புதன், ஜனவரி 02, 2013

நன்றி அம்மா.


"பிரமசாரியம்" என்னும் கிறுக்குத்தனத்திற்கு சாட்டையடி கொடுத்த  அம்மாவிற்கு நன்றி,நன்றி. !





வழமைக்கு மாறாக, மிக அபூர்வமாக கட்சிக் கூட்டத்தில் தன்னைப் பற்றி மனம் திறந்துள்ளார், அ.தி.மு.க. பொதுச்செயலாளர் ஜெயலலிதா. “பெரும்பாலான பெண்கள், இளம் வயதில் தகப்பனாரை சார்ந்திருப்பார்கள். பெரியவர்களான பிறகு கணவரை சார்ந்திருப்பார்கள். வயதான பிறகு பிள்ளைகளை சார்ந்திருப்பார்கள்.

ஆனால், என்னைப்போன்ற சில பெண்மணிகளும் இருக்கிறார்கள். நான் யாரையும் சார்ந்திருக்கக்கூடிய ஒரு கொடுப்பனை எனக்கு இல்லை.

யாரையும் சார்ந்திருக்கக் கூடிய வாய்ப்பு எனக்கு வாழ்க்கையில் அமையவில்லை. எப்போதுமே நல்லது என்றாலும், கெட்டது என்றாலும், எனக்கு நானே தான் முடிவுகளை எடுத்துக்கொண்டு, வாழ்க்கையில் எதுவந்தாலும் நானே தனித்து நின்று சந்தித்து கொண்டு, இப்படியே நான் செயல்பட்டு கொண்டிருக்கிறேன்.

இது என்னுடைய தனித்திறமை என்று நான் சொல்லமாட்டேன். இது விதி. தலையெழுத்து” என்று பேசினார் அவர்.

அ.தி.மு.க. பொதுக்குழுக் கூட்டம் நேற்று சென்னை வானகரத்தில் உள்ள ஸ்ரீவாரு வெங்கடாஜலபதி பேலஸ் மண்டபத்தில் நடந்தது. கட்சியின் பொதுச்செயலார் ஜெயலலிதா பேசியபோது, “அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் என்ற பெயருக்கு முன்னால் அனைத்திந்திய என்ற வார்த்தையை எம்.ஜி.ஆர்.சேர்த்ததற்கான காரணத்தை வரும் நாடாளுமன்றத் தேர்தலில் நாம் ஈட்டப்போகும் வெற்றியின் மூலம் அரசியல் உலகுக்கு எடுத்துக் காட்ட வேண்டும்” என்றார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக