செக்ஸ் புகாரில் சிக்கி அதிகாரமிக்க பதவியை
பறிகொடுத்திருக்கும் அமெரிக்காவின் உளவு அமைப்பான சி.ஐ.ஏ.வின் முன்னாள்
தலைவர் பெட்ராய்ஸை கல்லால் அடித்தே கொல்ல வேண்டும் என்று தலிபான்கள்
கருத்து தெரிவித்திருக்கின்றனர்.
|
|
பெட்ராய்ஸ்தான் ஆப்கானிஸ்தானில் நிலைகொண்டிருக்கும் நேட்டோ படைகளின் கமாண்டராகவும் இருந்தவர். அவர் பதவியை பறிகொடுத்திருக்கும் நிலையில் வெளிநாட்டு செய்தி நிறுவனங்கள் தலிபான்கள் தரப்பில் கருத்து கேட்டிருக்கின்றன.
பெயர் வெளியிட விரும்பாத இயக்கத்தைச் சேர்ந்த ஒருவர் கூறுகையில், எல்லா அமெரிக்கர்களும் இப்படித்தான் இது ஒன்றும் புதிதல்ல என்று கூறியிருக்கிறார். இதேபோல் பஸ்துன் இனக் குழுவின் பார்வையில் இந்த மாதிரி தப்பு செய்கிறவர்களை அவரது உறவினர்களே சுட்டுக் கொல்லணும் என்றும் ஷரியா சட்டத்தின் பார்வையில் இத்தகைய செயலுக்கு கல்லால் அடித்தே கொல்ல வேண்டும் என்றும் அவர் சுட்டிக்காட்டியிருக்கிறார்.
மேலும் அமெரிக்கர்களும் மேற்கத்திய நாடுகளும் கட்டுப்பாடுகளற்ற பாலுறவு சமூகத்தினராக வாழ்கின்றனர். அவர்களிடம் இதைத்தவிர வேறு எதை எதிர்பார்க்க முடியும் என்றும் சுட்டிக்காட்டியிருக்கின்றார் தலிபான் தளபதி
தலிபான்கள் சொன்னார்களோ இல்லையோ நிச்சயம் இவனை கல்லால் அடித்தே கொல்ல வேண்டும்.
இதுதான் அமெரிக்க பெண் சுதந்திரம்.
அமெரிக்க விமானப் படையில், 50 பெண்கள்,
பயிற்சியாளர்களால், பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டுள்ளனர்.அமெரிக்காவின்,
டெக்சாஸ் மாகாணத்தில், லேக்லாண்ட் என்ற இடத்தில், விமானப்படை பயிற்சி தளம்
உள்ளது. விமானப் படைக்கு தேர்வானவர்களுக்கு, இங்கு பயிற்சி
அளிக்கப்படுகிறது.பயிற்சிக்கு வந்த பெண்களிடம், பயிற்சி கொடுக்கும்
அதிகாரிகள், தவறாக நடப்பதாக ஏராளமான புகார்கள் வந்தன. இது தொடர்பாக விசாரணை
நடத்தியதில், 23 அதிகாரிகள், 50 பெண்களை, பாலியல் பலாத்காரம் செய்தது
கண்டு பிடிக்கப்பட்டது.இதில், 35 பெண்கள், ஒரே அதிகாரியிடம், கற்பை
பறிகொடுத்துள்ளனர். இந்த விஷயம் தெரிய வந்ததும், பயிற்சி பிரிவின் தலைவர்,
பணி நீக்கம் செய்யப்பட்டார்.இந்த விவகாரம் தொடர்பாக விசாரணை நடத்திய
பயிற்சி துறை தளபதி எட்வர்ட் ரைஸ் குறிப்பிடுகையில், "விமானப் படையில்
பாலியல் வன்முறைகளை ஒரு போதும் அனுமதிக்க முடியாது. பயிற்சிக்கு வந்த
பெண்களை சீரழித்த, 23 அதிகாரிகள், "டிஸ்மிஸ்' செய்யப்பட்டுள்ளனர். பல
பெண்களை கற்பழித்த லூயிஸ் வாக்கர் என்பவருக்கு, 20 ஆண்டு சிறை தண்டனை
வழங்கப்பட்டுள்ளது' என்றார்.
தினமலர்
|
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக