கரு வளர்ச்சி - விந்துத் துளி.
ஒரு குழந்தை ஆணாகவோ, பெண்ணாகவோ இந்த உலகில் பிறப்பதை ஏதோ காலத்தின் கட்டாயம் என்று நாம் நினைக்கிறோம்
ஆனால் அல்லாஹ்வின் வல்லமையை நாம் சிந்திப்பதில்லை இதைப்பற்றி சிந்திக்க
முற்பட்டுவிட்டால் இணைவைத்தலை தவிர்த்து அல்லாஹ்வுக்கு முற்றிலும்
வழிபடக்கூடிய இறைவிசுவாசியகாகவும் அல்லாஹ்வுக்கு உண்மையான அடியானாகவும்
மாறிவிடுவோமே!
“நிச்சயமாக (முதல்) மனிதனை களிமண்ணின் மூலச்சத்திலிருந்து படைத்தோம்.
பின்னர், (அதற்கான உள்ள) ஒரு பாதுகாப்பான இடத்தில் (கர்ப்பப்பையில்) நாம்
அவனை இந்திரியத் துளியாக்கினோம். பின்னர் அந்த இந்திரியத் துளியை ‘அலக்’
என்ற நிலையில் ஆக்கினோம்! பின்னர் அலக் என்பதை ஒரு தசைப்பிண்டமாக்கினோம்!
பின்னர் அந்த தசைப் பிண்டத்தை எலும்புகளாகவும் ஆக்கினோம்! பின்னர்
அவ்வெலும்புகளுக்கு மாமிசத்தை அணிவிதோம்! பின்னர் நாம் அதனை வேறு ஒரு
படைப்பாக் (மனிதனாகச்) செய்தோம்! (இவ்வாறு படைத்தவனாகிய) அல்லாஹ் பெரும்
பாக்கியமுடையவன் (படைப்பாளர்களில் எல்லாம்) மிக அழகான படைப்பாளன்.
(அல்குர்ஆன் 23:12-14)
ஆண் விந்துத் துளி பற்றிய அறிய தகவல்கள்
ஒரு ஆணிடமிருந்து வெளிப்படும் ஒருவகையான நீர் விந்துத்துளி என்று அறிவியல்
உலகம் வர்ணிக்கிறது. இந்த விந்துத்துளியைப் பற்றி 1400 வருடங்களுக்கு
முன்னர் அல்லாஹ் அருள்மறையில் குறிப்பிட்டள்ளான் இதைப் பற்றி அருள்மறை
பின்வருமாறு கூறுகிறது
”ஆகவே மனிதன், (தான்) எதிலிருந்து
படைக்கப்பட்டிருக்கிறான் என்பதை அவன் சிந்தித்து பார்க்க வேண்டாமா?
குதித்து வெளியாகும் (ஒரு துளி) நீரிலிருந்து அவன் படைக்கப்பட்டான். அது
(ஆணின்) முதுகந் தண்டிற்கும் கடைசி நெஞ்செலும்புகளுக்கும் மத்தியிலிருந்து
வெளிப்படுகிறது.” (அல் குர்ஆன்: 86:5-7)
இதோ மேலே காணும் படம் ஒரு ஆண் மகனுடைய விந்தணுவாகும் இது உருவாக 74
நாட்களாகிறது என்றும் விந்து நீரில் 100-300 மில்லியன் விந்தணுக்கள்
காணப்படுவதாகவும் ஆய்வாளர்கள் கூறுகிறார்கள்.
பெண்ணின் சினைமுட்டை பற்றிய அறிய தகவல்கள்
பெண்ணின் சினை முட்டையின் வடிவம் 0..2 மி.மீ அளவு கொண்டது என்றும் இந்த
சினை முட்டை வட்ட வடிவமுடையது என்றும் ஆய்வாளர்கள் கூறுகிறார்கள்.
இதோ மேலே கண்ட படம் பெண்ணின் சினை முட்டையாகும் இதை சற்று கவனித்துப்
பாருங்கள் இது முட்டையைப் போன்று வட்ட வடிவமாக காணப்படுவதால் இதற்கு சினை
முட்டை என்று பெயர் கொடுக்கப்பட்டுள்ளது!
பெண்ணின் சினைமுட்டையானது அவளுடைய சினைப் பையிலிருந்து வெளியாகிறது என்றும்
இந்த சினை முட்டையின் உயிர்க்காலம் ஒருநாள் அதாவது 24 மணி நேரம் என்றும்
மேலும் இந்த சினை முட்டை சினைப் பாதையின் புறச் சுவர்களால் உறிஞ்சப்பட்டு
சினைப்பையை அடைகிறது ஆய்வாளர்கள் கூறுகிறார்கள்.
விந்தணுவும் சினைமுட்டையும் ஒன்றுடன் ஒன்று சேருகிறது
ஒரு ஆணுடைய விந்தணு ஒவ்வொருமுறை உறவு கொள்ளும்போதும் அவனிடமிருந்து 2-4மிலி
விந்து நீர் வெளிப்படுகிறது இந்த விந்து நீரில் உள்ள விந்தணு 0.5 மி.மீ
நீளம் உடையது. இதோ விந்தணுவின் படத்தை சற்று கவனியுங்கள்
இந்த ஆணுடைய விந்துநீரிலிருந்து வெளிப்படும் விந்தணு பெண்ணுடைய சினைப்
பையிலிருந்து வெளியாகும் சினை முட்டையுடன் கூடுகிறது! ஆணுடைய விந்தணு
எவ்வாறு பெண்ணுடைய சினைமுட்டையுடன் கூடுகிறது என்ற நிகழ்ச்சியை படமாக
விளக்கியுள்ளேன் கீழே உள்ளதை பாருங்கள்
பெண்ணுடைய சினைப் பையிலிருந்து சினைமுட்டை வெளிப்பட்ட நேரம் முதல்,
சினைப்பாதையில் நகர்ந்து வர 2 நாட்கள் ஆகும். மேலும் சினைமுட்டை வெளிவந்து
24 மணி நேரத்திற்குள் விந்தணு சினைமுட்டையை அடைய வேண்டும். இவ்வாறு
நுழையும் விந்தணு கருப்பையில் 10 நாட்கள் வரை உயிர்வாழும் என்றும் மேலும்
இந்த ஆணின் விந்தணு 24-48 மணி நேரத்தில் ஒரு பெண்ணை கருத்தரிக்கச் செய்யும்
சக்தியை இழந்து விடுகிறது என்றும் அதே போன்று பெண்ணின் சினைமுட்டையின்
உயிர்க்காலம் ஒருநாள் அதாவது 24 மணி நேரம் என்றும் ஆய்வாளர்கள்
கூறுகிறார்கள்.
இதன் மூலம் நாம் விளங்குவது என்னவெனில் ஆணுடைய விந்தணு பெண்ணுடைய
சினைமுட்டையுடன் 24 மணிநேரத்திற்குள் ஒன்றுடன் ஒன்று கோர்த்துக்கொண்டு
கருத்தரிக்க வைக்க வேண்டும் என்பதே!
ஆணுடைய விந்தணுவிலிருந்து 23 குரோமோசோம்களும் பெண்ணின்
சினைமுட்டையிலிருந்து 23 குரோமோசோம்களும் ஒன்றாக இணைந்து செல் அமைப்பாக
உருவாகிறது இந்த செல் அமைப்பு உப்பு போன்று காணப்படுகிறது. இதுதான்
FERTILIZED EGG அதாவது கருமுட்டையாகும்
கருமுட்டை கர்பப்பை குழாய் எனப்படும் FALLOPIAN TUBE வழியாக கருப்பையில்
சென்றடைகிறது பின்னர் கர்ப்பப் பை படிப்படியாக வளர ஆரம்பிக்கிறது இந்த
வளர்ச்சியை கீழே உள்ள படத்தின் உதவியால் காண
இயலும்!
பின்னர் அந்த தசைப் பிண்டத்தை எலும்புகளாகவும் ஆக்கினோம்! பின்னர் அவ்வெலும்புகளுக்கு மாமிசத்தை அணிவிதோம்!
மேற்கண்ட அருள்மறை வசனம் கூறும் செய்தியை ஆராய்வோம்
ஒரு பெண் கர்ப்பம்தரித்த 21 அல்லது 24-ம் நாளிலிருந்து அந்த கருவுக்குள்
இதயத்துடிப்பு நிகழ்கிறது இதன்மூலமாக அந்த கருவுக்குள் இரத்த ஒட்ட
நிகழ்ச்சி நடைபெறுகிறது
கர்பம்தரித்த 28ம் நாள் முதல் அந்த கருவுக்குள் கை, கால்கள், காதுகள் மற்றும் முதுகுத்தண்டுவடம் ஆகியன துளிர்விடுகின்றன.
கர்ப்பம் தரித்த 30ம் நாள் கருவுக்குள் மூளை துளிர்விடுகிறது.
கர்ப்பம் தரித்த 35ம் நாள் விரல்கள் துளிர்விடுகின்றன
கர்ப்பம் தரித்த 40ம் நாள் மூளை செயல்பட ஆரம்பிக்கிறது
கருவுற்ற 6-வது வாரம் முதல் கருவின் மூளை கருவை தன் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவருகிறது.
கருவுற்ற 7-வது வாரம் முதல் பற்களின் தாடைகள் துளிர்விடுகின்றன மேலும் பால்பற்கள் முளைப்பதற்கான அறிகுறிகள் தென்படுகின்றன.
பின்னர் நாம் அதனை வேறு ஒரு படைப்பாக் (மனிதனாகச்) செய்தோம்
மேற்கண்ட அருள்மறை வசனம் கூறும் செய்தியை ஆராய்வோம்
கருவுற்ற 8-வது வாரத்தில் கரு மனித உருவத்தில் தென்படுகிறது மேலும் அனைத்து அங்கங்களும் உறுப்புக்களும் கண்டறியப்படுகிறது
கருவுற்ற 9-வது வாரத்தில் குழந்தையின் கை விரல்களில் ரேகைகள் படர ஆரம்பிக்கிறது பின்னர் குழந்தை தன் விரல்களை அசைக்க முற்படுகிறது
கருவுற்ற 10-வது வாரத்தில் குழந்தை கர்ப்பப் பையில் உள்ள அமிலங்களை பருக முற்படுகிறது
கருவுற்ற 11-வது வாரத்தில் குழந்தை உறங்க கற்றுக் கொள்கிறது பிறகு விழிக்க
கற்றுக்கொள்கிறது இறுதியாக சிறுநீர் கூட கழிகக் ஆரம்பிக்கிறது. அதே சமயம்
சுவாச உறுப்புகளை இயக்குவதற்காகவும் அதன் வளர்ச்சிக்காகவும் இந்த குழந்தை
பயிற்சி எடுக்கிறது!
கருவுற்ற 13-வது வாரத்தில் குழந்தையின் மர்மஸ்தான உறுப்புகள் தெரிய
ஆரம்பிக்கின்றன மேலும் நாக்கில் ருசியை அறியக்கூடிய நரம்புகள் வேலை
செய்கின்றன.
கருவுற்ற 14-வது வாரத்தில் குழந்தையின் செவிப்புலன்கள் வேலை செய்ய ஆரம்பிக்கின்றது.
கருவுற்ற 17-வது வாரத்தில் கண்களில் அசைவுகள் தென்படுகின்றன. குழந்தை கனவு
காண முற்படுவதாக அறிவியல் வல்லுனர்கள் தங்கள் ஆய்வில் கூறுகிறார்கள்.
கருவுற்ற 20-வது வாரத்தில் குழந்தை வெளிச்சத்தை உணர ஆரம்பிக்கிறது தாயின்
வயிற்றினுள் ஏற்படக்கூடிய சப்தங்களை காது கொடுத்து கேட்கிறது!
கருவுற்ற 5-வது மாதத்தில் குழந்தையின் அசைவுகள் நன்றாக வெளிப்படுகின்றது.
கருவுற்ற 6-வது மாதத்தில் வியர்வை சுரப்பிகள் முளைக்க ஆரம்பிக்கின்றன.
மேலும் உடலில் முடிகள் முளைப் பதற்கான செயல்பாடுகள் நடைபெறுகின்றன
கருவுற்ற 7-வது மாதத்தில் விழிகள் திறந்து மூடுகிறது, குழந்தை
சுற்றுமுற்றும் பார்க்கிறது, சுவையை அறிகிறது, தாயின் கர்ப்பப் பையை
மெதுவாக தொட்டு உணருகிறது.
கருவுற்ற 8-வது மாதத்தில் குழந்தையின் மிருதுவான தோல் சருமங்கள் சற்று மேம்பட ஆரம்பிக்கிறது.
கருவுற்ற 9-வது மாதம் அதாவது 266 அல்லது 294ம் நாள் தன் கருவளர்ச்சியை
முழுவதுமாக அடைந்து குழந்தை இந்த உலகில் காலடி எடுத்துவைக்க
தயாராகிவிடுகிறது.
மேலே தாங்கள் கண்ட அனைத்து அறிவியல் அதிசயங்சளையும் கீழ்கண்ட அருள்மறை
குர்ஆனின் வசனம் மெய்ப்படுத்துகிறதா? என்பதை சற்று யோசித்துப்பாருங்கள்
“நிச்சயமாக (முதல்) மனிதனை களிமண்ணின் மூலச்சத்திலிருந்து படைத்தோம்.
பின்னர், (அதற்கான உள்ள) ஒரு பாதுகாப்பான இடத்தில் (கர்ப்பப்பையில்) நாம்
அவனை இந்திரியத் துளியாக்கினோம். பின்னர் அந்த இந்திரியத் துளியை ‘அலக்’
என்ற நிலையில் ஆக்கினோம்! பின்னர் அலக் என்பதை ஒரு தசைப்பிண்டமாக்கினோம்!
பின்னர் அந்த தசைப் பிண்டத்தை எலும்புகளாகவும் ஆக்கினோம்! பின்னர்
அவ்வெலும்புகளுக்கு மாமிசத்தை அணிவிதோம்! பின்னர் நாம் அதனை வேறு ஒரு
படைப்பாக் (மனிதனாகச்) செய்தோம்! (இவ்வாறு படைத்தவனாகிய) அல்லாஹ் பெரும்
பாக்கியமுடையவன் (படைப்பாளர்களில் எல்லாம்) மிக அழகான படைப்பாளன்.
(அல்குர்ஆன் 23:12-14)
நீங்கள் உண்மையாளர்களாக இருந்தால் இஸ்லாத்திற்குள் வாருங்கள் அல்லாஹ் உங்களுக்கு அருள்புரிவானாக!
குறிப்பு – பல்வேறு இணைதளங்கள் இந்த கட்டுரைக்கு உதவின நன்றிகள் பல!
அறிவையும் சிந்திக்கும் ஆற்றலையும் கொடுத்தவன் அல்லாஹ் அவனுக்கே புகழனைத்தும்!
அல்ஹம்துலில்லாஹ்! சுப்ஹானல்லாஹ்! அல்லாஹு அக்பர்.
It's Really True...Thanks for Your Facts....
பதிலளிநீக்கு