ஞாயிறு, ஆகஸ்ட் 26, 2012

முயற்சியுடையார் இகழ்ச்சியடையார்,


இது கதையா, இல்லை உண்மையா?







கிழக்கு ஆசிய நாடுகளில், ஒருவிதமான பூச்சியை பிடித்து, ஒரு கண்ணாடி பெட்டியினுள் அடைத்து மூடிவிடுவார்கள். அந்த கண்ணாடி யில் சிறிய துவாரங்கள், சுவாசிப்பதற்காக இருக்கும்.

அந்த பூச்சியானது, மேலே நோக்கிப் பறந்து, வெளியே போக முயற்சி பண்ணும். மேலே உள்ள கண்ணாடியில் இடித்து, “ஆ! அம்மா !! வலிக்கு தே, இனி மேலே நோக்கிப் போகும் போது பார்த்து போகனும் ” என்று தீர்மானித்துக் கொள்ளும். அதேபோல, இடது புறம் உள்ள கண்ணாடி வழியாக, வெளியே செல்ல முயற்சிக்கும். அதே அடி. அதே வலி. அதே தீர்மானம். இப்படியாக எல்லா திசைகளிலும், பறந்து, வெளியே செல்ல முயன்று, இறுதியாக ஒரு முடிவுக்கு வந்துவிடும்.

சரி, இதுதான் நமது விதி. இந்த கூண்டுக்குள் தான் இனி நம் வாழ்நாளை கழிக்க வேண்டும் போல இருக்கு. இனியும் முயற்சி செய்து பலன் இல்லை. ஆக, இந்த கூண்டுக்குள், நாம் எப்படி சந்தோஷமாக, நிம்மதி யாக இருக்கலாம் என்று எண்ணத் தொடங்கிவிடும். அதோடு கூண்டை தாண்டி வெளியே செல்லும் முயற்சியை கைவிட்டு விடும். இப்போது மேலே நோக்கி பறக்கும். சரியாக ஒரு இன்ச் தூரத்தில், பிரேக் போட்டது போல் நின்று விடும். இந்த தடவை, கண்ணாடியில் இடி இல்லை அதனால் வலி இல்லை. அதே போல், இடது பக்கம் பறக்கும். ஒரு இன்ச் தூரத்தில் நின்று விடும். அனைத்து பக்கங்களிலும் பறக்கும். எந்தக் கண்ணாடியிலும் இடிக்காமல் பறக்கும். அந்த திறமையை, வாழ்க்கை அளித்த பாடம் என்று பெருமையாக எண்ணிக் கொள்ளும்.

இப்படி, அந்த பூச்சி, எந்த பக்கத்திலும் இடிக்காமல் பறப்பதை பார்த்த வுடன், அவர்கள், மேலே உள்ள கண்ணாடி, மற்றும் பக்கங்களில் உள்ள கண்ணாடியை எடுத்து விடுவார்கள். இப்போது, மேலே கண்ணாடி இல்லை. பக்கங்களில் கண்ணாடி இல்லை. ஆனால், அந்த பூச்சி, ஆனந்தமாக, இன்னும் அந்த ஒரு இன்ச் தூரத்தில் பிரேக் போட்டு நின்று, இல்லாத கண்ணாடிகளில் இடிக்காமல், அந்த வேலி இல்லாத பெட்டிக் குள், தன் வாழ்க்கையை வாழ்ந்து கொண்டு இருக்கிறது.

அந்த பூச்சி மட்டும், பழைய வலியை மறந்து, கொஞ்சம் புது முயற்சி செய்து இருந்தால்… அந்த ஒரு இன்ச் தூரத்தை கடந்து இருக்கும்.ஒரு இன்ச் தூரத்தைக் கடந்து இருந்தால், இந்த உலகத்தையே சுற்றி வந்து இருக்கும்.

நம்மில் பலர், இந்த பூச்சியை போன்று வாழ்ந்து கொண்டு இருக்கிறோம்.
முயற்சி செய்வதை கைவிட்டு விடுவது உண்டு.
இல்லாத வேலியினுல், எதிலும் இடிக்காமல், வீணாக எந்த புது முயற்சி யிலும் ஈடுபடமால், இது தான் விதி என்று பலர் வாழ்ந்து கொண்டு இருக்கின்றோம்.

நாம், அந்த ஒரு இன்ச் தூரத்தை தாண்டி விட்டால்…வாழ்க்கையில் நாம் சாதனை புரிய …வானமே எல்லை....

முயற்சியுடையார் இகழ்ச்சியடையார், முயற்சி திருவினையாக்கும் முயற்சியின்மை இன்மை புகுத்திவிடும்.. வாழ்வில் வெற்றி பெற நமக்கு அமைத்துக் கொண்ட வேலிகளைத்தாண்டி முயற்சிகள் செய்வோம்.. வாழ்வில் வெற்றி பெறுவோம்.
1

விநாயகாசெந்தில்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக