குழந்தையின்மைக்கு காரணம் ஆகும் high heels.
திருமணமாகி,
12 ஆண்டுகள் குழந்தையின்மையால், புகுந்த வீட்டாரின் குத்தல் பேச்சுக்கு
ஆளாகி, மனமொடிந்திருந்தாள் என் தோழி. அவள் கணவனிடம் எந்தக் குறையும் இல்லை
என்று மருத்துவர்கள் கூறி விட்டனர். குழந்தை வரம் வேண்டி, அவள் போகாத
கோவிலும் இல்லை, செய்யாத மருத்துவப் பரிசோதனையும் இல்லை. நாங்கள் படிக்கும்
காலத்தில், நாளொரு சிரிப்பும், பொழுதொரு கலகலப்புமாக இருந்த அவள், மெல்ல
மெல்ல நடைப்பிணமாகி வருவதைக் காண சகிக்காமல், அவளை மிகவும் வற்புறுத்தி,
ஒரு பெண் மருத்துவரிடம் கடைசி முயற்சியாக அழைத்துச் சென்றேன்.
மருத்துவரின் அறைக்குள் நானும், என் தோழியும் நுழைந்தவுடன் நலம் விசாரித்து, இருக்கையில் எங்களை அமரச் செய்து, அவர் , என் தோழியை பார்த்துக் கேட்ட முதல் கேள்வி, என்னை அதிரச் செய்து விட்டது. "எத்தனை ஆண்டுகளாக உங்களுக்கு குழந்தை இல்லை?' என்பது தான் அது.
என் தோழியைப் பற்றி நான் எதுவும் கூறாமலே, அவள் குறையை எப்படிக் கண்டுபிடித்தார் என்று ஆச்சரியமாகக் கேட்டேன்.
"உன் தோழி, என் அறைக்குள் நடந்து வரும் போதே கவனித்தேன். குதியுயர்ந்த செருப்புகளை, ஸ்டைலாக அணிந்து வந்தார். இப்படிப்பட்ட செருப்புக்களை அணியும் போது, பாதங்களின் முன் பகுதிக்கு அழுத்தமும், இடுப்பு மற்றும் வயிற்றுப் பகுதியில் சில மாற்றங்களும் ஏற்படுகின்றன. நீண்ட காலமாக இதே போன்று நடக்கும் போது, கர்ப்பப்பை தன் இயல்பான இடத்தை விட்டு, இசகுபிசகாக நகர்வதும், குழந்தையின்மைக்கு சில நேரங்களில் காரணமாகிறது. இதை சரி செய்வது, அவ்வளவு சுலபமல்ல என்றாலும், முயற்சிக்கிறேன்...' என்று தன், "ட்ரீட்மென்ட்டை' அன்றைக்கே துவங்கி விட்டார். குற்ற உணர்வுடன் வெளியே வந்த என் தோழி செய்த முதல் காரியம் என்ன தெரியுமா? 1,800 ரூபாய் மதிப்புள்ள செருப்புக்களை குப்பையில் வீசிவிட்டு, வெறும் கால்களுடனே வீறு நடைபோட்டு வந்ததுதான்.
இயல்பான நம் உயரத்தை அதிகப்படுத்திக் காட்டுவதை விட, குடும்ப நிம்மதி தான் முக்கியம் என்பதை அவள் உணர்ந்து விட்டாள். குதிகால் செருப்பு போடும் நாகரிகத் தோழிகளே... நீங்களும் உஷார்!

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக