வங்கி வாடிக்கையாளர்களின் மெயில் முகவரிகளை எப்படியோ தெரிந்து கொள்ளும் போலி வங்கி இணைய தளம் அந்த மெயில் முகவரிக்கு மெயில் அனுப்புகிறது. வாடிக்கையாளரும் அவருடைய வங்கியில் இருந்துதான் மெயில் வந்திருக்கிறது என்று நினைத்து மெயில் இன்பார்மேஷன் கேட்கும் அனைத்து தகவல்களையும் தந்து வினையை தேடிக் கொள்கிறார். அதாவது மிகவும் அவசரம் என்று கேட்கும் இந்த மெயிலில் உள்ள இணைப்பு வேறொரு போலி இணையதளத்துக்கு கூட்டிச்செல்லும். அங்கு வாடிக்கையாளரின் கணக்கு எண், கிரெடிட் கார்டு எண், டெபிட் கார்டு எண், லாகின் ஐடி, பாஸ்வேர்டு போன்றவற்றை வாங்கிக் கொண்டு கழுத்தை அறுத்து அனுப்பி விடுவார்கள். கணக்கில் உள்ள பணமெல்லாம் கோவிந்தா!
இதை தவிர்க்க சில முன்னேற்பாடுகள் உள்ளது. நாம்தான் இதை கவனமாக பின்பற்றி பாதுகாப்பாக வங்கி இணைய தளத்தை பயன்படுத்த வேண்டும். 




 
1. இணையதளத்தின் கீழ்பகுதியில் உள்ள டூல் பாரில் ஒரு பூட்டு சின்னம் இருக்கும். பெரும்பாலான போலி இணையதளங்களில் இந்த பூட்டு சின்னம் இருக்காது.



 
2. சாதாரணமாக அனைத்து இணைய தளங்களும் http:// என்று தொடங்கும். ஆனால் வங்கி போன்ற பாதுகாப்பான இணையதளங்களில் லாக் இன் செய்யும் போது அது https:// என்று மாறி விடும். போலி இணைய தளங்களில் லாக் இன் செய்தாலும் அது http:// என்றே இருக்கும்.
3. உங்கள் மெயில் முகவரிக்கு வரும் இணைப்பு மூலம் உங்கள் வங்கி கணக்கை செயல் படுத்தாதீர்கள். அந்த மாதிரி மெயில்களை குப்பை தொட்டிக்கு அனுப்பி வைப்பதே சாலச்சிறந்தது. உங்கள் வங்கி முகவரிக்கு நேரடியாகச் சென்று லாக் இன் செய்வதுதான் பாதுகாப்பானது. உங்கள் மெயில் முகவரிக்கு வரும் மெயிலில் கீழ்கண்டவாறு ஆங்கிலத்தில் இருக்கும். அதை பார்த்து ஏமாந்து விடாதீர்கள்.

 # Alerts !!! Upgrade And Secure Your Online Account Immediately.

 # Urgent Security Warning

  # ICICI Online Banking Account Security Upgrade

 4. ப்ரவுசிங் செண்டருக்கு சென்று வங்கி நடவடிக்கைகளை மேற்கொள்வதை கூடிய வரையில் தவிர்க்கவும்.
5. வங்கி கணக்கு பாஸ்வேர்டை அடிக்கடி மாற்றிக் கொள்வது நல்லது.



 
இந்த வழிமுறைகள் எல்லாம் தற்போதைக்கு பாதுக்காப்பானது. எதிர்காலம் எப்படியோ?
 
நன்றி  : http://www.24dunia.com/tamil
by






கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக