உலகின் பணக்கார நாடாக கத்தார்: போர்பஸ் பத்திரிகை செய்தி
தமிழ் |
துபாய்: உலகின் பணக்கார நாடாக கத்தார் அறிவிக்கப்பட்டுள்ளதாக அமெரிக்காவின் போர்பஸ் பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது. அமெரிக்காவின் முன்னணி பத்திரிகையான போர்பஸ் பத்திரிகை, உலகின் பணக்கார நாடுகள் என 15 நாடுகளின் பட்டியலை வெளியிட்டுள்ளது.
இவற்றில் மொத்த உள்நாட்டு உற்பத்தி திறன் (ஜி.டிபி.) மற்றும் கச்சா எண்ணெய் உற்பத்தி, ஏற்றுமதியில் முன்னிலை வகிக்கும் நாடுகளில் எண்ணெய் வளம் மிக்க வளைகுடா நாடுகளுள் ஒன்றான கத்தார் , வெறும் 1.7 மில்லியன் மக்கள் தொகையினை கொண்டுள்ளது. இதன்படி இந்நாட்டின் ஜி.டிபி.யானது கடந்த ஆண்டு 2010-ல் 88, 000 மில்லியன் டாலராக உயர்ந்துள்ளது. இதனால் உலகின் பணக்கார நாடாக கத்தார் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொடர்ந்து லக்சம்பர்க் இரண்டாவது இடத்திலும், சிங்கப்பூர் மூன்றாம் இடத்திலும், யு.ஏ.இ, மற்றும் குவைத் உள்ளிட்ட நாடுகள் முறையே நான்காம், ஐந்தாம் இடத்திலும் உள்ளன.
by
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக