சமையலுக்கு பயன்படும் ப்ரெஷர் குக்கர் எப்படி இயங்குகிறது தெரியுமா?
உங்கள்வீட்டில் சமையலுக்குப் பயன்படுகிற பிரஷர் குக்கரைப் பற் றி.
ரொம்ப எளிமையான, அதே சமயம் ரொம்ப ரொம்ப உபயோக மான பாத்திரம் இது.பிரஷர்
குக்க ரின் வேலை அரிசி, பருப்பு, காய் கறிகளையெல்லாம் வேகவைக்க வேண்டும்.
அதுக்காக நீராவியை , அதாவது வாயு வடிவத்தில் இரு க்கிற தண்ணீரைப்
பயன்படுத்துகி றது குக்கர். உணவுப் பொருள்க ளை வேகவைக்கிறதுக்கு நமக்கு
குக்கர் அவசியமே இல்லை. ஒரு சாதாரணப் பாத்திரத்தில் தண்ணீ ர் ஊற்றி, அதில்
அரிசியையோ, பருப்பையோ போட்டுச் சுட வைத் தாலே போதும், எல்லாம் தானாக
வெந்துவிடும். ஆனாலும், பெரு ம்பாலான வீடுகளில் குக்கர் இருக்கிறது. ஏன்?இதுக்கு இரண்டு கார ணம். முதலில் மற்ற பாத்திரங்
களைவிட குக்கர் ரொம்ப வேகமாகச்
செயல்படுகிறது, இத னால் சமைக்கி றவர்களுக்கு நிறைய நேர ம் மிச்சமாகி
றது.அடுத்த காரணம், குக்க ரில் சமையல் செய்யும்போது நாம் அதுக் குப்
பயன்படு த்துகிற எரிபொருளும் குறை வு. சமையல் சிக்கனமாக முடிந்து விடுகி
றது. குக்கர் எப்படி இயங்குகிறது என்று பார்ப்போம். குக்கரின் பாகங்களைக்
கவனி க்கலாம். ஒரு பெரிய பாத்திரம், அதுக்கு ள்ளே சில சின்ன ப் பாத்திர
ங்கள், மேலே ஒரு மூடி, அதுக்கு ஒரு கைப்பிடி, அதன் தலையில் ஒரு ‘வெயிட்’,
அப்புறம் ‘காஸ் கட்’ என்று சொல்லப்படுகிற ரப்பர் வளையம்.
இந்தப் பெரியபாத்திரத்தில்தான் நாம் தண்ணீர் ஊற்றப்போகிறோம்.
அந்தத் தண்ணீர்தான் சூடாகி, நீராவியாக மாறுகிறது. உள்ளே சின்னப்
பாத்திரங்களில் வைத் திருக்கிற அரிசி, பருப்பு, காய்க றி, இட்லியைச்
சூடாக்கிச் சமை க்கிறது.சில குக்கர்களில் இந்தப் பாத் திரத்தின் கீழ்ப்
பகுதியில் மட்டும் வேறு உலோகம் ஒன் றைப் பூசியிருப்பார்கள். ‘காப்பர்
பாட்டம்’ என்று கேள்விப்பட்டிரு ப்பீர்களே, பாத்திரத்துக்குள்ளே நெருப்பு
சீராகப் பரவுவதற்கு இது உதவி செய்கிறது.அடுத்து, அந்த மூடியைக் கவனித்துப்
பாருங்கள், அதோட விளிம்புகள் அந்தப் பெரிய பாத்திரத்தில் கச்சிதமாகப்
பொருந்துகிற மாதிரி வடிவமை த்திருப்பார்கள். அதில் ரப்பர் வளையத்தைப்
போட்டு மூடுவார்கள். மூடிதான்
ஏற்கெனவே கச்சிதமாகப் பொருந் துகிறதே, அப்புறம் எ துக்கு ரப்பர் வளையம்
?என்னதான் மூடியை க் கச்சிதமாகத் தயாரி த்தாலும், அழுத்தி மூடினாலும்,
அதில் ஆங்காங்கே சின்ன இடை வெளிகள் இரு க்கும். குக்கருக்கு உள் ளே
இருக்கிற தண்ணீர் சூடாகி, நீராவியாக மாறும்போது வெளி யே வந்துவிடும். அதைத்
தடுக்கிற துக்குத்தான் ரப்பர் வளையம். அது இந்த இடை வெளியைக் கச்சிதமாக
அடைத்துவிடும். வழக்கமான பாத்திரங்க ளுக்கும் குக்கரு க்கும் உள்ள
முக்கியமான வித்தியாசம் இது. மற்ற பாத்திரங்களில் தண்ணீர் சூடாகும்போது அது
மெல்ல ஆவியாகி வெளியேறி
விடும், உணவுப் பொருள்கள் வேக அதிக நேர மாகும். ஆனால் குக்கரில், நீராவி
உள்ளேயே சுற்றிச் சுற்றி வருகிறது. அதனால் அங்கே இருக்கிற உணவுப் பொருள்கள்
வேகமாகச் சூடேறுகின்றன, சுலபமாக வேகின்றன.அடுத்து, இப்படி ஒரு
பாத்திரத்துக்கு ள்ளே நீராவி உருவாகி அங்கேயே அடைபட்டுக் கிடக்கிறதால்,
அதோட அழுத்தம் அதிகரிக்கும், அதனால் தண்ணீரின் கொதி நிலையும் அதிகரிக்கும்.
இதுவும் உணவுப் பொருள்கள் வேகமாக வேக ஒரு முக்கிய மான காரணம். ‘பிரஷர்’
குக்கர் என்ற பெயருக்குக் காரணம் புரிகிற தா?
ஒரு ‘வெயிட்’ இருக்கே, அது எதுக்கு?
பிரஷர் குக்கரில் மற்ற எல்லாப்
பாக ங்களையும்விட மிக முக்கிய மான து, இந்த ‘வெயிட்’தான். அதைப் பற் றிக்
கொஞ்சம் விளக்க மாகப் பேசு வோம்.குக்கருக்குள்ளே தண்ணீர் ஆவியாகிறது, ஒரே
இடத்தில் அடை பட்டுக் கிடக்கிறதால் அதோட அழு த்தம் கொஞ்சம் கொஞ்சமாக அதி
கரிக்கிறது என்று பார்த்தோம். ஒரு கட்டத்தில் குக்கர் பாத்திரத்தால் அந்த
அழுத்தத்தைத் தாங்க முடி யாது. அது அப்படியே வெடித்துச் சிதறிவிடும்.இதைத்
தவிர்க் கிறதுக்குதான், ‘வெயிட்’ என்ற கனமான இரும்புக் குண்டைக் குக்க ரின்
மூடியில் பொருத்துகிறார்கள். குக் கருக்குள்ளே அழுத்தம் ஒரு குறிப்பிட்ட
அளவைத் தாண்டிப் போய்விடாமல் இது பார்த்துக் கொள்கிறது. குக்கர் மூடி யில்
ஒரு சின்ன ஓட்டை போட்டு, அதி ல் குழாய் ஒன் றை வைத்திருப்பார்கள்.
அங்கேதான் ‘வெயிட்’டைப் போடுகி றோம், அதாவது, அந்தச் சின்ன ஓட் டையை
மூடிவிடுகி றோம். இதனால், குக்கர் முழுமையாக மூடப்படுகிறது. அதுக்கப்புறம்
அடுப்பைப் பற்ற வைக்கி றோம், அதன் மேல் குக்கரை வைக்கி றோம், இந்தச்
சூட்டினால் அந்த குக்கருக்குள்ளே இருக்கிற தண்ணீர் ஆவியாகும். நீராவி உரு
வாகும். அதோட அழுத்தம் அதிகரிக்கும். அந்த நீராவி இந்தச் சின் ன ஓட்டை
வழியாக வெளியே வரப் பார்க்கும், ஆனால் ‘வெயிட்’ அதை வெளியே வரவிடாது.கொஞ்ச
நேரத்தில் குக்கருக்குள்ளே அழுத்தம்
மேலும் மேலும் அதிகரிக்க, நீராவிக்கு கூடு தல் பலம் வந்துவிடும். இந்த
வெயிட்டை மேலே தள்ளி ட்டு வெளியேறும். இதைத் தான் ‘விசில்’ என்கிறோம். இப்ப
டிக் கொஞ்சம் நீராவி வெளியே போனதும், குக் கருக்குள்ளே அழுத்தம் குறையும்,
உடனே சட்டென் று வெயிட் கீழே விழுந்து, ஓட்டையை மூடிவிடும். மறுபடி குக்
கருக்குள் அழுத்தம் அதிகரி க்கும், மறுபடி வெயிட் மேலே போய் விசில்
அடிக்கும், மறுபடி கீழே விழும், இப்படி மாறி மாறி நான்கை ந்து விசில்சத்தம்
கேட்ட தும் சமையல் முடிந்தது என்று கணக்கு. இப்போது
புரிகிறதா, ‘வெ யிட்’ மட்டும் இல்லை என்றால், பிரஷர் குக்கர் வெறும்
காலிடப்பா. அதைப் பயனுள்ள சமையல் பாத்திர மாக மாற்றுவது இந்தச் சின்ன
இரும்புக் குண்டு தான்!
சமையல் முடிந்தது. குக்கரைத் திறக்க லாமா?
கொஞ்சம்
பொறுங்கள். குக்கருக்குள்ளே ஏகப்பட்ட நீராவி அடைந் து கிடக்கிறது.
அதெல்லாம் கொஞ்சம் அடங்கட்டும், வெயிட்டைத் திறந்து அழுத்தத்தைக்
குறைத்துவிட்டு கொஞ்ச நேரம் கழித்து தான் திறக்க வேண்டும். இல்லை என்றால்
அத்தனை நீராவியும் ‘என்னை ஏன் அடைச்சுவெச்சீங்க?’ என்று நம் மேல்
பாய்ந்துவிடும்.
இணையங்களில் படித்ததை இதமுடனே பகிர்கிறோம்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக